M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Jul 15, 2022, 12 tweets

#சாளக்கிராமம்_சிறப்புகள்

சாளக்கிராமம் உள்ள வீடு பாடல் பெற்ற தலத்தின் சிறப்பினைக் கொண்ட புண்ய க்ஷேத்ரம்.

12 சாளக்கிராமம் கொண்ட வீடு ஒரு திவ்ய தேசம்
ஆகும்.

அங்கு லக்ஷ்மி நித்ய வாசம் செய்கிறாள்.

மேலும் பாவங்கள் குறைந்து அழிந்து விடும்.

மஹாபெரியவா ஒருமுறை,

"எங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஒரு குறையும் வருவதில்லை.

அதைச்சுற்றி சுமார் 2km தூரத்திற்குள் உயிர் விடும் எந்த உயிரினமும், அதன் கடைசி நேரத்தில் அந்த புண்ணிய பூஜையின் அதிர்வுகளை பெற்று...

வாசனைகளும் , வினைகளும் குறைந்து சாந்தியாக, அமைதியடைந்து அதனால் அதன் மறுபிறவி மிக சிறந்ததாக அமையப் பெறுகின்றன " என்று கூறி இருக்கிறார் .

மேலும் அந்த
வீட்டிலுள்ளோர்கள் கொடிய மரணம் , மோசமான விபத்துகள் , துர்மரணம் போன்றவை சாளக்கிராம பூஜை நடைபெறும் வீட்டில் நிகழ்வதில்லை.

தமிழ் திருமுறைகள் , திவ்யப் பிரபந்தங்கள் முதலியன பாடி ,

அபராத சமரோபணம் செய்து, நமஸ்கரித்து,

அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய பிரசாதம்

வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து, நாமும் தீர்த்தம் பருகி , பிரசாதம் உண்டு , ஆராதனக்ரமம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாம்

சாளக்கிராம கற்களின் நிறங்களும் வடிவங்களும் அதன் பலன்களும்
முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக
கருதப்படுகிறது.

மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.

சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.

முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும்.

இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.
இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.

வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.

குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும்.

அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.

நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.

பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தையும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.

வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.

சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டும் என்பர் .

12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலச் சொத்தாக கருதுவர்.

சாளக்கிராமத்தை காலை , மாலை இருமுறை வழிபடுதல் வேண்டும்.

சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட அவதாரம் எடுத்த திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.

வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

#சாளக்கிராம_சிறப்புகள்

#சாளக்கிராம_பூஜை

#ஸ்ரீவைஷ்ணவம் #பெருமாள்வழிபாடு #ஓம்நமோநாராயணாய

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling