M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Jul 7, 2022, 10 tweets

#சுதர்சன_ஜெயந்தி

சுதர்சனர் ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று ஆனி மாதம், சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.

நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்த *சுதர்ஸனருக்கு* இன்று திருநாள்.

வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்த சுக்ராச்சாரியாரின் எண்ணத்தை திசை திருப்பிய *சக்கரத்தாழ்வாருக்கு* இன்று திருநாள்

ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்ட *திருவாழியாழ்வானுக்கு* இன்று திருநாள்

சிசுபாலனை அழிக்க ஸ்ரீகிருஷ்ணருக்கும் கஜேந்திர மோட்சத்தில் முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றிட திருமாலுக்கும் ஆயுதமான *திகிரிக்கு* இன்று திருநாள்

புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திடவும், மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திடவும்,

கிருஷ்ண பரமாத்மாவுக்கு கைங்கர்யம் செய்த *ஹேதிராஜனுக்கு* இன்று திருநாள்.

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கிய *சக்கரராஜனுக்கு* இன்று திருநாள்.

சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும்,

இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ள ஸ்ரீ *சுதர்சனாழ்வாருக்கு* இன்று திருநாள்.

தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருக்கும் ஸ்ரீசுதர்சன்னுக்கு இன்று திருநாள்.

வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷ்ணம் கைடபாரே:*

எம்பெருமானுடைய ஸ்ங்கல்பமேதான் திருவாழியாழ்வான் என்று ஸ்ரீஸுதர்சநசதகமும், *சக்ர ரூபஸ்ய சக்ரிண*

அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனின் வாக்கும் போற்றும் ஸ்ரீ சக்கரத்திற்கு இன்று திருநாள்.

பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் , வடிவார்சோதி வலத்துறையுஞ் சுடராழிக்கு பல்லாண்டு மின்னும் ஆழியங்கையனான மஹோபகாரகனான ஸர்வேச்வரனுக்கும் பல்லாண்டு என்றுபல்லாண்டு பாடுவோம்,

ஆயுள், ஆரோக்யம் என்று சகல சுகங்களும் பெறுவோம்.

சுதர்சனம் - சக்கரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்

ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி

ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:

சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

பொருள் :

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,

வல்லமை பொருந்தியதும்,

கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும்,

அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நமோ நமஹா.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling