The Silent Patient is an interesting read. Alex Michaelides எனக்கு அறிமுகம் இல்லாத author. அறிமுகம் இல்லாத எழுத்தாளர்களின் கதை புத்தகத்தை வாங்க ரொம்பவே யோசிப்பேன். விமர்சனங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவேன்.
ஆனா இப்போ அதுவுமே யோசனையாக தான் இருக்கு book க்கு over promotion, build up ஆனா வாங்கி படிச்சா கடியா இருக்கும். அப்படிதான் colleen hoover எழுதிய verity புத்தகத்தை ஆவலாக வாங்கி ஏமாந்து போனேன். அதே மாதிரி இதுவும் இருக்குமோ என்று ஆர்வமில்லாமல் இருந்தேன்.
அப்புறம் flipkart ல தள்ளுபடி விலைல கிடைக்கவும் 'சரி போ வாங்கி பாப்போம்' என்று வாங்கி, பக்கத்தை புரட்டினால் அடடே எனக்கு பிடித்தமான இரண்டு விஷயங்கள் நாவலின் மையமாக இருந்தன ஒன்று psychology மற்றொன்று Greek mythology.
கதையின் மையமாக இருக்கும் Alicia தன் எண்ணங்களை ஓவியமாக வெளிப்படுத்துகிறாள் அதுபோக ஒரு டைரி வேறு எழுதுகிறாள் (ஆனா ஒரு டைரியை இவ்ளோ detailed ஆ ஒருத்தங்க எழுதுவங்களா? and again ஒரு டைரி என்பது காலம்காலமாக எல்லா கதைகளிலும் நாம் பார்க்கும் ஒரு easy mystery reveal ஆ இருக்கு).
ஒரு psychotherapist இன் பார்வையில் இருந்து கதை விரிகிறது. நம்மை ஒரு கதையுடன் ஒன்ற வைப்பது எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நமது சாயலை காணுவது தான்.
இதில் பாதிக்கப்பட்ட Alicia மற்றும் psychotherapist Theo இருவரிடமும் என்னுடைய சாயலை காண முடிந்தது.
Michaelides எழுத்துநடை மிக எளிமையான நம்மை அப்படியே இழுத்து கதைக்குள் போட கூடிய எழுத்துநடை. அவரின் முதல் கதையாம் இது. ஆச்சரியமாக இருந்தது. இம்மாதிரியான thrillers ல எப்படியும் ஒரு plot twist இருக்கும். தெரிந்த விஷயம் தான்.
ஆனா அந்த plot twist கதைக்கு அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்க கூடியதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. "அட பாவி நீயா?" என்ற எண்ணத்தை தரணும். அதை Michaelides, perfectஆ செய்து இருக்கார்.
The perfect book for a weekend. Do read. @nual_reviews
நிறைய topic diversion or அந்த point க்கு பதில் சொல்லும்போது அது வேற மாதிரி point contradiction என வருது so "Religion (any religion and every religion) practice உள்ளவரை, பெண் அடிமையாவது தொடரும் என்பது என் நிலைப்பாடு." இதான் உங்க core point என்று எடுத்துக்கறேன்.
அதாவது மதம் பெண்ணை அடிமை படுத்துது. அதை தெரிந்தே அறிந்தே நம்மை மதம் அடிமை படுத்துகிறது என்ற புரிதல் இருந்தும் நன்கு படித்த வேலைக்கு செல்லும் வெளி நாட்டில் இந்து சடங்குகளை பின்பற்ற தேவை இல்லாமல் இருந்தும் பெண்கள் வேண்டுமென்றே அதை பின்பற்றுகிறார்கள்.
அதை கேள்வி கேட்கும்போது புருஷனுக்காக, மாமியாருக்காக, பிள்ளைக்காக என்று சாக்கு சொல்கிறார்கள். அவர்கள் தான் அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துகிறார்கள். இது தான் உங்கள் point என்று எடுத்துக்கொள்கிறேன்.
இந்த விநாயகர் வழிபாடு பல்வேறு முரண்பட்ட தகவல்கள், விசித்திரமான ஒருங்கிணைப்பு கள், மாயத் தன்மைகள் கொண்டது.
விநாயகர் விவசாயம் அல்லது அறுவடைக் கடவுள் என்பது வைதீக இந்து மரபுக்கு வெளியே உள்ள மக்கள் வழிபாட்டு மரபு. எலி விவசாயத்துக்கு எதிரி.
அதை அடக்கி ஒடுக்கியவர், அரிசி கொழுக்கட்டை உண்பவர், மண்ணால் உருவாக்கப் பட்டு உழவுக்கு பயன்படும் நீரில் கரைக்கப் படுபவர் மக்களின் பிள்ளையார். அவரது பருத்த வயிறு நெல் கொட்டி வைக்கும் தாழி. யானைத் தலை என்பது வைக்கோலின்
உருவகம் என்று ஒரு ஆய்வு.
பண்டைய இந்தியாவின் பல பகுதிகளில் ஹஸ்தியார், ஹஸ்தி, மாதங்கம் என்று யானை பெயர் கொண்ட, யானையை குலக் குறியாகக் கொண்ட பழங்குடிகள், அரசுகள் உண்டு. இந்தியா வந்த கிரேக்கர் கூட இவர்களுக்காக யானை உருவம் கொண்ட நாணயங்களை அச்சிட்டனர்.
Mandela Effect என்பதொரு social phenomenon. நிறைய மக்கள் ஒரு சேர்ந்து பொய்யான ஒன்றை நடந்ததாக நம்புவார்கள் shared false memories. இந்த சொல்லை மற்றும் இந்த phenomenon ஐ முன்மொழிந்தவர் Fiona Broome என்னும் paranormal researcher.
பெரும்பாலான மக்கள் Nelson Mandela 1980 களில் சிறையிலேயே இறந்துவிட்டார் என நினைக்கிறார்கள். ஆனா Nelson Mandela 1990 ல் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் பிரதமராகி 2013 ல் இறந்து போனார்.
இருந்தாலும் பெருவாரியான மக்கள் அவர் சிறையிலேயே இறந்துவிட்டதாக ஒரு false memory யை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். நமது மூளை இருக்கும் தகவல்களை வைத்து ஒரு பொய்யான நினைவுகளை உருவாக்கிக்கொள்ளும் என்கிறார்கள்.
"விடு எல்லாம் சரியா போயிடும்" "நான் உனக்காக pray பண்ணிக்கறேன்" "கடவுள் இருக்கான் பார்த்துப்பான்" "ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க" "குடும்பம் என்றால் நாலு விஷயம் முன்ன பின்ன தான் இருக்கும்" "எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்" "விதி நாம என்ன செய்ய முடியும்"
இந்த மாதிரி வாக்கியங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது ' thought-terminating cliché' இதை முன்மொழிந்தவர் Robert Jay Lifton (Thought Reform and the Psychology of Totalism).
ஒரு conversation அ முடிவுக்கு கொண்டு வருவதற்கு, எதிராளியை கேள்வி கேட்க விடாமல் செய்வதற்கு,
மேற்கொண்டு அவர்களை யோசிக்க விடாமல் செய்வதற்கு இத்தகைய சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. unconsciously எல்லாருமே இத்தைகைய thought-terminating cliché' க்களை தினசரி வாழ்வில் பயன்படுத்திக்கொண்டு தான் இருப்போம்.
வாழ்க்கையே முடிந்து போனது என்னும் மிக கீழான இடத்தில் எல்லா நம்பிக்கைகளும் அற்று போய் இருக்கும் ஒருவர் சிறிது சிறிதாக அதிகாரத்தை கைக்கொள்ளும் போது அந்த அதிகார போதை அவர்களை திருப்பி பாதாளத்தில் தள்ளிவிடும்.
எப்படியாவது உயிர் வாழனும் என்ற survival நிலையில் இருந்து போராடி மேல வந்ததும், தான் எது செய்தாலும் அது சரி என்ற நிலைக்கு வருகிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் நடுவே மெல்லிய கோடு தான் இருக்கு என்பார்கள் அந்த கோடு இவங்ககிட்ட இருக்காது.
கடைசியில் ego, எல்லாருமே எதிரிகள் நம்மை attack பண்ண தான் வருகிறார்கள் என்ற paranoia இதெல்லாம் அவங்களை தனிமைப்படுத்தி அவங்க அழிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
முன்பெல்லாம் செய்தி ஊடகங்களில் ‘செய்தி’ மட்டும்தான் சொல்வார்கள். கூடக்குறைய எதுவுமே இருக்காது. களத்தில் சேகரித்த தகவல்களைப் பகிர்வார்கள், அவ்வளவுதான். முடிவை நம் கையில் விட்டுவிடுவார்கள். எதையும் திணிக்க மாட்டார்கள்.
சமூக ஊடக காலத்தில் செய்தியோடு தமது கருத்துகளையும் இணைத்துச் சொல்லத் தொடங்கினர். கருத்து மோதலாக, விவாதக் களமாக அது மாறியது. சிறிது காலம் கழித்து, கருத்தையும் தாண்டி ‘நேரேடிவை’ வடிவமைக்கத் தொடங்கினர். கௌரவமாக இருக்கட்டுமே என்று நேரேடிவ் என்கிறேன். உண்மையில் அது ‘கதைவிடுவது’.
கதையாடல், மாற்றுக் கதையாடல், மாற்றுக்கு மாற்று என நாள்தோறும் அது புதுப்பது அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
பஹல்கம் தாக்குதலை ஒட்டி பரப்பப்படும் ‘கதைகளைப்’ பாருங்கள். நேரேடிவின் உச்சகட்டம் இதுதான். எது உண்மை என்பது நேரடியாகக் களத்தில் இருந்தோருக்கே தெரியாது எனும் அளவுக்குக்