வேதாளன்💀 Profile picture
Belongs to Dravidian stock😎 🖤♥️I 🤡பாஜக என்னும் 🌵விஷச்செடியை 🗡️வேரறுக்க வந்த வேதாளம்💀 I (Founder of புராணா😆 MEMES)

Jun 18, 2022, 11 tweets

"வீட்ல விசேஷம்"🚼 திரைப்படமும் நாட்ல எரியும் #அக்னிபாத்🔥 திட்டமும் சொல்லும் சேதி என்ன??

"Social conditioning" எனப்படும் "சமூக வரையறுத்தல்" தான் இரண்டும் சொல்லும் சேதியும், இரண்டும் இணையும் புள்ளியும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனது 25 ஆவது வயதில்...(1/11) Thread🧵👇

குழந்தைப் பெற்றுக் கொள்வதை ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம், அதே பெண் தனது 50 ஆவது வயதில் அதே திருமண வாழ்வின் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வதை ஏளனமாகவும், அசிங்கமாகவும் பார்க்கிறது.

அம்மாவும், அப்பாவும் எப்படி அந்தத் தப்பை செய்யலாம்? என்றக் கேள்வியை, அந்தத் தப்பின் மூலமாகவே...(2/11)

பிறந்த பிள்ளைகளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த சமூகம் புகுத்தி வைப்பதன் பெயர் தான் social conditioning.

திருமண வயதிலும், கல்லூரி செல்லும் வயதிலும் 2 மகன்களை உடைய ஒரு அம்மா தனது 50வது வயதில் மீண்டும் அம்மா ஆவதும், அதனால், இந்த social conditioning மூலம் அந்தக்... (3/11)

குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களும், அதில் இருந்து எப்படி அவர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதும் தான் வீட்ல விசேஷம் திரைப்படம்.

இந்த #அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இப்போது நடக்கும் ரயில் எரிப்பு கலவரங்களுக்கும் காரணம் இந்த social conditioning தான். (4/11)

ஒரு அரசு செயல்படுத்த இருக்கும் திட்டத்தை எதிர்க்க கண்டன ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம், பேரணி போன்ற அறவழிகளில் அமைதியாக போராடுவது தான் போராட்டம்.
ரயிலை எரிப்பது, பொது உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற கலவரச் செயல்களை போராட்டம் என அந்த... (5/11)

வடக்கத்திய இளைஞர்களின் மனதில் புகுத்தி வைத்து இருப்பது தான் ஆளும் பாஜகவின் social conditioning.

ஒரு மதத்தை எதிர்க்க அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் அந்த மதத்தை சேர்ந்தவர்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது என ஆளும் அரசே.... (6/11)

தனது வெறுப்பரசியலை எளிய மக்களின் மனதில் புகுத்தி கலவரத்தை social conditioning செய்கிறது.

அவர்களின் மனதில் அரசு புகுத்திய அந்த வெறுப்பே தற்போது அரசுக்கு எதிராக அதே அரசின் வழியிலேயே கலவரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு...(7/11)

போராட்டம் என அரசு அதிகாரத்துக்கு எதிராக போராட அறவழியை தேர்ந்தெடுப்பது தென்னகத்து social conditioning.

அதுவே அரசு உடைமைகளை, பொதுச் சொத்துக்களை சூறையாடி கலவரம் செய்வது வடக்கத்திய social conditioning.

ரயிலை மறித்து போராட்டம் செய்வது தென்னகத்து social conditioning. (8/11)

ரயிலை எரித்து கலவரம் செய்வது வடக்கத்திய social conditioning.

பான் பராக் போடுவது, போட்ட பின் அந்த எச்சிலை பொது இடத்தில் துப்புவது, ரயிலில் அடுத்தவன் பதிவு செய்த இடத்தில் ஓசியில் பயணம் செய்வது ஆகியவற்றை இழிவாகக் கருதுவது தென்னகத்து social conditioning.

ஆனால் இதை எல்லாம்...(9/11)

இயல்பாகக் கருதுவது வடக்கத்திய social conditioning.

NEET, NEP போன்ற அநீதிகளுக்கு எதிராக போராடுவது தென்னகத்து social conditioning.

அக்னிபாத் போன்ற ஆள் சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராடுவது வடக்கத்திய social conditioning.
(10/11)

மொத்தத்தில், அறவழியில் நிற்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பது தென்னகத்து social conditioning.

மக்களை அடிமைகளாய் அடக்கியாள, கலவரத்தின் பின் நிற்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பது வடக்கத்திய social conditioning.
(11/11)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling