தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

Apr 17, 2022, 10 tweets

பழந்தமிழர்களின் #கட்டுமானவியல் தொழில்நுட்பம்!

சங்க காலத்தில் வானத்தைத் தொடும் வனப்புறு அரண்மனைகள், உயர்ந்த மதிற்சுவர்கள், காற்று உள்ளே வர சன்னல்கள் பொருத்தப்பட்ட இல்லங்கள், குழாய்களை மண்ணுக்குள் புதைத்து நீர்கொண்டு செல்லும் அமைப்புகள் இருந்தமையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.

#அரண்மனைகள்
அக்காலத்தே அரண்மனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பத்துப்பாட்டில் ஒன்றாய #நெடுநல்வாடை வழிக் காண்போம்.

க) மனை அமைப்பு:

#அரண்மனை அமைக்கும் முன், நல்லதொரு நாளில் நல்ல நேரத்தில் மனைநூலில் கண்டவாறு மனையைப் பிழை ஏதும் வாராமல் நூலிட்டு அளந்து, அரண்மனைக்குத் திருமுறைச் சாத்துச் செய்வர் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் புலப்படுத்தும்.

அமையப்போவது #அரண்மனை ஆதலின், அம் மனைக்கண் #கொற்றவை முதலிய தெய்வங்கள் அமைத்தற்குரிய இடங்களையும் குறித்துக் கொண்டனர். இதனைத் "தெய்வம் நோக்கி" என்ற தொடர் உணர்த்தும்.

பேரரசன் வாழ்தற்கு ஒப்ப மனை வகுக்கப்பட்டது என்பதும் அரண்மனை மதிற்சுவர், மன்றமும், நாளோலக்க மண்டபமும் படைவீடும்...

கருவூலமும், இன்னபிறவும் உள்ளடக்கியதாக இருந்தது என்பதும் பின்வரும் அடிகளால் அறியலாம்.

உ) அரண்மனை நெடுநிலை:

அரண்மனைகளின் மரக்கதவுகள் பருத்த இரும்பாலான பட்டைகளாலும், ஆணிகளாலும் இணைக்கப்பட்டிருந்தன. செவ்வரக்கு கொண்டு செந்நிறமூட்டப்பட்டிருந்தன.

மாடத்து நெடிய நிலைகளில் மேற்கூறியவாறு செய்யப்பட்ட இரு கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன இவற்றை பின்வரும் அடிகள் வழி அறியக்கூடும்.

செவ்வரக்கு கொண்டு செந்நிறம் பூசப் பெற்ற பலகை என்னும் பொருள் கொண்டது.

மரத்தாலான கதவுகள் போன்றவற்றைச் செவ்வரக்கு கொண்டு செந்நிறமூட்டி அழகுபடுத்துதல்...

அக்காலத் தொழில் நுட்பம் போலும். இது இக்கால வார்னிசு பூசுதலை ஒக்குமெனலாம்.

கதவுகளில் குவளை மலர் உரு செதுக்கப்பட்டிருந்தது. கதவைச்
சார்த்தற்கும், திறத்தற்கும், வேண்டிப் புதுமை தோன்றச் செய்த கைப்பிடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கைத்தொழில் வல்ல தச்சனின் நுண் திறத்தால் #தாழ்க்கோல் நன்கு பொருந்துமாறு அமைக்கப்பட்டிருந்தது என்பனவற்றைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

இது அக்காலத்துத் தச்சுத் தொழில்நுட்பம் இக்காலத்தைய தொழில்நுட்பத்திற்கு ஒப்புடையதே என்பதை உணர்த்துவது.

வெற்றி குறித்து உயர்த்திய கொடிகளோடு, யானைகள் புகுதற்கு உகந்த உயரமுடையனவாக "அரண்மனை வாயில்கள்" அமைக்கப்பட்டிருந்தன என்பதை பின்வரும் அடி புலப்படுத்தும்.

தமிழ் விழாக்கள் நடைபெற்ற தஞ்சை, மதுரை, பூம்புகார் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்ட நெடிய தோரண நுழைவாயில்கள், மேற்காணும் அடிகளின் தாக்கமாகக் கூட இருக்கலாம்.

- நன்று.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling