அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jul 29, 2022, 33 tweets

#கனகதாரா_ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் மேல் #ஸ்ரீஆதிசங்கரர் அருளியது இந்த ஸ்லோகம். அவர் பாலகனாக பிக்ஷை எடுக்க சென்றபோது ஒரு வீட்டில் மிகவும் எழ்மையான நிலையில் இருந்த பெண்மணியிடம் பிக்ஷை இட ஒரு நெல் மணி கூட இல்லை. வந்து நிற்கும் குழந்தைக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று வீட்டில் தேடி

பார்க்க, ஓர் அழுகிய நெல்லிக்கனி மட்டுமே கிடைத்தது. அதை அவருக்கு பிக்ஷை இடுகிறார். அவள் நிலை கண்டு மிக மனம் வருந்திய சங்கரர் மகாலக்ஷ்மியின் மேல் மனமுருகி பாடுகிறார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, அப்பெண்மணியின் பாவங்களை மன்னித்து தங்க நெல்லிக்கனிகளாக வீட்டின் கூரையின் மேல்

பொழிகிறார் கருணையே வடிவான தாயார். ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர ஸ்லோகங்களும் அதன் பொருளும்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல ததவதாயா:|l

'முகுலாபரணம் தமாலம்' - பச்சை வர்ணத்தில் இருக்கும் தமால

மரத்தில், சின்னச்சின்ன பூ மொட்டுகளால் ஆபரணமாக அலங்கரிக்கப்பட்ட மரத்தின் மேல்
'பிருங்காகனேவ' - பிருங்க: வண்டு. பிருங்காங்கனா- அந்த மொட்டுகளோடு கூடிய மரத்தின்மேல் வண்டுகள் அமர்ந்திருப்பது போல
'ஹரேஹே' - மஹா விஷ்ணுவினுடைய அங்கம், சரீரம், சரீரத்தில்
'புளக பூஷணம்' - புளகம் மயிர்

கூச்சல் ஏற்படறது. அது ஏனென்றால் தாயார் பார்க்கிறார். அந்த சந்தோஷத்தில் இவருக்கு மயிர் கூச்சல் ஏற்படுகிறது. மகாலக்ஷ்மியின் பார்வை மலர் மொட்டுகளில் உட்கார்ந்து இருக்கிற பொன்வண்டு போலுள்ளது என்று சொல்கிறார்.
'அங்கீ கிருதாகில' – அனைத்து ஐஸ்வரியங்களும் உலகத்தில யாருடைய அங்கமோ அப்படி

மகாலக்ஷ்மியின் வடிவமே ஐஸ்வர்யங்கள் நிரம்பியது. எப்படி பகவான் கீதையில் எல்லா விபூதிகளும் என்னிடமிருந்து உண்டானவை என்று சொல்கிறாரோ, அதே போல தாயாரும் ஐஸ்வரிய வடிவம்.
'மங்கள தேவதாயா' - பரம மங்கள வடிவம், லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்
'மாங்கல்ய தா அஸ்து' - மங்களங்களை அளிப்பதாக எனக்கு

'மம மாங்கல்யதா அஸ்து' எனக்கு தாயாருடைய கடாக்ஷம் மங்களங்களை அளிக்கட்டும்.

2. முக்தா முஹூர்:விதததீ வதனே முராதர:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருஷோ: மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||

'முராரி' - முரனை ஜெயித்தவன் 'ஸாகரஸம்பவாயா' பாற்கடலில் இருந்து

பிறந்தவள். விஷ்ணு பகவான் தேவர்களுக்கு சஹாயம் பண்றார். கருடனை கொண்டு, மந்திர மலையை கொண்டு வந்து கடல்ல வைக்கச் சொல்கிறார். கூர்மாவதாரம் எடுத்து தாங்குகிறார், தேவர்கள் பக்கம் நின்று, மோகினி அவதாரமெடுத்து, தேவர்கள் அந்த அமிர்தத்தை அடையும்படி செய்கிறார். இதற்கு அவருக்கு ஒரு பெரிய

