அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 5, 2022, 8 tweets

தெலுங்குக் கவிஞர் ஆருத்ரா, கவிஞர் கண்ணதாசன் இருவரும் சம காலத்தவர். அவர் ஒரு விழாவில் பேசியது:
நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார், நான் சொல்லுவேன். அதே போல

நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்து கொள்வேன். அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா?

#லட்சுமிகல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய #ராமன்_எத்தனை_ராமனடி என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப் படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்,

இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பிய

போது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டு இருப்பான். அப்போது இலக்குவன் அண்ணன் ராமனைப் பார்த்து ஏனண்ணா இது என்ன, நீங்கள்தான் ஆணையிட்டீர்கள். இப்போது அழுது கொண்டிருப்பதென்ன என்று கேட்க,
ராமன் சொல்லியது, “ஆணையிட்டது கோசலராமன், அழுது கொண்டிருப்பது சீதாராமன்” என்று.

இப்பொறிதான் இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.

கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்..
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்..
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்..
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் ..

தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்..
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்..
வீரம் என்னும் வில்லை

ஏந்தும் கோதண்டராமன்..
வெற்றி என்று போர் முடிக்கும்
ஸ்ரீஜெயராமன்.

வம்சத்துக்கொருவன் ரகுராமன்.
மதங்களை இணைக்கும் சிவராமன்.
மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்.
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்..
ராமஜெயம் ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்..

என ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!

ஜெய் ஸ்ரீ ராம்!

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling