யார் இந்த குமரிமுத்து?
திமுகவின் தூண்கள் எதனால் உருவாக்கப்பட்டது? என்று எதிரிகள் ஆய்வு செய்யும் போது! அது குமரிமுத்து போன்ற ஆட்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் குழைத்து கட்டப்பட்டது என்பதை ஆய்வு முடிவுகள் சொல்லும்..ஆம், நடிக்கத் தெரியாத ஒரு திமுக தொண்டன் தான் குமரிமுத்து
பலருக்கு அவரின் சிரிப்பு தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால், திமுக என்ற இயக்கத்தில் தன்னை 50 ஆண்டுகாலம் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு பொதுநல வாதியை இத்தமிழ்சமூகம் அறிந்திராது. தலைவர் கலைஞர் மீது ஒரு சிலருக்கு தூரோகம் செய்ய ஆசை, சில பலருக்கு குழிதோண்ட ஆசை இருக்கும்.ஆனால் அய்யா குமரிமுத்து
போன்ற ஆட்களுக்கு மட்டுமே தலைவர் கலைஞர் தாங்கி பிடிக்க ஆசையாய் இருக்கும்.. திமுக பிரச்சாரத்தை அறிவிக்கும் போது அதில் முதல் ஆளாய் பிரச்சாரத்திற்கு செல்வது அய்யா குமரிமுத்து தான். ஒரே ஒரு சிரிப்பில் பல லட்ச வாக்குகளை தன் வசப்படுத்தும் தமிழினத் தலைவனின் அடிமட்டத் தொண்டன் தான் அய்யா
குமரிமுத்து அவர்கள். திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு அணியின் துணைத் தலைவராக இருந்த அய்யா குமரிமுத்து அவர்கள் தன் பேச்சால் பலதரப்பட்ட மக்களை தன் வசப்படுத்தும் வல்லமை மிக்கவர் ஆவார். ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்ற "தேர்தலில் போட்டியிட ஆசை உள்ளதா என்று கேட்க? அதற்கு
பதிலளித்த குமரிமுத்து அவர்கள் " ஆசை ஒன்றும் இல்லை தலைவரே! அப்படி ஆசை வந்தால் நானும் என்னை அறியாமல் உங்கள் முதுகில் குத்திவிட்டால் துரோகி என்ற பட்டம் என்னை சூழ்ந்து விடாதா? என்று கண்கலங்கி பதிலளித்தாராம்..எப்படி ஒரு தொண்டன் இருக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையை இளைய தலைமுறை
திமுகவினருக்கு வாழ்ந்து காட்டி மறைந்தாருக்கிறார் அய்யா குமரிமுத்து அவர்கள்...அவர் திமுக உணர்வை பாராட்டி தலைவர் கலைஞர் அவர்கள் 2014ஆம் ஆண்டு தமிழன்னையின் திருநாளாம் திமுக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருது" வழங்கி சிறப்பித்தார் தலைவர் கலைஞர் அவர்கள்..அந்த விருதைப்பற்றி பத்திரிக்கை
நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு "என் பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்" என் தலைவன் கையால் நான் மோட்சம் அடைந்தேன் என பதிலளித்தாராம் குமரிமுத்து.. இவரைப் போன்ற ஒரு திமுககாரனை இனி எப்போது பார்ப்போம் உடன்பிறப்பே!! 🙏🙏🙏
🖤❤️
💥💥💥
#Dravidian_Leaders
#KumariMuthu
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.