அன்பெழில் Profile picture
Jun 17, 2022 15 tweets 5 min read Read on X
#ஸ்ரீராமானுஜர் #திருநாராயணபுரம் பெருமாள் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருட்பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன.
தெற்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன்.
கிழக்கு காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜன்.
வடக்கு திருப்பதி திருவேங்கடவவன்.
மேற்கு மேல் கோட்டை திருநாராயணபுரம Image
திருநாராயணபுரம் நான்கு யுகங்களிலும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராயணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப் Image
படுகிறது. பனிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் ஸ்ரீ இராமானுசர் இங்கு 12 வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் Image
செய்து “திருநாராயணபுரம்” என அழைக்கும்படி அருளினார். ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது. அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள். கீழே நாராயணர்ஆலயம் Image
இங்கு மூலவர் திருநாராயணன், சங்கு சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம்,சரணங்களில் பீபீ நாச்சியார் வெள்ளி கவசத்துடன் சரணங்களில் வணங்கியபடி உள்ளார். உத்ஸவருக்கு சம்பத் குமாரர், ராமப் பிரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன் எனப் பல பெயர்கள். தாயார் - யதுகிரி நாச்சியார். Image
தீர்த்தம் - கல்யாணி தீர்த்தம், வேதபுஷ்கரணி, தனுஷ்கோடி தீர்த்தம் என 8 தீர்த்தங்கள் உள்ளன. விமானம் - ஆனந்தமய விமானம். வைரமுடி சேவை நாளில் கருடன் கொண்டு வந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச்
செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையால் வைரமுடி சேவை இப்போதும் இரவில் தொடங்கி விடியும் முன் முடிக்கப்படுகிறது. வைர முடி சாற்றும் போது பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைர முடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார். Image
கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது #வைநதேயமுடி என்றழைக்கப்பட்டு, #வைநமுடி என சுருங்கி பின்னர் #வைரமுடி என மருவியுள்ளது. ராமானுஜர் திருநாராயணபுரம் வந்த போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் அங்கு ஆண்டு வந்தார். அவர் மகளுக்கு
சித்தபிரமை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் அப்பெண்ணை நலமாக்கினார். இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, வைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்து
உள்ளார். உதயகிரி மலையில் திருக்கோயிலைக் கட்டியவன் இவரே. மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்தபோது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு Image
செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எறும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் Image
தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை அவர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே #திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது. ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுஜர்
மீட்டுக் கொண்டு வரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீராமானுஜரையும் காத்தனர். காத்த அவர்களுக்கு திருக்குலத்தார் என்ற திவ்ய நாமத்தை அளித்தார் உடையவர். மேலும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி நவிலும் Image
வண்ணம் ராமானுஜரின் ஆணைக்கு இணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து 3 நாட்கள் #திருக்குலத்தார்_உற்சவம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது. திருத்தொண்டனூர்,
ஸ்ரீரங்கப்பட்டினம் போன்றவை அருகிலிருக்கும் வைணவத் தலங்களாகும். இத்தல புளியோதரை பிரசாதம் புகழ் பெற்றது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 31
#தமிழ்நாட்டின்_வித்தியாசமான_கோவில்_மூர்த்திகள்
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனும் ஞானமுத்தீஸ்வரனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ளனர். வேறு எந்த காளி கோயில்களிலும் இப்படி காண இயலாது.

சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில் Image
கபாலம் ஏந்தியிருக்கிறார்.

பொதுவாக 5 தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் 7 தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.

திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி Image
விநாயகர் ஆலயத்தில் ஒரே பீடத்தில் 5 விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.

திருப்பூவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.

தர்மபுரி கோட்டைக் கோயிலில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப் போல குத்திட்டு
Read 11 tweets
May 31
#கண்ணனும்_பாண்டவர்களும்
பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் Image
திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர்.
பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இருவரின் அஸ்திரப்
Read 5 tweets
May 30
#ருத்ராட்ஷ_மகிமை
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒரு போதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து Image
ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது. அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக 5 முக ருத்ராட்ஷமாவதுImage
அணியவேண்டும்.
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும்போதும் எல்லாக் காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவImage
Read 25 tweets
May 29
#நற்சிந்தனை
ராமன் காட்டிற்குப் போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்ல வேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த Image
ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?" என பக்தியோடு கேட்கிறான். "கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா." அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு புறப்படத் தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன்
படகை இங்கே கொண்டுவா" என்றான். "கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா ராமர், அது சீதாதேவி ராணி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர்"
கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதும் இரவில்
Read 17 tweets
May 29
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் & ஸ்ரீ சோமேசுவரர் திருக்கோவில்
நங்கவள்ளி சேலம் மாவட்டம்
இக்கோவில் ஆயிரம் வருட பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சி அளிகின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது.Image
அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் தொட்டிநங்கை என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டு இருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது எனImage
யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்த போது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு Image
Read 18 tweets
May 28
#போக_நந்தீஸ்வரர்_ஆலயம்
நந்தி கிராமம், சிக்பல்லாபூர், கர்நாடக மாநிலம்.
பொ.யு.8-ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய அரச வம்சத்தினரால் ஏராளமான கட்டுமானங்கள், திருப்பணிகள் இவாலயத்திற்கு செய்யப்பட்டுள்ளன. வெளியில் இருந்து பார்ப்பதற்கு எவ்வித Image
பரபரப்புமில்லாமல், பக்தர் கூட்டம் அதிகமின்றி காணப்படும் இப்பெரும் ஆலய வளாகம், வரலாற்று, கலை ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. தென் பாரதத்தின் புகழ் மிக்க அரச வம்சத்தினரின் கோவில் கட்டுமான பொறியியல், சிற்பக்கலை நுணுக்கம், அழகியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒரு சேர Image
இந்த ஆலயத்தில் காணலாம். நுளம்பர், ராஷ்ட்ரகூடர், பாணர், கங்கர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரம் போன்ற பெரும் அரச வம்சத்தினர் தத்தம் பாணிகளில் கலைப் பங்களிப்புகளை இவ்வாலயத்தில் செய்து உள்ளனர். ராஷ்ட்ரகூட மன்னர் 3ஆம் கோவிந்தன் (பொ.யு.806) கல்வெட்டுக்கள், பாண அரசர் ஜெயதேஜா (பொ.யு.810) Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(