பரிசு கிடைத்தது.
'ஸாகரஸம்பவாயா' பாற்கடலில் உதித்த மகாலட்சுமியே அவருக்கு மாலை இடுகிறார். இங்கேயும் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை பார்க்கறார்
'வதனே முராரேஹே' விஷ்ணு பகவானின் முகத்தில்
'த்ருசோஹோ' லட்சுமிதேவியின் பார்வை 'ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி' பிரேமை என்றால் அன்பு, த்ரபான்ன என்றால்

வெட்கம், இரண்டு உணர்வுகளும் மாறி மாறி உந்தப்பட்டு,
'கதாகதா' - வந்து வந்து போகின்றன. 'முஹுஹு:' மீண்டும் மீண்டும் இப்படி அந்த முகத்தில் போய் அமர்ந்து விட்டு வரும். இந்தப் பார்வையானது,
'மஹோத்பலே' உத்பலம் என்றால் நீலமான மலர்,
'மதுக்கரிவ' மதுகரி என்றால் தேனீ தான். தேனீ கூட்டம்

அந்த மலர்கள் மேலமர்ந்து ஒரு மாலை போலுள்ளது. தாயாரின் கடாக்ஷம்
'முக்தா' ரொம்ப அழகான மந்தஸ்மிதத்தோட இருக்கு அழகாக விளங்கும், மகாலட்சுமியின் பார்வை,
'மே ஸ்ரியம் திசது' சிரேயத்தை அளிக்கட்டும், செல்வங்களை அளிக்கட்டும். தாயாருடைய கடாக்ஷம் நமக்கு செல்வங்களை அளிக்கட்டும்.

3. விஶ்வாமரேன்த்3ர பத3 விப்4ரம தா3னத3க்ஷம்
ஆனந்த3ஹேதுரதி4கம் முரவித்3விஷோபி ।
ஈஷன்னிஷீத3து மயி க்ஷணமீக்ஷணார்த4ம்
இன்தீ3வரோத3ர ஸஹோத3ரமின்தி3ரா யா: ॥

விஶ்வாமரேன்த்3ர பத3 விப்4ரம தா3னத3க்ஷம் – இந்திர பதவியில் பலவிதமான போகங்கள், கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் உள்ளது,

ஒளிமயமான தேகம், என்றும் இளமை, அளவற்ற செல்வம், இவ்வாறு இந்திர பதவியில் உள்ளது. அந்த இந்திர பதவியில் கிடைக்கிம் எல்லாவிதமான போகங்களும், அதற்கு மேலும்
தா3னத3க்ஷம் – இங்கேயே நமக்கு கொடுக்கக்கூடிய, தானம் பண்ண கூடிய திறமை கொண்ட லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்,
ஆனந்த3ஹேதுரதி4கம்

முரவித்3விஷோபி – முரன் என்ற அரக்கனுடைய, வித் விஷ: எதிரியான விஷ்ணு பகவானுக்கு, ஆனந்த3ஹேதுரதி4கம், அதிகமான ஆனந்தத்தை அளிப்பதில் காரணமாக இருப்பது தாயாரின் கடாக்ஷம். இந்திராதி தேவர்கள், நாம் அனைவரும், லக்ஷ்மி தேவியின் குழந்தைகள். நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கொடுக்கிறாள். தன் கணவரான

விஷ்ணுபகவானை பார்த்தால் தாயாருக்கு மகிழ்ச்சி. தாயாரை பார்த்தால் அவருக்கு ஆனந்தம் அதிகமாகிறது,
ஆனந்த3ஹேதுரதி4கம் – அந்த இந்திராயா: லட்சுமிதேவியினுடைய ஈக்ஷணம் அப்படி என்றால் பார்வை, ஈக்ஷணார்த4ம் – பாதி பார்வை, அதாவது கடைக்கண் பார்வை, ஈஷது – அந்தக் கடைக் கண் பார்வையில் ஒரு சொட்டு,

மயினிஷீத3து – என்மேல் விழட்டும். அந்தக் கடாட்சம் எப்படி இருக்கும் என்றால் இன்தீ3வர ஸஹோத3ரமின்தி3ரா யா – நீலோத்பல புஷ்பத்தினுடைய மத்திய பாகம் அது தனி அழகாக இருக்கும், அதுக்கு சமானமான அம்பாளுடைய கடாக்ஷம், அந்தக் கடைக்கண் பார்வையில் ஒரு துளி, என்மேல் அரை கணம் படட்டும்,

4. ஆமீலிதாக்ஷமதி4க3யம முதா3 முகுன்த3ம்
ஆனந்த3கன்த3மனிமேஷமனங்க3 தன்த்ரம் ।
ஆகேகரஸ்தி2தகனீனிகபக்ஷ்மனேத்ரம்
பூ4த்யை ப4வன்மம பு4ஜங்க3 ஶயாங்க3னா யா: ॥
பு4ஜங்க3 ஶய: - பாம்பணை மேல் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் அனந்த சயனப் பெருமாள், அந்த பெருமாளின் அங்கனா- மனைவி லக்ஷ்மி தேவி.

பாற்கடல் இரண்டு பேருக்கும் பிடித்த இடம். பாற்கடலில் தான் லக்ஷ்மி தேவி பிறந்தாள். அதனால் அவளுக்கு அது பிறந்த வீடு. மகாவிஷ்ணு எப்பவுமே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே இருவரும் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன்,
ஆமீலிதாக்ஷம் – கண்கொட்டாமல் தன் பார்யையான

லக்ஷ்மி தேவியை, பர்த்தாவான மகாவிஷ்ணு பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
அதிகம்ய – நிமிர்ந்து பார்த்த உடனே அவர் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்து, ஆனந்த கந்தம் – ஆனந்தத்தை அளிப்பதும், அனிமேஷம் – அப்படியே வியப்பில் கண்கொட்டாமல் பார்த்து,
அனங்க தந்த்ரம் – ஆசையை உண்டு

பண்ணுவதுமான,
பு4ஜங்க3 ஶயாங்க3னா யா: –
மகாலக்ஷ்மி வெட்கத்தில் கண்ணை மூடிக்கொள்கிறாள்.
ஆகேகரஸ்தி2தகனீனிகபக்ஷ்மனேத்ரம் – பாதி மூடிய கருவிழிகளோடும் இமைகளோடு அழகாக விளங்கும் லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்,
மம பூ4த்யை பவேத் – எனக்கு ஐஷ்வர்யத்தை அளிப்பதாக ஆகட்டும், என அருமையான பிரார்த்தனை.

5. பா3ஹ்வன்தரே மது4ஜித: ஶ்ரிதகௌஸ்துபே4 யா
ஹாராவலீவ ஹரினீலமயீ விபா4தி ।
காமப்ரதா3 ப4க3வதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயா யா:

மது4 ஜித: மது என்கிற அரக்கனை ஜெயித்த விஷ்ணு பகவானின், பாஹ்வந்தரே – பாஹு கைகள், பாஹ்வந்தரே என்றால் கைகளுக்கு இடையில், அதாவது திருமார்பில்,

ஶ்ரிதகௌஸ்துபே4 - கௌஸ்துப மணி அணிந்து கொண்டிருக்கிறார், அந்த கௌஸ்துப மாலையை சுற்றி, ஹரிநீலமயி ஹாராவலீவ - ஹரி நீல ரத்னம் என்பது மிக அழகாக இருக்கும், அது இருக்கும் இடத்தில செல்வம் பெருகும். அந்த ஹரிநீலமயீ – அந்த ஹரிநீல கற்களாலான மாலை, ஹாராவலீவ – ஒரு மாலை இல்லை, வரிசையா மாலை, அந்த

கௌஸ்துப மணியை அலங்கரிப்பது போல, வரிசையாக அது மேல் ரத்னங்களாலான ஒரு மாலை, விபா4தி – ஒளி விடுகிறது என்கிறார். இது எந்த மாலை என்றால் கடாக்ஷ மாலா, கமலாலயாயா: – தாமரையில் உதித்த, லக்ஷ்மிதேவியினுடைய கடாக்ஷ மாலை, இப்படி பெருமாடைய மார்பில் கௌஸ்துபத்துக்கு மேல விளங்கிக் கொண்டிருக்கிறது.

