இரண்டாவது இந்தி எதிர்ப்பு போரை பற்றி பெரியார் பேசியவற்றை எல்லாம் பெரியாரியர்கள் இப்போது பேசவோ,வெளியிடவோ தயாராக இல்லை.1948 லேயே,இந்தி வேண்டவே வேண்டாம் என்பது நோக்கமல்ல,அதை சில காரியத்துக்கு கட்டாயமாக்க வேண்டுமானால் ஆக்குங்கள் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார் ஈவேரா..(1)
அதன் பிறகு 1962 - 1967 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கு முற்று முழுதாக எதிராகவே அவர் இருந்தார்.அன்று இந்திக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்களை விட ஒரு மடங்கு மேலே பேசிக் கொண்டிருந்தார் என்பதே எதார்த்தம்.(2)
தேவநேயப் பாவாணர் மற்றும் பெருஞ்சித்திரனார் தலைமையில் வெளியான "தென்மொழி" இதழ் ஈவேராவுக்கு வலிமையான மறுப்புகளை எழுதி வந்தது.
|| இந்தி வந்தால் என்ன கெட்டுவிடும்? 13 மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது நீ மட்டும் எதிர்த்தால் எப்படி? || - என்று கேட்டார் ஈவேரா.(3)
இதை கடுமையாக கண்டித்து மறுப்பு எழுதினார் புலவர் வி.பொ.பழனிவேலன்.பெரியாரை தமிழின தலைவர் என்பவர்கள் மூடர்கள் என்று கண்டித்தார்.
அது மட்டுமல்ல நெடுமாறன் அவர்களின் "குறிஞ்சி" பொங்கல் சிறப்பு மலரில்(1965) பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.👇 (4)
இந்த போராட்டம் காங்கிரஸ்ஸின் வலிமையை குறைக்க நடக்கும் போராட்டம் என்பதாக வடக்கே பார்க்கிறார்கள் என்று மெல்லமாகத்தான் காமராஜரே சொன்னார்.ஆனால் ஈவேராவோ இது காலிகளின் போராட்டம்,இதை ஒடுக்கத் தவறியது அரசு என்று பேசுகிறார்.(5)
ராஜாஜி இந்தியை எதிர்த்து 'ஒற்றுமைக்கு ஆங்கிலம்தான் வழி' என்று எழுதினார்.நீங்கள் செய்வது என் உள்ளத்திலேயே பிரிவினை உணர்ச்சியை தூண்டி விடக்கூடியதாக உள்ளது என்று சொன்னார்.அதற்கு ஈவேரா விடுதலையில் கடுமையாக ராஜாஜியை ஆதரிப்போர்களை திட்டி எழுதினார்.(6)
|| பதவிக்காக பாப்பான் காலில் விழ ஒரு கூட்டம் அணியமாகிவிட்டதால் இத்தகையை இந்தி எதிர்ப்பு செய்கைகள் வளந்து கொண்டே போகின்றன ||
- என்று ராஜாஜி காலில் விழ தயாராக ஒரு கூட்டம் என தமிழ்,திராவிட ஆதரவாளர்களை விமர்சித்தார் அப்போது.அதற்கு தென்மொழி எழுதிய மறுப்பு யாதென்றால்..👇(7)
உச்ச கட்டதுக்கு கோபமான ஈவேரா, "தேர்தலை பற்றி கவலைப்படாதீர்கள் சுதந்திரா கட்சி,கண்ணீர்த்துளி(திமுக) இரண்டையும் சட்ட விரோதம் என்று தடை செய்யுங்கள்.எல்லா செய்தி தாள்களையும் தடை செய்யுங்கள்,இந்தி எதிர்ப்பு பற்றி யாரையும் பேச விடாமல் வாய்ப்பூட்டு சட்டம் போடுங்கள்" என்றார்.(8)
"பெரியார் அணைந்த தீப்பந்தம்,சப்பிய பனங்கொட்டை,துப்பிய வெற்றிலை" என்று தென்மொழி இதழ் மறுப்பெழுதியது இதற்கு.கடைசியாக இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கலவரமாகி காவலர்கள் எரியூட்டு,மாணவர்கள் துப்பாக்கி சூடு,தற்கொலைகள் என்று நாடே குலுங்கி முடிந்தது..(9)
மாணவர்களின் கிளர்ச்சிகள்,வன்முறைகள் ஆகியவற்றுக்கும் எங்களுக்கும் ஓட்டும் இல்லை உறவும் இல்லை.இந்த போராட்டத்தை பெரியவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் ஒதுங்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார் அண்ணாத்துரை.
இதற்கு ஈவேரா என்ன எழுதினார் தெரியுமா? (10)
|| இந்தி ஆர்பாட்டக்காரர்களை அடக்க,எரி நெய்யும்,தீப்பெட்டியும்,கத்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என கழகத் தொண்டர்களுக்கு நான் கட்டளையிட்ட பின்தான் போராட்டம் அஞ்சி அடங்கியது என்று || - #விடுதலை (1965)
(11)
அதுமட்டுமல்ல,தமிழுணர்ச்சி குறித்து அவர் சொன்ன கருத்து இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது.(12)👇
இதையெல்லாம் இன்று பொது விவாதத்துக்கு ஏன் உட்படுத்த மறுக்கிறார்கள்? அன்றே சொன்னார் பெரியார் என்பவர்கள்,1949 - 1967 இதற்கிடைப்பட்ட பெரியாரை இருட்டடிப்பு செய்பவர்களாகவே இருப்பதன் நோக்கமென்ன? (13)
காரணம்,இவர்கள் பேசுகிற எல்லா கருத்தியலுக்கும் எதிராகவே இருந்தார் அவர்.அதிலேயே அவர் பேசிய எல்லாமே களத்தில் தோற்றுப் போனது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.(14)
திமுக என்கிற கட்சி தமிழக அரசியலில் எழுந்ததே பெரியார் எதிர்ப்பில்தான்,அவர்கள் வென்றதே பெரியாரால் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ்ஸை எதிர்த்துதான்,அதுவும் ராஜாஜி துணையோடு என்பதுதான் வரலாறு.(15)
டாட்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.