அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jun 17, 2022, 15 tweets

#ஸ்ரீராமானுஜர் #திருநாராயணபுரம் பெருமாள் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருட்பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன.
தெற்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன்.
கிழக்கு காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜன்.
வடக்கு திருப்பதி திருவேங்கடவவன்.
மேற்கு மேல் கோட்டை திருநாராயணபுரம

திருநாராயணபுரம் நான்கு யுகங்களிலும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராயணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்

படுகிறது. பனிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் ஸ்ரீ இராமானுசர் இங்கு 12 வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம்

செய்து “திருநாராயணபுரம்” என அழைக்கும்படி அருளினார். ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது. அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள். கீழே நாராயணர்ஆலயம்

இங்கு மூலவர் திருநாராயணன், சங்கு சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம்,சரணங்களில் பீபீ நாச்சியார் வெள்ளி கவசத்துடன் சரணங்களில் வணங்கியபடி உள்ளார். உத்ஸவருக்கு சம்பத் குமாரர், ராமப் பிரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன் எனப் பல பெயர்கள். தாயார் - யதுகிரி நாச்சியார்.

தீர்த்தம் - கல்யாணி தீர்த்தம், வேதபுஷ்கரணி, தனுஷ்கோடி தீர்த்தம் என 8 தீர்த்தங்கள் உள்ளன. விமானம் - ஆனந்தமய விமானம். வைரமுடி சேவை நாளில் கருடன் கொண்டு வந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச்

செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையால் வைரமுடி சேவை இப்போதும் இரவில் தொடங்கி விடியும் முன் முடிக்கப்படுகிறது. வைர முடி சாற்றும் போது பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைர முடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.

கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது #வைநதேயமுடி என்றழைக்கப்பட்டு, #வைநமுடி என சுருங்கி பின்னர் #வைரமுடி என மருவியுள்ளது. ராமானுஜர் திருநாராயணபுரம் வந்த போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் அங்கு ஆண்டு வந்தார். அவர் மகளுக்கு

சித்தபிரமை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் அப்பெண்ணை நலமாக்கினார். இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, வைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்து

உள்ளார். உதயகிரி மலையில் திருக்கோயிலைக் கட்டியவன் இவரே. மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்தபோது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு

செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எறும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும்

தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை அவர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே #திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது. ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுஜர்

மீட்டுக் கொண்டு வரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீராமானுஜரையும் காத்தனர். காத்த அவர்களுக்கு திருக்குலத்தார் என்ற திவ்ய நாமத்தை அளித்தார் உடையவர். மேலும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி நவிலும்

வண்ணம் ராமானுஜரின் ஆணைக்கு இணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து 3 நாட்கள் #திருக்குலத்தார்_உற்சவம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது. திருத்தொண்டனூர்,

ஸ்ரீரங்கப்பட்டினம் போன்றவை அருகிலிருக்கும் வைணவத் தலங்களாகும். இத்தல புளியோதரை பிரசாதம் புகழ் பெற்றது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling