M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Jul 7, 2022, 9 tweets

#சுதர்சன_ஜெயந்தி

இன்று ஆனி மாதம் சித்திரை நட்சத்திரம்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.

#சக்ரத்தாழ்வார்

திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்ராயுதத்தின் உருவமாக போற்ற படுகிறார்.
இவர் சுதர்சனர், திருவாழி யாழ்வார், திகிரி என்றும் அழைக்கப்படுவர். இவருக்கு தனி சன்னதி உண்டு.

சுவாமி தேசிகர் இவரை ” சக்ர ரூபஸ்ய சக்ரிணி ” என்று குறிப்பிடுகிறார்.

சக்ரத்தாழ்வார்
திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

மேலும் இவரை போற்றி ” சுதர்சனாஷ்டகம் ” என்ற ஸ்லோகத்தையும் சுவாமி தேசிகர் எழுதியுள்ளார்.

சக்ரதாழ்வாரை வழிபட்டால் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் பாபங்கள் நீங்கும் .

எதிரிகளின் தீங்கும் நம்மை நெருங்காது நீங்கும்.

திருமாலுக்கு செய்யும் அனைத்து வழிபாட்டு முறைகளும் இவருக்கும் உண்டு.

பிரம்மோட்சவம், மற்றும் கடலுக்கு சென்று தீர்த்தவாரி சமயங்களில் சுதர்சனருக்கு முக்கிய

பங்கு உண்டு.

சுதர்சனர் என்கிற சக்ரதாழ் வாருக்கு விசேஷமான ஆராதனைகள் நடைபெறும்.

இந்த ஆராதனைகள் விகாச என்ற முனிவரால் ஏற்படுத்தப்பட்டது.

சுதர்சனர் ப்ரத்யக்ஷ தெய்வம், அவரை உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காத்திடுவார்.

#ஸ்ரீ_சுதர்சன_வழிபாடு
பயங்கரமான கனவு, சித்த பிரமை, பில்லி சூன்யம் போன்ற அனைத்துக்கும் விசேஷமானது.

சுதர்சன வழிபாட்டு முறையில் ஹோமம் செய்வது முக்கிய மாக கருதப்படுகிறது.

சுதர்சன காயத்ரி :

ஸ்ரீ சுதர்சனாய வித்மஹே

மஹா ஜ்வாலய தீமஹி

தந்நோ சக்ர ப்ரசதோயாத்.

சுதர்சன மந்த்ரம் :

க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய

ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே!

மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி

வாதப்ரதிவாதானி
ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய

மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே

ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன

கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா.

மிகவும் சக்தி வாய்ந்த மகா சுதர்சன மந்திரம் இது.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் முறைபடி துதித்து வருபவர்களுக்கு பல விதமான நன்மைகள் உண்டாகும்.

அவர்களுக்கு பீடைகள் ஒழியும்.

சௌபாக்கியம் பிறக்கும்.

அஞ்ஞான இருள் விலகும்.

எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்.

ஆபத்து நீங்கும்.

பயம் விலகும்.

தைரியம் பிறக்கும்.

சந்தோஷம் நிலைக்கும் .

இத்தகைய மகிமை கொண்ட சுரதர்சனனை வழிபட்டு வாழ்வில் நலன்களை பெறுவோமாக.

#சுதர்சன_வழிபாடு

#சக்கரத்தாழ்வார்_வழிபாடு

#ஸ்ரீவைஷ்ணவம் #பெருமாள்வழிபாடு #ஓம்நமோநாராயணாய

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling