#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர்
#சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார்.
• இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
உலகிலேயே மிகப்பெரிய நடராஜராகவும் விளங்குகிறார்.
ஒரு சமயம் சோழ மன்னர் ஒருவரது கனவில் பூமீஸ்வரர் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை ஒன்றை அமைக்கும்படி கூறினார்.
அதையடுத்து, நல்ல அழகிய நடராஜர் சிலை அமைத்திட மன்னன் தனது ஆஸ்தான கலைஞர்களிடம் கூறினான்.
மன்னன் அறிவிப்பின்பேரில் நடராஜர் சிலை செய்து வந்த சிற்பியால், முழுமையான சிலையை சரியாக வடிவமைக்க முடியவில்லை.
அதனால், காலம் கடந்து வந்ததால் மன்னன் கடும் சினத்துடன், ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் சிற்பி சிலை வடிக்காவிட்டால் சிரசேதத்திற்கு ஆளாக்கப்படுவார் என்று உத்தரவிட்டான்.
அதனால் அதிர்ச்சியடைந்த சிற்பி இறைவனையே நினைத்து அமர்ந்திருந்தார்.
அருகில் சிலை செய்வதற்காக பஞ்சலோகக் கூழ் கொதித்துக்கொண்டிருந்தது.
#இறைவனே_சிலையாக
அப்போது, வயதான தம்பதியர் வடிவில் வந்த இறைவன் சிற்பியிடம் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கும்படி கேட்டார்.
மன்னன் கட்டளையால் என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் மனக்குழப்பத்தில் இருந்ததால், வயதான தம்பதியருக்கு பதில் சொல்லாமலே யோசித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் தண்ணீர் கொடுக்கும்படி அந்த தம்பதியர் கேட்க, திரவவடிவமாக கொதிக்கும் உலோகக் கூழ் தான் இருக்கிறது, எடுத்து குடிங்கள் என்று சிற்பி கோபமாக கூறினார்.
அதையடுத்து, அந்த தம்பதியரும் கொதிக்கும் உலோகக் கூழை எடுத்து குடித்தனர்.
மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அங்கு கூழையும் காணவில்லை, வயதான தம்பதியரையும் காணவில்லை.
எம்பெருமானே ஸ்ரீ நடராஜ மூர்த்தியாக அழகிய மூர்த்தியாக, அருகில் சிவகாமி அம்மையுடன் மிகப்பெரிய சிலையாக இருந்தனர்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த மன்னன், அங்கிருந்த நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்து சிற்பியிடம் விசாரித்தான்.
சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய் கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்டுவதற்காக வாளை ஓங்கினான்.
அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து இரத்தம்
வெளியேறியது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் ஏற்பட்டது.
அதையடுத்து, தன் தவறை உணர்ந்த மன்னன், சிவபெருமானிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டு, இறைவன் கூறிய பரிகாரத்தைச்செய்து குணமடைந்தான்.
மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜர் சிலையின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம்.
இந்த நடராஜ மூர்த்தியின் தேகத்தில் மரு, முடி, மச்சம், தேமல்
போன்றவைகள் காணப்படுவதும் கால்களில் ரேகை, நரம்பு இழைகள் தென்படுவதும் உலக அதிசயமாகும்.
அருகில் சிவகாமி அம்மையும் மிகப் பெரிய வடிவில் நடராஜ மூர்த்தியுடன் எப்போதும் மூலஸ்தானத்தில்தான் இருப்பார்.
இந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையும் ஒரு நாளும் கோயிலை விட்டு வெளியே உலா வருவதில்லை
இந்த சம்பவம் நடந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று என்று சொல்லப்படுகிறது.
ஆடல்வல்லானின் இந்த அற்புதக் கோலத்தை தரிசிப்பதால், திருமணத்தடை நீங்குவதுடன், குஷ்டநோய் போன்ற தோல்நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.