கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Jul 4, 2022, 7 tweets

யார் இந்த ஆற்காடு வீராசாமி??

திமுகவின் வரலாற்றில் ஒரு பெயர் இடம்பெறவில்லையெனில் நிச்சயம் அது திமுக வரலாறாக இருக்காது. ஆம், அந்த பெயர் #ஆற்காடு_வீராசாமி... அந்த பெயரை உச்சரிக்கும் போது ஒரு கம்பீரம் தோன்றும். திமுக தலைவர் கலைஞரின் நிழல், பேராசிரியரின் மூக்குக் கண்ணாடி என்றெல்லாம்

புகழப்பட்டவர் தான் ஆற்காட்டார்.. 1975 ஆம் மிசாவில் கைதான ஆற்காட்டாரை பழிவாங்க துடித்தது தமிழக காவல் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அடி விழாதவாறு தாங்கிக் கொண்டார் ஆற்காட்டார்..தனது ஒரு பக்க செவி திறனை இழக்கும் அளவிற்கு அவர் தியாகம் இருந்தது.. கலைஞரின் சொல்லிற்கு கட்டுப்பட்ட

ஆற்காட்டார், ஒருமுறை தலைவர் கலைஞர் "யோவ்,வீராசாமி... பிரஸ்காரங்களைக் கூப்பிட்டு இந்த அறிக்கையைப் படிய்யா!' என்று கருணாநிதி சொன்னதும், பத்திரிகையாளர்கள் முன்பாக உட்கார்ந்தாராம் ஆற்காடு வீராசாமி.
'ஆற்காடு வீராசாமி என்கிற நான், இன்று முதல் தி.மு.க-வைவிட்டு விலகிக்கொள்கிறேன்!' என்று

வாசித்தாராம், அதிர்ச்சியான நிருபர்கள் "சார், எவ்வளவு பெரிய செய்தியை இப்படி கூலாக சொல்கிறீர்களே! என்று கேட்க அதெல்லாம் தெரியாது, என் தலைவர் வாசிக்கச் சொன்னார் நான் வாசித்து விட்டேன்" என்று, பதிலளிக்கும் அளவிற்கு தலைவர் கலைஞர் மீது பாசம் இருந்தது. மின்சாரத்துறையின் உதவியாளராக

இருந்து அந்த துறைக்கே அமைச்சரானார் ஆற்காட்டார்.. தமிழகத்தின் #ஏக்நாத்சிண்டே வான MGR பல முறை அழைத்தும் தன்னை திமுகவிலேயே தொடர ஆன்மா ஒத்துழைப்பதாக பதிலடி கொடுத்தார்...கலைஞரின் வடஆற்காடு மண்டலத் தளபதியான ஆற்காட்டாருக்கு திமுக பொருளாளர் பதிவி வழங்கப்பட்டது. பல தியாக வரலாற்றுக்குச்

சொந்தகாரரான ஆற்காட்டார் அவர்கள், தொண்டர்களிடம் உள்ள பிரச்சனையை தலைவரிடம் எடுத்துரைப்பாராம்... இவர் கலைஞரோடு நெருக்கமான காலத்தை "தொண்டர்களின் பொற்காலம் " என்று கூறுவதே வழக்கம்.. மேலும் கலைஞரின் தலையை சீவி விடுவதாக சொன்ன வடநாட்டு முட்டாள் #வேதாந்தியை பார்த்து உன் கால்,கைகள்

தனித்தனியாக பிரித்து எறியப்படும், இதனால் என் அமைச்சர் பணி போனாலும் கவலையில்லை என பளீச் என்று மிரட்டல் விடுத்தார்... மீரண்டுப் போன வாஜ்பாய் வழக்கம்போல் #சாவர்கர் பாணியை கடைபிடித்தார்...

இந்த மாவீரன் வரலாற்றை பருகும் போது பசியெடுக்காது!! 💥💥💥💥🖤❤️

💐💐💐

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling