யார் இந்த "முரசொலிமாறன்"?
திமுகவின் வரலாற்றை இந்த உலகம் பல நூற்றாண்டுகள் பேசும். அப்போது பல சர்வாதிகாரிகள் திமுகவின் வரலாற்றை வாசிக்கும் போது ஒரு பெயர் அவர்களின் நாடித்துடிப்பை நடுங்கச் செய்யும். ஆம், அந்த பெயர் தான் "முரசொலி மாறன்" தலைவர் கலைஞரின் மனசாட்சி, திமுகவின் தொடக்க
புள்ளி, விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகாரனின் உயிரைக்காப்பாற்றிய வள்ளல், வாஜ்பாயை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய ஆற்றல்வல்லன், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்துடிப்பு, தான் எடுக்கும் முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றாத மாமன்னன், வர்த்தகத் துறையின் வைரக்கல் என்றெல்லாம் புகழப்பட
கூடியவர் தான் அய்யா முறசொலி மாறன்.கலைஞரை முதல்வராக்க அல்லும் பகலும் அயராது உழைத்த சேனாதிபதியான முரசொலிமாறனார் அவர்கள் தான் இன்று நம் பள்ளிகளில் வருகைப்பதிவேட்டை ஆசிரியர் வாசிக்கும் போது "Present Sir" என்பதற்கு பதிலாக "உள்ளேன் ஐயா" என்ற குரலை எழுப்பிய கலகக்காரன் தான் அய்யா மாறன்
அவர்கள்.. மாநில சுயாட்சி கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத சாதனைப்பூவின் சரித்திரம்.. உலக அரங்கில் இந்தியாவின் கொள்கையை முன்னிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார்.2001 ல் கத்தார் தலைநகர் "தோஹா" வில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் #பில்கிளிண்டனின்
அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யதவர் தான் அய்யா முரசொலிமாறன் அவர்கள். 131 வளரும் நாடுகளின் கொள்கைவிதிகளில் தலையிட வளர்ந்த நாடுகளுக்கு உரிமையில்லை என்பதனை உலக அரங்கில் கர்ஜித்த சிங்கம் தான் அய்யா "முரசொலி மாறன்" அவர்கள்.. தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர்..திமுக தொண்டனின் கடைசி
ஆயுதமும் கூட, கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவவாதி.. இந்தியா தற்போது வர்த்தகத் துறையில் ஒரு புரட்சியை அடைந்தற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அய்யா முரசொலி மாறன் அவர்கள். ஜெயலலிதாவின் அடக்குமுறைகள் எல்லாம் இவர் முன் செல்லாக்காசானது.. 36 ஆண்டுகள் திமுகவின் டெல்லி முகமாக
தன் பயணத்தை தொடர்ந்த அய்யா முரசொலி மாறனின் வாதங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லவேண்டியது திராவிட ஆதரவாளர்களின் தலையாய கடமை.. இந்த மாநில சுயாட்சியின் மணிமகுடத்தை நாம் தானே சூட்ட வேண்டும்.. அய்யாவிற்கு புகழ்வணக்கம் 🙏🖤❤️🙏🙏
#Dravidian_Leaders #Murasoli_Maran
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.