ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Jul 27, 2022, 7 tweets

யார் இந்த வில்சன்??

உலக வரலாற்றில் சில சட்டப் போராட்டங்கள் இடம் பெரும். அப்படி, ஒரு சட்டப் போராட்டம் உலகத் தமிழினத் தலைவர் கலைஞருக்கானதாக எழுதப்படும் போது தவிர்க முடியாத ஒரு பெயர தான் வில்சன்.
சட்ட விதிகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும்
திராவிடத்தின் தன்னிகரில்லா வழக்கறிஞர்,

கலைஞரின் WinSun, தளபதியின் நீதி, திமுக தொண்டனின் கடைசி ஆயுதம், ஒரு அரசியல் கட்சியின் ஆகப்பெரும் சட்டத்திருத்தம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த வாதறிஞரின் புகழை!!. ஒவ்வொரு சாமானியன் தனக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய காலமும் உண்டு.ஆனால், தன்னிடம் நீதியை

வேண்டி வருவோர்களிடம் நீதியை உடனடியாக பெற்றுதரும் பெரியாரின் சீடர் தான் அண்ணன் வில்சன் அவர்கள்.. திராவிடப் பட்டறையில் பயின்ற இந்த வழைக்குறைஞர் பல உயர்நீதிமன்றங்களில் ஆணித்தரமான வழக்குகளை தன் சுண்டு விரலில் வாதத்தை அரங்கேற்றி வெற்றிநடை போடுவார்.. உலகத் தமிழினத் தலைவர் கலைஞர் மறைந்த

போது, ஒருபுறம் தமிழகமே தலைநகரில் திரண்ட போது, தன் தலைவனுக்கான ஆறு அடி இடத்தை தர மறுத்த அடிமைச்சாமியின் அகங்காரத்தை ஓடுக்கிய ஒரு சாமானியனின் வழக்கறிஞர் தான் வில்சன்.. என்ன செய்வதென்று திக்குதெரியாமல் விழித்த திமுகவினருக்கும், தளபதிக்கும் "கவலைப்பாடாதே! தலைவா, இப்போது பார் என்று"

தன் சட்டப்போராட்டத்தை நடத்தி, தலைவர் கலைஞரின் ஆசான் அண்ணாவின் நினைவகத்திற்கருகே கலைஞர் பெருமானை பள்ளிகொள்ள வைத்தவர் தான் பி.வில்சன்..! "எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றி"என்று அனைத்து வழக்குகளையும் தன் வாதத்திறமையால் எதிர்த்துப் போர்புரியும் சாணக்கியனாக

தன் சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்.. 27% சதவிகித OBC இட ஒதுக்கீட்டில் முதல்வர் தளபதியை இந்தியாவே திரும்பிப்பார்க்க காரணமாய் இருந்தவர்.. இவரின் வாதத் திறமையை பார்த்த மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு ஓப்புதலுக்கு பதில் கூறாமல் வழக்கில் தோல்வியுற்று வடநாட்டை நோக்கி ஓடி

போனது."நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"என்ற நிகழ்கால நக்கிரனாக ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் இந்த பாமரனின் வழக்கறிஞரை நாம் தானே தூக்கி கொண்டாட வேண்டும்!! வாழ்த்துக்கள் @PWilsonDMK சார்..
தொடரட்டும் உங்கள் திராவிடத் திருப்பணி. 💐💐

#Dravidian_Leaders 🔥
💥💥🙏🙏🖤❤️

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling