யார் இந்த நாகூர் ஹனிஃபா??
இவர் பாடல் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் எந்த தேர்தலும் நிறைவு பெற்றதாக வரலாறே இல்லை! "ஓடி வருகிறார் உதயசூரியன்" என்ற பாடலை போட்டதும் உடன்பிறப்புகளுக்கு மயிர் கூச்சலிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.. தமிழ்த்தாய் வாழ்த்துப் போல் திமுக மேடைகளில்
ஹனிஃபா பாடல்கள் முதன்மை வரிசை தட்டும்.. பிரச்சாரத்தை முடிக்க நாகூர் ஹனிபா வந்தாலே போது சுமார் லட்சம் ஓட்டுகள் தானகவே விழும். கலைஞரின் உற்றத் தோழன் MGR தன்னை என்னுடன் வா" என அழைத்த போதும், நாகூர் அனிபாவின் பதில் "ஒரே இறைவன் ஒரே தலைவன்" என கலைஞரோடு சாகும் வரை பயணித்த இஸ்லாமியன்..
ஈ.வி.கே.சம்பத்,MGR,வைகோ, போன்றோர் திமுகவின் #ஏக்நாத்சிண்டே ஆன காலத்தில் இவர் எழுதிய "வளர்த்த கிடா மார்பிள் பாய்ந்ததடா" போன்ற பாடல்களினால் திமுக தன்னை உயிர்த்துடிப்போடு வைத்திருந்ததே என்பது நிதர்சன உண்மை... 1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் இவரை சட்டமேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார்
எனக்கு பேச வாராது தலைவரே" என கலைஞரை பார்த்து சொன்ன நாகூராரிடம் சரி "பாடுங்கள்" என்று கலைஞர் அன்புகட்டளையிட்டார்.. பல கட்சி மேடைகளில் நான் கச்சேரிக்காரன் அல்ல கட்சி காரன் என்று அறைக்கூவல் விடுத்தார்.. நாகூர் அனிபா என்னோடு இருந்தால் நான் "திராவிடநாட்டை" பெற்று விடுவேன் என்று அண்ணா
கூறும் அளவிற்கு அவரின் கொள்கை பிடிப்பு பாடல்கள் இருந்தன.. 1953 நெசவாளர்களின் வாழ்க்கை பறிபோனபோது திருச்சியில் துணி விற்று அவர்களின் பசியை போக்கிய இறைவன் அனிபா அவர்கள்.. தன்னால் ஆன பல கொள்கையை ஊட்டி இந்த திராவிட இயக்கத்தை வளர்த்துள்ளார் ஏக இறைவனின் அருட் தொண்டர் அனிபா அவர்கள்
தலைவர் கலைஞரால் "இசைமுரசு" என புகழப்பட்ட அனிபா அவர்களின் மங்காத வரலாற்றை எடுத்துரைக்க இந்த யுகம் போதது என்ற உண்மையோடு , இவரைப் போன்ற ஒரு திடமான கொள்கைவாதிகளை காட்டினால் அவர்களுக்கு நான் அடிமை என்ற சாவாலோடு நிறைவு செய்கிறேன்!! வாழ்க திராவிடம்...! வீழ்க சனாதனம்!! 🖤❤️
💥💥💐💐
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.