தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

May 24, 2022, 20 tweets

சங்ககாலக் மருதத் திணை மக்களின் உணவு முறைகள்...!

வேளாண் தொழில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் பேசுகிறது.

#சேற்று நிலத்தில் #நெல்லை விதைத்துப் பயிரிட்டுள்ளனர்.

நாற்றங்காலில் #நாற்று வளர்த்துப் பின்னர் பெயர்த்தெடுத்துப் பயிரிட்டனர்.

#சேற்றுழவு செய்ததை பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

#விதை விதைத்து #நெல் பயிரிட்ட முறையை ‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்' என்கிறது #ஐங்குறுநூறு (3:4).

ஒரு வேலி நிலத்தில், ஆயிரம் கலம் செந்நெல்லை விளைவித்துள்ளதைப் பின்வரும் #பொருநராற்றுப்படை வரிகள் பதிவிடுகின்றன.

மேலும், விளைந்த நெற்பயிரை அறுத்துக் களத்திற்குக் கொண்டு வந்து, அடித்துக் காற்றில் தூற்றி நெல்லைக் குவித்தனர் என்கிறது #அகநானூறு (30: 6-8).

தானியங்களைச் சேமித்து வைப்பதற்கான #நெற்குதிர்கள் உழவர் வீடுகளில் இருந்தன.

இதனைக் 'குமரி மூத்த கூடு ஓங்கு நல்இல்' என்கிறது #பெரும்பாணாற்றுப்படை (247).

மேற்கூறிய தரவுகள் அனைத்தும் சங்க கால வேளாண் தொழிலின் செழிப்பைக் காட்டுகின்றன.

மருதத் திணையில் #நெல்சோறு முதன்மையானது.

சங்க இலக்கியங்களில் #செந்நெல், #வெண்ணெல் புறம் (399), நற் (183) எனும் இரு வகைகளைக் காணமுடிகிறது.

இவற்றில் #வெண்ணெல் உயர்ந்தது.

இரண்டு வகைகளையும் விரும்பி உண்டனர்.

சோற்றை,

#வல்சி (பெரும். 255),
#சொன்றி (பெரும். 130),
#மிதவை (அகம். 86),
#அடிசில் (பதிற். 45),
#புன்கம் (புறம். 8),
#விதவை (புறம். 326),
#துழவை (பெரும்பாண். 275),
#கூழ் (பெரும்பாண். 175)

எனப் பல்வேறு பெயர்களால் அழைத்தனர்.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறான சமையல் முறையைக் குறிப்பதாகும்.

பசி அறியப்படாத ஊராய் மருத நில ஊர் காட்டப்பட்டுள்ளது.

#செந்நெல், #வெண்ணெல் உணவு இம்மக்களின் அடிப்படை உணவாய் உள்ளது.

வாளைமீன், வரால், நண்டு, வெண்சோறு ஆகியன உழவர் மக்களின் உணவாகக் காட்டப்பட்டுள்ளன.

உழவர் வீடுகளில் பலவகையான உணவுப் பண்டங்கள் இருந்தன.

பலாப்பழம், தெங்கின் இளநீர், பனை நுங்கு, முதிர்ந்த வாழைப்பழம், சேம்பின் கிழங்கு, காய்கறிகள், பால் பொருட்கள் என விதவிதமான பொருட்கள் இருந்ததைப் #பெரும்பாணாற்றுப்படை (354-366) கூறுகிறது.

மருத நிலத்தில் வயல்களில் வேலை செய்யும் உழவர்கள், முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேய விடுவர்.

ஆட்டிறைச்சியுடனே வாளை மீனைப் பழைய சோற்றுடன் உண்டு மகிழ்ந்தனர்.

இதனை பின்வரும் பாடலடிகளில் காணமுடிகின்றது.

மருத நிலத்தில் முக்கியப் பணியாக #வேளாண்மை உள்ளது. இத்தொழிலில் பெண்களின் பங்கு மிகுதியாகும்.

களையெடுத்தலும், நாற்று நடுதலும் பெண்களாலேயே செய்யப்பட்டன.

விளை நிலங்களைக் காவல் செய்யும் பணியையும் பெண்கள் செய்தனர்.

வயலில் வேலை செய்துவிட்டு, இல்லம் திரும்பும் போது வயலில் கிடைக்கும் மீன்களையும், வயல் நண்டுகளையும் பிடித்து வந்து சமைத்தனர்.

மருத நிலத்துப் பெண்கள், வரால் மீன் குழம்பைச் சமைத்துத் தலைவனுக்குச் சோற்றுடன் கொடுக்க, அதனை உண்டுவிட்டுத் தன் தலைவியுடன் நாற்று நடுவதற்குச் செல்கிறான்.

பெண், உணவு சமைத்து இல்லத்தைப் பராமரித்துவிட்டு வயலில் சென்று பணிபுரிகிறாள்.

இதன் மூலம் தலைவி இல்லறப் பணியுடன் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு, வாழ்வில் சிறப்புற்றாள் என்பதைப் பின்வரும் நற்றிணைப் பாடலில் காணமுடிகிறது.

பச்சரிசிக் கஞ்சியை மக்கள் விரும்பி அருந்தியுள்ளனர் என்கிறது #மலைபடுகடாம் (454-464).

பசிய அவல் இடிப்பதற்குப் (பச்சை நெல்லை இடித்துச் செய்யப்படும் அவல்) பயன்படுத்திய உலக்கை #வயிரம் பாய்ந்து இருக்கும்.

இவற்றைக் கொண்டு #பாசவல் இடித்தனர்.

#அவல் இடிக்கும் பெண்கள், உலக்கையை வயல் வரப்புகளில் கிடத்தி விட்டு,

தொண்டியின் கடற்கரைப் பகுதியில் வண்டல் இழைத்து மகிழ்வர் என்பதை பின்வருமாறு அறியலாம்.

வறுமை நிலை ஏற்பட்ட போதிலும், தனக்கு உண்டான பணியினைத் தலைவி சிறப்புடன் மேற்கொண்டாள்.

இளைத்த உடலை உடைய பெண், கடும்பசியால் குப்பையில் விளைந்த வேளைக் கீரையைக் கிள்ளி வந்து,

உப்பு இல்லாமல் வேக வைத்துச் சுற்றத்தினரின் பசியைப் போக்கினாள், என்பதை பின்வருமாறு அறியலாம்.

இந்நிகழ்வில் தலைவியின் இல்லற மாண்பு வெளிப்படுகிறது.

வெண்மையான மோரில் அளவாக இனிய புளியம்பழத்தின் புளிப்பையும் சேர்த்து,

உலையாக வைத்துக் #கைக்குற்றல் அரிசியைச் சமைத்தனர் எனப் #புறநானூறு (399) பின்வருமாறு அழகாக வர்ணிக்கிறது.

மருத நிலத்தில் விதவிதமான கஞ்சியைக் காய்ச்சி உண்டனர் என #அகநானூறு (37: 12-14) வர்ணித்துள்ளது.

கொள்ளும், பயறும் அளவாகக் கலந்து பாலுடன் ஆக்கிய அவிழ் கஞ்சியைக் குடித்துக்கொண்டே இருந்தனராம். குடிக்கும் கைகளை அகற்றும் வரை உண்டனர்.

கொழியலரிசியைக் களியாகத் துழாவிச் செய்த கூழையும் குடித்தனர்.

சூடான கூழை அகன்ற வாயுடைய தட்டில் இட்டு ஆற்றி உண்டனர். (பெரும்பாண். 275-281)

முளைத் தானியத்தை இடித்துச் செய்த #அடை விருப்ப உணவாக இருந்தது ‘பூம்புற நல்அடை அளைஇ' (பெரும்பாண். 278)

மருத நிலத்தில் நெல் சோற்றுடன் பழஞ்சோறு உண்ணுதலும் பழக்கத்தில் இருந்தது.

கள் குடித்ததால் ஏற்பட்ட மயக்கம் தீர்வதற்கு, இப்பழஞ்சோறு பயன்பட்டது என்கிறது #புறநானூறு.

இப்படிக் கூறும் மருத நில உணவு வகைகளில் காய்கறிகளும், ஊன் துவை அடிசிலும் உண்டு.

குழம்பும், பொரிக்கறிகளும், துவையலும், இறைச்சியால் செய்யப்பட்ட கறி வகைகளும் சிறப்பானவை என #புறநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

'சோறுவேறு என்னா ஊன்துவை அடிசில்' என #பதிற்றுப்பத்து (45:13) குறிப்பிடுகிறது.

மருத நில உழவர்களும், உழத்திகளும் கருவாட்டைச் சுட்டும், வயல் ஆமைகளை வேகவைத்தும் உண்டனர் என்பதை பின்வரும் #பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

- நன்றி.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling