யார் இந்த அன்பில் தர்மலிங்கம்?
"உண்மையான அரசியலை நீ பேசவில்லையெனில் வெறுப்பு அரசியலால் நீ ஆளப்படுவாய்" ரஷ்ய மண்ணின் மைந்தன் லெனின் அவர்களின் புகழ்மிக்க வசனம்,ஆம். திமுகவின் வேரை அடியோடு அழிக்க நினைக்கும் போது ஒரு பெயர் தோன்றும் அழிக்க நினைத்தவன் அந்த பெயரை பார்த்ததும், தானாகவே
அழிந்துபோவான், ஆம் அந்த பெயர் அன்பில் தர்மலிங்கம்.. நவீன திருச்சியின் விடியலுக்கு அச்சாரம் போட்டவர், ஒருங்கிணைந்த திருச்சி மாநகரின் மாவட்டச் செயலாளர், அண்ணாவின் மனசாட்சி, தலைவல் கலைஞரின் நாடித்துடிப்பு, தளபதியாரின் முன்மாதிரி,திமுக தொண்டனின் அணுஆயுதம் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே
போகலாம் இந்த மாமன்னனின் வரலாற்றை.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல் என்ற கலகக்குரலுக்கு சொந்தகாரன், திருச்சி திமுக மாநில மாநாட்டிற்கு தொண்டர்களை எப்படி அழைப்பதென்று? திக்குதெரியாமல் நின்றுகொண்டிருந்த பேரறிஞர் அண்ணா எய்திய பிரம்மாஸ்திரத்திற்கு பெயர் தான் " அன்பில் தர்மலிங்கம்"
"அன்பில் அழைக்கிறார்" என்று அண்ணா பத்திரிக்கைகளில் எழுதிய போது லட்சோப லட்சம் தொண்டர்கள் திருச்சியை ஆக்கிரமித்தனர்.. திமுக ஆட்சிக்கு அடித்தளம் போட்ட மாநாடு, 1967 உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1972ல் வேளாண் துறை அமைச்சராகவும் தன் தியாக வாழ்வை தொடர்ந்தார். அன்பிலார்,
இந்தியாவின் முதல் #ஏக்நாத்_சிண்டே வான MGR ஜெயாவின் பேச்சை கேட்டு திமுகழகத்தை விட்டு வெளியேறிய போது கலைஞரின் தோளோடு தோள்நின்றவர்களில் அன்பில் தர்மலிங்கம் முதன்மையானவர்.தன்னை விட வயதில் கலைஞர் இளையவர் என்றாலும் அவரின் தலைமையே உலகின் சிம்மாசனமாக வைத்து வாழ்ந்தவர் தான் அய்யா அன்பில்
தர்மலிங்கம் அவர்கள்,
"யோவ்,தர்மா அவன் உன்னவிட சின்னவன் யா, அவன் தலைமையை போய் நீ ஏற்கலாமா?என்னோடு வாந்திடு ராஜமரியாதை தருகிறேன்" என்று ஆசை வார்த்தி காட்டி MGR அழைத்த போது! அன்பில் அய்யாவின் பதில் "அடாச் சீ" என்று மகோராவிற்கு பதிலடி கொடுத்தார்... கலைஞரின் உற்றாந்துணையாக தன் வாழ்வை
கழித்ததோடு மட்டுமில்லாமல்? இந்த இயக்கம் நூற்றாண்டை நோக்கி வீறுநடை போட காரணமாயிருக்கும் அய்யா அன்பில் தர்மலிங்கத்தின் பாதங்களை திமுககாரர்களாகிய நாம் வணங்குவோம்!! திராவிடம் மறவாது இந்த மாணிக்கத்தை 🙏🙏🙏💥💥💥🔥🔥🔥🔥
#Dravidian_Leaders 🖤❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.