#நவ_பாஷாண_முருகன்
*பழனிக்கு அடுத்ததாக நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அதிசய பூம்பாறை வேலப்பர் ஆலயம்.*
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கும் பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் ஆலயம்.
10 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் போகர் அவர்கள் சீனாவிலிருந்து திரும்பினார்.
அதாவது பழனி ஆண்டவர் சிலையை செய்து முடித்த பின் அவர் சீனா சென்றார்,
அங்கிருந்து திரும்பிய பிறகு அவர் மற்றொருநவபாசன சிலையை செய்தார்.
அந்த திருச்சிலை பழனிக்கும் பூம்பாறைக்கும் ( இன்று அது மேற்கத்திய மலைகள் என அழைக்கப்படுகிறது) நடுவே அமைந்தது.
இந்த இடத்தை யானை கஜம் ( போகர் காடு) என்றும் அழைக்கின்றனர்.
கோவிலில் உள்ள கல்வெட்டுக்களின் படி இந்த கோவில் சேர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது.
இக்கோவில் பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.
இந்தியாவிலேயே நவபாசனத்தால் ஆன சிலை என்பது இரண்டே இரண்டு தான்.
ஒன்று பழனி மலையில் உள்ள முருகர், மற்றொன்று பூம்பாறை முருகர்.
பழனி முருகரை போலவே சக்தி வாய்ந்தவர் குழந்தை வேலப்பர் என்பது அங்கே சென்று வந்தவர்களின் வாய்மொழி.
இக்கோவிலில் குறித்து சொல்லப்படும் புராணங்கள் யாதெனில்,
பராமரிப்பு இன்றி இக்கோவில் ஒரு காலத்தில் இருந்தது.
அப்போது அந்த பகுதிக்கு வேட்டையாட வந்த சேர சாம்ரஜ்ஜியத்தை சேர்ந்த மன்னர் இந்த கோவில் அமைந்திருந்த பகுதிக்கு அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது முருகப்பர் அவர் கனவில் தோன்றி இந்த இடத்தை மீட்டெடுக்குமாறு சொல்லவே,, அந்த மன்னர் இக்கோவிலை மீட்டெடுத்தார்.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் மற்றொரு வரலாறு யாதெனில்,
பூம்பாறை முருகரை வழிபட வந்தார் அருணகிரிநாதர்.
அப்போது இரவாகி விட்டதால் அங்கேயே உறங்கிவிட்டார் அந்த பகுதியில் இருந்த ராட்சசி ஒருவர், அருணகிரி நாதரை தாக்க முற்பட்டார்.
அப்போது அவரை காத்தருள எண்ணிய முருகப்பெருமான் குழந்தை வடிவெடுத்து அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடினார்.
அப்போது ஒரு தாயும் குழந்தையும் தான் உறங்கி கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணிய ராட்சசி அவரை தாக்காமல் சென்றார்.
குழந்தை வடிவில் வந்த அருணகிரி நாதரை காத்தருளியதால் இங்கிருக்கும் முருகப்பெருமான் குழந்தை வேலப்பர் என்றழைக்கப் படுகிறார்.
குழந்தை ஸ்ரீ வேலப்பர் சுவாமியை அனைவரும் தரிசனம் செய்து திருவருள் பெற வேண்டுகிறேன்.
#குழந்தை_வேலப்பர்_சுவாமி
#கௌமாரம்
#முருகன்வழிபாடு #ஓம்குமாராயநமஹா
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.