தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

May 20, 2022, 25 tweets

சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!

மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.

இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.

ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.

இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.

அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.

#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.

#பச்சூன் என்பது பசுமை மாறாத #ஊன் என்பதாகும். எவ்வகை மாற்றமும் அடையாத, சமைக்காத பச்சை இறைச்சியே #பச்சூன் என்கிறது #பெரும்பாணாற்றுப்படை.

காடுகளில் இயற்கையாக எழும் காட்டுத் தீயில் வேட்டையாடிய விலங்குகளை இட்டுப் புகை நாறாமல் வக்கி (வதக்கி),

அவற்றின் மயிர்போகச் சீவிவிட்டு இறைச்சியை உண்பதும், வழக்கமாய் இருந்தது என #மலைபடுகடாம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

இயற்கையாக ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீயே ஆதி மனிதனை #நெருப்பு கண்டுபிடிக்கவும், நெருப்பில் சுட்டுத் தின்னவும் தூண்டியது.

சங்க இலக்கியம் இதனை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளதை எண்ணி வியப்படைய வேண்டியிருக்கிறது.

ஆதி மனிதனின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு #நெருப்பு. இது சமைத்தலுக்கும், மற்ற நாகரிக வளர்ச்சிக்கும் வழிகோலியது.

குறிஞ்சித் திணை மக்கள் ஆதியில் உடும்பு, பன்றி, மான், காட்டுப் பறவைகள் முதலானவற்றைச் சுடும் பாறையின் மேல் போட்டு, இயற்கையான சூட்டில் வேகவைத்து உண்டனர்.

இதுவே சமைத்தலின் ஆரம்பம். இதன் பின்னரே நெருப்பில் சுட்டுத் திண்ணும் முறையை உருவாக்கினார்கள்.

'முயல்சுட்ட ஆயினும் தருகுவேம்' என்கிறது புறநானூறு (319: 8).

வேட்டையாடிக் கொண்டுவந்த உடும்பின் தசையைத் தீயில் இட்டுச் சுட்டுப் பகிர்ந்துண்டதையும் #புறநானூறு
பின்வருமாறு விளக்குகிறது.

#நள்ளி எனும் வேட்டைத் தலைவன் தன் காட்டில் பசியோடு வந்தவர்களுக்குத் தன் பெயரையும் ஊரையும் வெளிப்படுத்தாமல்,

தான் வேட்டையாடிய மான் இறைச்சியைத் தானே, தீயில் விரைவாகச் சுட்டுத் தந்து உண்ணச் செய்ததைப் புறநானூறு (150) வர்ணிக்கிறது.

அடுத்த கட்டத்தில் இறைச்சியை நெய்யில் இட்டுப் பொறித்தும், சூட்டுக்கோலில் கோர்த்துத் தீயில் சுட்டும் உண்டனர்.

நெய்யில் பொறித்த இறைச்சியை,

#வேவை (மலைபடு.168),
#வறை (பெரும்பாண்.132),
#வாட்டு (பெரும்பாண்.256), #செதுக்கண் (புறம்.261:9),
#குறை (பதிற்.12:16)

- என வழங்கினர்.

காயவைத்த உப்புக்கண்டத்தைச் சுட்டுத் தின்றனர் (பட்டின.63).

இதற்கடுத்து இறைச்சியை வேகவைத்துச் சமைத்தனர்.

இதனைச் #சூடு, #சூட்டு என்றனர் (புறம். 34; அகம். 237; பட்டின. 63; நற். 83; பெரும்பாண். 282)

#பிட்டங்கொற்றன் ஆண்ட குதிரை மலைநாட்டுக் குறவர்கள் பன்றி கிளரிய இடத்தில் விளைவித்த தினையோடு, பால் கலந்து, மான் கறியை இட்டு வேக வைத்து உண்டனர் (புறம்.168).

குறிஞ்சியில் இயற்கையாகப் பாறையில் வாட்டுவதும், தீயிட்டுச் சுடுவதும் முதன்மையானதாக இருந்தாலும், அதன் பின்னர் வேகவைத்தலும்...

சமைத்தலும் தோன்றியதைக் காணமுடிகிறது.

#உமணர்கள் காட்டு வழியாகச் சென்றபோது சமைத்த கல் அடுப்பில், அங்கிருந்த #வேடர்கள் இறைச்சியைப் புழுக்கி (அவித்து) உண்டார்கள் என்பதை #அகநானூறு (119:8-9) சொல்கிறது.

அருவியில் அடித்து வரப்பட்ட பலாப்பழத்தின் கொட்டைகளை இடித்துத் தயாரித்த மாவையும்,

கடமான் கறி, முள்ளம்பன்றிக் கறி ஆகியவற்றையும் கலந்து சமைத்து,

மூங்கில் அரிசிச் சோற்றையும், புளி கலந்த மோரையும் #குறமகள் பரிமாறினாள்.

சிறுவர்கள் வேட்டையாடி வந்த உடும்பின் தசையை இல்லறப் பெண் ஒருத்தி, தயிருடன் சமைத்துப் பாணருக்கும், அவரோடு வந்த ஏனைய விருந்தினர்களுக்கும், விருந்தோம்பியதைப் புறநானூறு பின்வருமாறு பேசுகிறது.

இதைப் போன்றதொரு செய்தியைப் பெரும்பாணாற்றுப்படையிலும் (131-133) காணமுடிகிறது

எயினப் பெண் தம் இருப்பிடம் நோக்கி வந்த பாணர்களுக்கு, உடும்பின் கறியைச் சமைத்து உபசரித்தாள்.

சங்ககால மக்கள் உணவின் சுகாதாரம் பற்றியும் சிந்தித்துள்ளனர்.

உணவு வகைகளை மூடி வைத்துப் பாதுகாப்பதும், அவற்றைக் கையில் தொடாது கருவிகள் கொண்டு பயன்படுத்தியதும் #புறநானூறு (396) கூறுகிறது

குறிஞ்சித் திணை மக்கள் இயற்கை உணவைப் பெரிதும் நம்பியிருந்தார்கள். சமைக்காத உணவையும் அவர்கள் சார்ந்திருந்தார்கள்.

மரத்திலிருந்து தானாக வீழ்ந்த பலாவின் சுளையை மேலும் சுவையூட்டி உண்ணும் பொருட்டுத் தேனிறாலைச் சிதைத்துத் தேனில் நனைத்து உண்டனர்.

என ஐங்குறுநூற்றின் பாடலொன்று விவரிக்கிறது.

#பலாப்பழம் அன்றி அதன் பிஞ்சினையும் உண்டனர் என்பதை #ஐங்குறுநூறு பாடலடிகள் கூறுகின்றன.

பாலில் தினை அரிசியோடு மான்கறியைக் கலந்து சமைத்தனர். இதனை வாழை இலையில் பகுத்துண்டனர்.

#கானவன் கொன்ற முள்ளம்பன்றிக் கறியை, அவனுடைய #கொடிச்சி கிழங்கோடு அவர்கள் வாழும் 'சிறுகுடிக் குறவர்' குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்தாள் என்பதை #நற்றிணை (85:8-10) குறிப்பிடுகிறது.

குறவர்களின் உணவில் #தினைமாவு முக்கிய இடம் பெற்றிருந்தது.

#குறமகள் மென்தினையின் மாவினை உண்டபடி, தட்டையை அடித்து ஐவன நெற்பயிரைக் காவல் காத்தாள் என்கிறது #ஐங்குறுநூறு (285: 1-3).

புளியைக் கலந்து சமைத்த வெஞ்சோற்றை விரும்பி உண்டனர்.

சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,

குறிஞ்சியில் வரகு, தினை, ஐவன நெல், எள், அவரை, மூங்கில் அரிசி, ஐயவி, இஞ்சி, கவலைக் கிழங்கு, கூவைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, தேமா, ஆசினிப்பலா, வாழை, நாவல், தேன் முதலானவை கிடைத்தன.

இவற்றைப் பல்வேறு பண்டங்களாகத் தயாரித்து உண்டனர்.

முள்ளம்பன்றிக் குழம்பும், உடும்புக்கறி வறுவலும் செய்தனர்.

அவரை வான் புழுக்கு (வெஜிடபிள் பிரியாணி)

‘அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று, இன்சுவை மூரல் பெறுகுவிர்’

- பெரும்பாண். 192-196

'அட்ட வாடூண் புழுக்கல்' (பிரியாணி) - பெரும்பாண். 94-100, இரண்டும் தயாரிக்கப்பட்டன.

பாலும் பொரியும் கலந்து தின்னும் வழக்கம் குறிஞ்சி, பாலைத் திணை மக்களுடன் இருந்துள்ளது.

செம்பொன்னால் செய்யப்பெற்ற பாத்திரத்தில் பால், பொரி இட்டுத் தின்றுள்ளனர்.

தலைவனுடன் உடன்போக்கில் சென்றதால் பால், பொரி வேண்டாமெனக் குறுந்தொடி உணர்த்தியதை இப்பாடல் குறிப்பிடுகிறது.

இன்னொரு சூழலில் உடன்போக்கில் சென்ற தன் குறுமகள் பற்றித் தாய் வருந்தியபோது....

தேனொடு கலந்த தீம்பாலைக் கூட ஊட்ட முயலும்போது மறுப்பவள், இப்போது தனியாகச் சென்றுவிட்டாளே, என்ன உண்பாளோ என்று வேதனைப்படுகிறாள்.

- நன்று.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling