இன்று ஆனி மாதம், சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.
நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்த *சுதர்ஸனருக்கு* இன்று திருநாள்.
வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்த சுக்ராச்சாரியாரின் எண்ணத்தை திசை திருப்பிய *சக்கரத்தாழ்வாருக்கு* இன்று திருநாள்
ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்ட *திருவாழியாழ்வானுக்கு* இன்று திருநாள்
சிசுபாலனை அழிக்க ஸ்ரீகிருஷ்ணருக்கும் கஜேந்திர மோட்சத்தில் முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றிட திருமாலுக்கும் ஆயுதமான *திகிரிக்கு* இன்று திருநாள்
புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திடவும், மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திடவும்,
கிருஷ்ண பரமாத்மாவுக்கு கைங்கர்யம் செய்த *ஹேதிராஜனுக்கு* இன்று திருநாள்.
துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கிய *சக்கரராஜனுக்கு* இன்று திருநாள்.
சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும்,
இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ள ஸ்ரீ *சுதர்சனாழ்வாருக்கு* இன்று திருநாள்.
தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருக்கும் ஸ்ரீசுதர்சன்னுக்கு இன்று திருநாள்.
27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்!
சுயம்பு முருகனை காண்பது அரிது.
அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில்,
நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.
வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது.
முருகனின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.
27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.