Swathika Profile picture
Reader, Atheist, Book Indexer, Digital creator, conflict averse, Insta @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKpt

Aug 19, 2022, 9 tweets

The Silent Patient is an interesting read. Alex Michaelides எனக்கு அறிமுகம் இல்லாத author. அறிமுகம் இல்லாத எழுத்தாளர்களின் கதை புத்தகத்தை வாங்க ரொம்பவே யோசிப்பேன். விமர்சனங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவேன்.

ஆனா இப்போ அதுவுமே யோசனையாக தான் இருக்கு book க்கு over promotion, build up ஆனா வாங்கி படிச்சா கடியா இருக்கும். அப்படிதான் colleen hoover எழுதிய verity புத்தகத்தை ஆவலாக வாங்கி ஏமாந்து போனேன். அதே மாதிரி இதுவும் இருக்குமோ என்று ஆர்வமில்லாமல் இருந்தேன்.

அப்புறம் flipkart ல தள்ளுபடி விலைல கிடைக்கவும் 'சரி போ வாங்கி பாப்போம்' என்று வாங்கி, பக்கத்தை புரட்டினால் அடடே எனக்கு பிடித்தமான இரண்டு விஷயங்கள் நாவலின் மையமாக இருந்தன ஒன்று psychology மற்றொன்று Greek mythology.

கதையின் மையமாக இருக்கும் Alicia தன் எண்ணங்களை ஓவியமாக வெளிப்படுத்துகிறாள் அதுபோக ஒரு டைரி வேறு எழுதுகிறாள் (ஆனா ஒரு டைரியை இவ்ளோ detailed ஆ ஒருத்தங்க எழுதுவங்களா? and again ஒரு டைரி என்பது காலம்காலமாக எல்லா கதைகளிலும் நாம் பார்க்கும் ஒரு easy mystery reveal ஆ இருக்கு).

ஒரு psychotherapist இன் பார்வையில் இருந்து கதை விரிகிறது. நம்மை ஒரு கதையுடன் ஒன்ற வைப்பது எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நமது சாயலை காணுவது தான்.
இதில் பாதிக்கப்பட்ட Alicia மற்றும் psychotherapist Theo இருவரிடமும் என்னுடைய சாயலை காண முடிந்தது.

Michaelides எழுத்துநடை மிக எளிமையான நம்மை அப்படியே இழுத்து கதைக்குள் போட கூடிய எழுத்துநடை. அவரின் முதல் கதையாம் இது. ஆச்சரியமாக இருந்தது. இம்மாதிரியான thrillers ல எப்படியும் ஒரு plot twist இருக்கும். தெரிந்த விஷயம் தான்.

ஆனா அந்த plot twist கதைக்கு அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்க கூடியதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. "அட பாவி நீயா?" என்ற எண்ணத்தை தரணும். அதை Michaelides, perfectஆ செய்து இருக்கார்.

The perfect book for a weekend. Do read.
@nual_reviews

read in 👇

t.me/bookcravings

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling