தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

May 11, 2022, 16 tweets

சங்க கால உண்கலன்கள்...!

சங்க காலத்தில் உணவுப் பொருள்களைச் சேகரிக்கவும், சேமித்து வைக்கவும், சமைப்பதற்கும், உண்பதற்கும் பல்வேறு புழங்கு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலை, ஓலை, மூங்கில், மண் பாத்திரங்கள் முதலான சாதாரண கலன்களும்...

இரும்பு, வெள்ளி, செம்பு, பொன் பாத்திரங்கள் முதலான விலையுயர்ந்த கலன்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன.

புழங்கு பொருள்கள் பண்பாட்டின் காலக் கண்ணாடியாகவும், அதன் வளர்ச்சியைக் காட்டும் அளவு கோலாகவும் உள்ளன.

அறிதிறன், தொழில்நுட்பத் திறன், உலகப் பார்வை முதலானவற்றைப் பூடகமாகக் காட்டும் தன்மையையும் இவை கொண்டுள்ளன.

தொழிற் பாகுபாடுகள், வேலைப் பிரிவினை, சமூகப் படிநிலை, வாழ்வியல் வேறுபாடுகள் முதலானவற்றையும் புழங்கு பொருள்கள் காட்டுகின்றன.

சங்க காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கைவினைக் குடிகள் இருந்துள்ளன.

கலம்செய் கோமாக்கள், கருங்கைக் கொல்லன், பொன் ஆபரணங்கள் செய்யும் கம்மியர், மணிகளில் துளையிடும் குயினர், சங்கு அறுப்போர், ஆடை நெய்வோர், கூடை முறம் கட்டுவோர், ஓவியம் வரையும் ஓவமாக்கள், அட்டிலில் உணவு சமைப்போர்...

வல்லோன், துணி வெளுக்கும் புலைத்தியர், தோல் பொருள்கள் செய்யும் காரோடர், மணிகள் சேகரிக்கும் ஏராளர், மனை வகுப்பார், மருத்துவர் எனப் பல வகையான தொழில் முறையாளர்கள் இருந்துள்ளனர்.

சங்க காலத்தில் இரும்பு, உலோகங்களின் பயன்பாடு வந்த பிறகு, கல் மணிகள் உற்பத்தி அதிகமான பிறகு கைவினைத் தொழில்கள் பெருகின.

கைவினைகளில் தேர்ச்சியும் பெருகியது. இப்பின்னணியில் புழங்கு பொருள்களும் பெருகின. உண்கலங்களும் பலவாறாக இருந்தன.

க) தும்பல், தேக்கு, வாழை இலைகள்:

உண்பதற்கு ஏற்றதாகப் பல்வேறு இலைகளை முடைந்தும், பதப்படுத்திக் கலன்களாக உருவாக்கியும் பயன்படுத்தியதில் முக்கியமானவை,

▪︎ யாண்மகள் தன் கணவனுக்கு #ஆம்பல் இலையில் திரண்ட சோற்றையும், இனிப்பு, புளிப்பு கலந்த பிரம்பின் பழத்தினைப் பெய்தும் இட்டாள்.

▪︎ நெகிழ்ந்த ஆம்பலின் அகன்ற இலையைத் தொன்னை போல் செய்து, அதில் கள்ளினை ஊற்றி மாந்திய உழவர்களைக் காட்டுகிறது பின்வரும் #புறப்பாடல்.

▪︎ தேக்கிலையில் உண்ணும் பழக்கம் சங்க காலத்தில் பரவலாக இருந்துள்ளது.

▪︎ விருந்து போன்ற முக்கியமான நிகழ்வுகளில் சங்கத் தமிழர் #வாழை இலையைப் பரிகலமாக்கிக் கொண்டனர்.

உ) பனை ஓலை:

பனை ஓலையை மடக்கி உட்குதிவாக்கித் திட, திரவ உணவு வகைகளை உண்ணுவதற்கு ஏற்றதாகச் செய்யப்பட்ட கலன் 'பனையோலைக் குடை' எனப்பட்டது.

இந்தக் குடையைச் செய்யும் முன்னர் பனை ஓலையை வெட்டிப் பதப்படுத்தியுள்ளதை #நற்றிணை பின்வருமாறு பதிவிடுகிறது.

பனையோலையைப் பகற்பொழுதில் வெட்டிக் காய வைத்தால், வெய்யிலில் காய்ந்து உடைந்துவிடும் என எண்ணி, மாலைப் பொழுதில் வெட்டி நிலவின் நிழலில் உலர்த்தினர் என்கிறது இந்த நற்றிணைப் பாடல்.

#பனை ஓலை கொண்டு எவ்வாறெல்லாம் #குடை எனக் கூடிய #உண்கலன் செய்தனர் என்பதைக் காண்போம்.

ங) மூங்கில்:

நல்ல அகலமான, தடிமனான, உள்ளீடற்ற மூங்கில் மரத்திலிருந்து ஒவ்வொரு கணுவின் கீழும் அறுத்துக் குப்பிகள் போல உருவாக்கப்பட்டன.

இந்த மூங்கில் கலன்கள் பலவாறு பயன்படுத்தப்பட்டன.

முல்லைத் திணை #ஆயர்கள் மூங்கில் குழாயில் இனிய புளிச்சோற்றை அடைத்து,

அதை இளைய எருதுகளின் கழுத்தில் கட்டி ஓட்டிச் சென்ற அழகிய காட்சி ஒன்றை #அகநானூறு பின்வருமாறு வர்ணிக்கிறது.

மூங்கில் குழாயில் மது வகைகளை விளையவிட்டும், தேன் சேகரித்தும், காட்டெருமைப் பாலினில் தோய்த்துத் தயிரிட்டும் உண்டனர்.

மூங்கில் உணவுப் பொருள்களை அதன் இயல்பான தன்மையுடன் பாதுகாக்கும் பண்புடையது என்பதைச் சங்ககால மக்கள் உணர்த்திருந்தனர்.

சங்க கால மக்கள் மூங்கில் குழாய்களில் நிரப்பி முற்ற வைத்த #நறவினை (மதுவகை) உண்டுவிட்டு,

வேங்கை மரம் வளர்ந்து நிற்கும் முற்றத்தில் நடந்த குரவைக் கூத்தினைக் கண்டு களித்துள்ளனர்.

- நன்று.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling