KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

May 22, 2022, 6 tweets

#NewProfilePic

முல்லை நிலம்!
Amsterdam ஏறு தழுவுதல்!:)

கோட்டினத்து ஆயர்மகன்
போர்புகல் ஏற்றுப்
பிணர் எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்!

கொல் ஏற்றுக்
கோடு அஞ்சுவானை
மறுமையும்
புல்லாளே ஆய மகள்!

(சங்கத் தமிழ், கலித்தொகை)

Cheese= பாற்கட்டி
என்பதே தமிழ்ச் சொல்!

இன்று, பாலாடைக் கட்டி என்கிறார்கள்!
சங்கத் தமிழ்ச் சமூகத்தில்
முல்லைத் திணையில், பாற்கட்டி தான்!

சங்கத் தமிழ் போலவே
Dutch நாட்டிலும்
பல்வேறு வகையான Cheese!

*எருமை
*பசு
*வெள்ளாடு
*செம்மறி
*ஆட்டுக் குட்டி

பல விதமான பால் வகை, பாற்கட்டிகள்!

ஏதோ நூலகம், புத்தக வரிசை போலவே
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள
பாற்கட்டிகள்! ஒவ்வொரு சுவை! மணம்!

Wine போலவே
Cheese-க்கும் Age உண்டு!

பால் (கட்டி), பல நாள் கெடாமல்..
சுவையாக வைத்திருப்பது ஒரு கலை!😍

பாற்கட்டி (Cheese) செய்முறை
சங்கத் தமிழ் போலவே
Dutch நாட்டிலும் இருப்பது
எனக்குப் பெரு வியப்பு!

இன்றைய அறிவியல் முறை நீங்கலாக
ஒவ்வொரு கட்டமும்
பழந்தமிழ்நாட்டு முறை போலவே உள்ளது!

குறிப்பாக அச்சும் வார்ப்பும்!
Mould செய்து ஊற்றி அழுத்தியெல்லாம்
பாற்கட்டிகளைச் சாப்பிட வேண்டுமா?😂

பால் மட்டுமே காய்ச்சும் பாத்திரத்துக்கு
உங்கள் வட்டாரத் தமிழில், பெயர் என்ன?

அண்டா, குண்டா என்று
சொல்லக்கூடாது! ஒழுங்கா சொல்லணும்!😂

இன்று @akaasi போல்
Automation/ தானியங்கி வடிவாக்கம் செய்து
மனித உழைப்பே இன்றி
Cheese/ பாற்கட்டி செய்யும் முறை,
Dutch உழவர்களிடம் வந்து விட்டது!😍

அண்டா/குண்டா என்று சொல்லக்கூடாது😂
என்று ஏன் சொன்னேன் என்றால்..
அதன் உண்மையான பெயர் குண்டேனம்!

= குண்டு+ஏனம்
= குண்டான கலம்

குண்டேனம் என்பது குண்டான் ஆகி
பேச்சு வழக்கில் குண்டா ஆகிவிட்டது!:)

குண்டேனத்தில் பலதும் சமைக்க/ஆளலாம்!
கேள்வி: ”பால் மட்டுமே” காய்ச்சும் கலம்?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling