ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Jul 26, 2022, 6 tweets

யார் இந்த ஆர்.எஸ்.பாரதி??

"இராஜதந்திரம் முடிந்ததும், போர் தொடங்குகிறது" ஆம்,ஹிட்லரின் வரிகள் இவை.தலைவர் கலைஞர் மீது எதிரிகள் கல்லெறியும் போது அதை முன்னின்று தன் மீது வாங்கிக் கொண்டு அந்த கல்லை கலைஞருக்கு பூமாலையாக போடுவதை தன் பொதுவாழ்வில் பாதி நாட்களை தனம்செய்த ஒரு தொண்டன்

தான் அய்யா ஆலந்தூர் பாரதி அவர்கள். திமுகவின் மீது பழி சுமத்தப்படுகிறபோதெல்லாம், இந்த இயக்கித்தின் பாதுகாவலனாக நின்ற பாமரனின் வழக்கறிஞர், தலைவர் கலைஞரின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர், அண்ணாவின் கொள்கைவாதி, பெரியாரின் பிடிவாதி, தளபதியின் சிந்தாந்தவாதி என்றெல்லாம் புகழப்படுக்கின்றவர்

தான் அய்யா RSபாரதி.. ஆலந்துர் நகர்மன்றத் தலைவராக தன் வாழ்வை தொடர்ந்த அய்யா பாரதி அவர்கள், தான் கொண்ட கொள்கையின் பயனாக இன்று மிகப்பெரிய கட்சியின் அமைப்புச் செயலாளராக உயர்ந்துள்ளார். தன் தலைவன் மீது செருக்கு ஏற்படும் போதெல்லாம் அந்த செருக்கை நீங்கும் பொறுப்பை ஏற்றவர் பாரதி அவர்கள்.

டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்தவர் தான் அண்ணன் பாரதி. அந்த வழக்கில் தற்போதைய அட்வகேட் ஜெனரல் திரு சண்முகசுந்தரத்தையும், RSபாரதியையும் கொலை முயற்சி செய்த அதிமுகவினரிடமிருந்து தப்பித்து கொண்ட பாரதி, அந்த வழக்கில் மேலும் தீவிரத்தைக் காட்டினார்,

கடைசி வரையில் ஜெயலலிதாவின் ஆணவக் கண்னை தன் நுனி விரல் கொண்டு தோண்டி எடுத்த திராவிடத்தாயின் திருமகன். உயிரை எடுக்க நினைத்த ஜெயாவின் நிம்மதியை உருக்குலைத்து செய்த உண்மையான வழக்கறிஞர்.. ஆலந்தூர் மக்களின் அன்பை பெற்றவர். அவ்வப்போது அதிகாரவர்க்கத்தின் திமிர்தனை அவையில் பேசுவது இவரின்

இயற்கை குணமாகும்..லட்சியவாதி எப்போதும் பொதுநலத்தை விரும்புவான்.ஆம், அந்த வரிசையில் தளபதிக்கு பிசிராந்தையாராக தொடர்கிறார்.. வெல்லட்டும் உன் அரசு!
கொட்டட்டும் போர் முரசு!! 💪💪💥💥💥💥🖤❤️🙏🙏🙏

வாழ்த்துக்கள் அய்யா @RSBharathiDMK 💐💐💐

#Dravidian_Leaders 🔥🔥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling