#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை
6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும்
பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக
செல்லலாம், நண்பர்களாகச் செல்லலாம். இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம். 1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜபம் காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது. இங்கே
மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக நம் நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும், அதுவும் சரியாகிவிடும். ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்.
சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற
முடிகிறது என்பதை கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. இந்த அசிரமத்தை ஆரம்பித்தவர் ஸ்வாமி ராமதாஸ். பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய், சுவாமி சச்சிதானந்தர் அவரின் சிஷ்தர்கள், அவர் பின் இந்த ஆசிரமத்தை நடத்தியவர்கள். ராம நாம ஜப தீக்ஷையை தனது தந்தையிடம் பெற்றார்.
தன் வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர். அந்த ராம நாம கீர்த்தனை(ஜபம்)
ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம் மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடம். உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு வேறு எங்கும் கிளை ஆசிரமம்
கிடையாது. வெளிநாட்டவர் பலர் வந்து பயன்பெற்று செல்கின்றனர். நமக்கு தான் அருமை தெரியவில்லை. வருபவர்களிடம் எந்த நன்கொடையும் வசூலிக்கப் படுவதில்லை. ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்!
ADDRESS
Anandashram,
Anandashram P.O., Kanhangad 671531
Dist. Kasaragod, Kerala, India.
Tel: (0467) 2203036/ 2209477
Email: anandashram@gmail.com
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.