யார் இந்த SJ சாதிக் பாஷா??
திமுக வரலாற்றில் இன்றளவும் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படுவது யாருக்கேனும் தெரியுமா? அந்த பதவிக்கு பெயர் "பொருளாளர்". ஏன் அந்த பதவிக்கு சம்பளம் தரக்கூடிய நடைமுறை வந்தது? சொல்கிறேன்!! ஒரு நேர்மையான அரசியல் வாதியை கழகம் பெற என்ன தவம் செய்ததோ
தெரியவில்லை!! அந்த நேர்மைநாதனுக்கு பெயர் தான் "உடுமலை சாதிக் பாஷா".. சிலருக்கு கக்கனையும், காமராசனையும் மட்டுமே தெரியும். இன்றய இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத ஒரு பெயர் தான் சாதிக் பாஷா!! வாழ்வில் வசந்தங்களை தொலைத்து தமிழரின் நலனுக்காகவே தன் வாழ்நாளை கழித்த கறைபடியாத
கரத்திற்குச் சொந்த காரர்.. EVKS இளங்கோவன், MGR, சத்தியவாணி, போன்றொரெல்லாம் திமுகழகத்தை விட்டு ஓடிய போது கலைஞரின் தோளை தட்டிய மகாத்மா தான் அய்யா "சாதிக் பாஷா" அவர்கள்.. வருவாய்த்துறை அமைச்சராக தன் வாழ்நாளை வறுமையோடு கழித்த வரலாற்றிற்குச் சொந்தகாரர்..எப்போதும் கட்சியின் ஆடம்பரச்
செலவுகளை குறைத்து கட்சியின் நிதிப் பெருக்கத்திற்கு பங்காற்றிய பகுத்தறிவான். ஒருமுறை இவரின் மனைவி "ஹஜ் பயணம் செல்ல ஆசையாக உள்ளது என்று இவரிடம் கேட்ட பொழுது"உன் ஆசைக்காக நான் கடன்காரனாக முடியாது, அவ்வளவுத் தொகைக்கு நான் கொள்ளை அடிக்கத்தான் முடியும்" என்று பதிலளித்துவிட்டு சென்றார்.
இதனை கலைஞரிடம் தெரியப்படுத்திய அவரின் துணைவியாரின் சொல்லாடலைக் கேட்டு உடனடியாக திமுகவின் பொருளாளர் பதவிக்கு மாதச்சம்பளத்தை அறிமுகப்படுத்தினார்..இன்று வரை திமுகவில் பொருளாளர் பதவிக்கு மட்டுமே அந்த நடைமுறை தொடர்கிறது.. 20 ஆண்டுகால பொருளாளர் பதவியில் கட்சியின் கொள்கைக்கு மீறி அவர்
சென்றதே இல்லை. தலைவர் கலைஞரின் ஒரு பக்க நிழலாக அய்யா சாதிக் பாட்சா வலம் வந்தார் என்பதே நிதர்சன உண்மை..பெரியார் கண்டெடுத்த பெண்ணூரிமைப் போராளி, அண்ணா கண்டெடுத்த நல்முத்து, கலைஞர் கண்டெடுத்த கதாயுதம்,திராவிடம் கண்டெடுத்த தீரன் என்றெல்லாம் இந்த மாமன்னனின் வரலாற்றை பெருக்கிக் கொண்டே
இளைய தலைமுறை திமுகவினர் பாமரனிடம் கொண்டு செல்ல ஒரு தலைவரை நாம் தவறவிட்டோம் என்பதே வரலாற்று சாட்சி.. இவரைப் போன்ற அரசியல் வாதி ஏதோ ஒரு மூலையில் இன்னும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.. அய்யாவின் புகழ்பாடுவோம்!! அவர் விட்டதை எட்டிப் பிடிப்போம்!!
#Dravidian_Leaders 💥💥💥🙏🙏🖤❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.