காம பிரதா3 பக4வதோபி – நமக்கெல்லாம் ஆசையை பூர்த்தி பண்றதில்ல இந்த கடாக்ஷ மாலா, பகவதோபி – சுவாமிக்கே ஏதாவது ஆசை என்றால் இந்த கடாக்ஷம் தான் பூர்த்தி செய்கிறது, அந்த லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்
மே கல்யாணமாவஹது – எனக்கு மங்களங்களை அளிக்கட்டும்.

6. காலாம்பு3தா3லீ லலிதோரஸி கைடபா4ரே:

தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ ।
மாதுஸ்ஸமஸ்தஜக3தாம் மஹனீயமூர்தி:
ப4த்3ராணி மே தி3ஶது பா4ர்க3வனந்த3னா யா: ॥

பிருகு என்கிற முனிவருக்கு மகளாக லக்ஷ்மி தேவி ஓர் அவதாரம் செய்ததால், தேவிக்கு பார்கவ நந்தனா என்று ஒரு நாமம். அந்த லக்ஷ்மி தேவி எங்க இருக்கிறார் என்றால் பெருமாளின்

திருமார்பில் இருக்கிறார். அதன் தோற்றம் காலாம்புதாலீ லலிதோரசி – நீருண்ட மேகம் போல் கருத்த அழகான,
கைடபா4ரே : கைடபன் என்ற அசுரனை ஜெயித்த விஷ்ணு பகவானின்,
உர – மார்பில்
தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ – தடித்ன என்றால் மின்னல் மேகத்துக்கு,
தா4ராத4ரே அங்கனேவ அந்த மேகத்தின் இடையில்

கரிய திருமாலின் மார்பில், விளங்கும் லக்ஷ்தேவி ஒரு மின்னலைப் போல ஜொலிக்கிறார். அந்த தாயாரின் கடாக்ஷம்
ப4த்3ராணி மே தி3ஶது – எனக்கு மங்களங்களை அளிக்கட்டும் என்கிறார்.

7. ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகராலய கந்யகாயா:

மாங்கல்ய பாஜி- சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கும் திருக் கண்கள் கொண்டவளே
மது மாதினி - மது என்ற அசுரனைக் கொன்ற மகா

விஷ்ணுவினடத்தில்,
மன் மதேந யத்ப்ரபாவாத் ப்ரதமத: பதம் ப்ராப்தம் - முதல் முதலில் மன்மதனுக்கு விஷ்ணுவின் மனத்தில் இடம் பிடிக்க லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் எப்படி உதவியதோ, அந்த கடாக்ஷம்
மய்யாபதேத் - என் மேல் கொஞ்சம் விழட்டும்
மகராலய - மகரம் போன்ற நீர் வாழ் பிராணிகள் நிரம்பிய கடலுடைய

கந்யகாயா: - மகளான லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் எப்படி போகிறது என்றால்
மந்தாலசம் - மெதுவாக போகிறது,
தத் ஈக்ஷனார்த்தம் - கடைக்கண் பார்வை மனமதனுக்குக் கிடைத்து போல எனக்கும் கிடைக்கட்டும். பெருமாளிடம் பிரமையோடு இருக்கக் கூடிய கடாக்ஷம் என்னிடம் கருணையோடு இருக்க வேண்டும் என்கிறார்.

8. தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிஷௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மப நீய சிராய தூரம்
நாராயணப் பிரணயினி நயனாம்புவாஹ:
விஹங்க சிசு - சாதக பக்ஷியின் குஞ்சு போல, பசியில் குஞ்சு வீல் வீல் என்று கத்தும். அந்தமாதிரி இவாளுடைய கஷ்டம், வறுமை. துஷ்கர்மா - இருக்கு

தான், வினைகளினால் தான் கஷ்டப்படுகிறாள். ஆனா என் மேல் அன்பு காட்ட்டினாள். அதனால் நான் உன்னிடம் வேண்டுகிறேன். உன்னுடைய கருணையினால் இவ்வம்மையாருக்கு நீ செல்வத்தைப் பொழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதே மாதிரி தங்க நெல்லிக்காய் ஒரு முகூர்த்த காலம் திண்ணையில மழையா கொட்டுகிறது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling