என்னது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மட்டும் ஜுராசிக்பார்க்ல DNA டைனோசர்ன்னு Genetics பேசல நம்ம சிம்பு தேவனும் புலிகேசில முக்கியமான மரபணு கோட்பாடு பத்தி பேசிருக்காரா?
எப்படி மரபணுக்களைத் தாண்டி புறச்சூழல் ஒருத்தர செதுக்கும்ன்னு புலிகேசியும் உக்கிரபுத்தனும் தான் நமக்கு சொல்றங்களா? (1/8)
புலிகேசியும் உக்கிரபுத்தனும் identical twins. அப்படினா அவங்க ரெண்டு பேரும் ஒரே கருவிலிருந்து splitஆகி இரண்டு உயிர்களா உருவானவங்க. அவங்களோட மரபணுக்கள் கிட்டத்தட்ட 99.99% ஒரே மாதிரி இருக்கும். அப்புறம் எப்படி புலிகேசி டம்மியாகவும் உக்கிரபுத்தன் திறமைமிக்கவனாகவும் இருந்தாங்க? (2/8)
திறமைக்கும் மரபணுக்கும் சம்பந்தம் இல்லையா?
இங்க தான் புறச்சூழல் sceneகுள்ள வருது. பொதுவா நம்மளுடைய எந்தெந்த பண்புகளெல்லாம் ஒற்றை மரபணுக்களால தீர்மானிக்கப்படுகின்றதோ அவையெல்லாம் மிகக் கண்டிப்பான மரபணு கட்டுப்பாட்டில் இருக்கும்.(3/8)
உ: கருவிழியின் நிறம். நீங்க எந்த நாட்டுல பிறந்தாலும் உங்கள் பெற்றோரிடம் இருந்து பெற்ற மரபணுப்படி தான் உங்கள் விழியின் நிறம் இருக்கும். எந்த சூழலிலும் அது மாறாது. (4/8)
எந்த பண்புகளெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதோ அவையனைத்தயும் மரபணுக்கு நிகராக புறச்சூழலும் கட்டுப்படுத்தும். உ: ஒருவரின் உயரம். நீங்கள் எவ்வளவு போஷாக்கான உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப்பொருத்து உங்களின் உயரம் மாறுபடும். (5/8)
அதைப்போலத்தான் ஒருத்தரோட அறிவும் திறமையும். நமது அறிவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணுக்கள் நிர்ணயம் செய்கின்றன. More the genes for a trait, more the influence of environment. அப்படியெனில் புறச்சூழலின் தாக்கம் அதில் எவ்வளவுதூரம் இருக்கும் என்று எண்ணி பாருங்கள் 6
#அறிவோம்_மரபியல்
சரி இப்போ நம்ம புலிகேசிக்கு வருவோம். எந்த வித கல்வியறிவும் பகுத்தறியும் நுட்பமும் சொல்லிகுடுக்கப்படாத புலிகேசி ராஜாவா இருந்தாலும் டம்மியாகவும்; கல்வி, யோசிக்கும் திறன் இதெல்லாம் குடுக்கப்படுற சூழ்நிலைல வளர்ற உக்கிரபுத்தன் திறமையானவனும் வளர்றான். இவர்களது மரபணுக்கள் ஒன்றுதான்(7/8)
ஆனால் புறச்சூழல் வேற. எனவே மக்களே இனிமேல் யாராவது நான் பிறப்பிலேயே அறிவாளின்னு சொன்னாலும் கல்வியறிவு மறுக்கப்பட்டுட்டு அந்த மக்களுக்கெல்லாம் படிப்புவராதுன்னு சொன்னாலும் அவங்கட்ட சொல்லுங்க “It is not our genes; it is the environment” ன்னு, மாற்றமுடியாததோ வசப்படாததோ எதுமேஇல்லனு 8/8
Extra: மரபியலில் புறச்சூழலின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்காக பல்வேறு twin studies மேற்கொள்ளப்பட்டுள்ளன (அவர்களின் மரபணுக்கள் கிட்டத்தட்ட ஒன்று போல் இருப்பதால் அவற்றின் தாக்கம் பெரிதாக இருக்காது என்பதால்) (8.5)
@threadreaderapp unroll
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.