#அறிவோம்_மகான்கள் #சற்குரு_சுவாமிகள் திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் அகத்தியர் மரபு வழித் தோன்றலான ஸ்ரீசற்குரு நாத மாமுனிவர் மக்களிடையே உள்ள சாதி சமயம், உயர்வு தாழ்வு, ஆணவம் அகந்தை, என்ற அறியாமையை நீக்கி, எளிய மக்களும் இறைஞானப் பேரருளைப்
பெற்று பிறவிப் பயனை எளிதில் அடைவதற்காக 19வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொதிகை மலை, சுருளி மலை, நீலகிரி மலை, வெள்ளியங்கிரி, பழனி மலை, போன்ற பல்வேறு மலைகளிலும், திருச்சி, தேனீ, நீலகிரி, பழனி போன்ற பல்வேறு ஊர்களில் பூமிக்கடியில் மற்றும் தண்ணீருக்கடியில் பல நாட்கள் வெளியே
வராமல் இராஜயோக தவம் செய்து பொதுமக்கள் நன்மையடையும் விதமாக அருளாற்றல் நிரம்பிய பல தவ மையங்கள் அமைத்துள்ளார்.
110 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நடுப்பட்டி கிராமத்திலிருந்து சற்குருநாதர் நடந்து வந்து எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் தங்கினார். இங்கு ஊர் பெரியோர்
முன்னிலையில் ஜீவ சமாதி அடைந்து மீண்டும் உயிர் பெற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றதாக பொதுமக்கள் நம்புகின்றனர். அவ்வாறு அவர் உயிர் பெற்ற ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில், இக்கிராம மக்கள் சாதுக்களை அழைத்து குருபூஜை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் மழை
பெய்து, விவசாயம் தொழில்வளம் பெருகும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். பல இடங்களில் சமாதி உள்ளது. எம்.சுப்புலாபுரத்தில் சுவாமிகளின் குருபூஜையின் போது வெளியூர் ஆட்கள் பூஜை வேலை செய்ய மாட்டார்கள். ஊரில் உள்ள மக்களே வந்து வேலை செய்யும் மிக அற்புதங்கள் நிறைந்த ஜீவ சமாதி குருபூஜை
நடைபெறும் நேரத்தில் சுவாமிகள் எந்த ரூபத்திலாவது வருவார்கள். இதை பார்த்தவர்கள் பல பேர் உண்டு.
1915, ம் வருடம் எண் கோண வடிவிலான கருங்கல் 12 அடி ஆழத்தில், நிலவறை அமைத்து அதனுள் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்து 48 நாட்கள் [ஒரு மண்டலம்] காற்று, நீர், உணவு இன்றி தவம் இயற்றி தெய்வீக இறை
ஆற்றலை பூரணமாக வடித்துள்ளார். இத்திருத்தலத்தில் ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் 1915ம் வருடம் தவம் இயற்றிய பிறகு ஒவ்வொரு வருடமும் குருபூஜை இங்கும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் விழாவில் கணேச பூஜை, பஜனை, ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கும். சற்குரு சுவாமியின் படத்தை
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து கிராமத்தின் வீதிகள் வழியாக ஊர்வலம் செல்வர். சாதுகளுக்கு வஸ்திர தானமும், வந்தோர் அனைவருக்கும் அன்னதானமும் அமோகமாக நடக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள் பங்கேற்று பூஜை வழிபாடுகள் செய்வர்
சற்குரு சுவாமிகள் குருபூஜை ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பங்குபெற்று குருவருள், சித்தர் அருள் பெற வேண்டிய ஒன்று.
முகவரி தேனியிலிருந்து10கி.மீ.தொலைவில் இருக்கும எம் (மரிக்குண்டு) சுப்புலாபுரம் கிராமத்தில் இவருடைய சமாதி உள்ளது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.