Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈

Aug 31, 2022, 19 tweets

#Thread

#விநாயகர்_சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாள் என்று சொல்கிறார்கள், சரி அது அவர்களின் நம்பிக்கை சார்ந்தது என்பதற்காக அதை ஒப்புக்கொண்டாலும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் எப்படி இருக்கிறது!?

(1)

விநாயகரின் ஒரு சிலை பொதுவெளியில் வைக்கப்பட்டு சில நாட்கள் பூஜை செய்த பிறகு அதை கடலிலோ ஆற்றிலோ கொண்டு போய் கரைத்து விடுகிறார்கள். ஆனால் புராணங்களின் அடிப்படையில் இந்த மாதிரியான வழிபாடு இல்லவே இல்லை.

(2)

சிவமகா புராணத்தில் விநாயகர் சதுர்த்தி எப்படி செய்ய வேண்டும் என குறிப்புகள் உள்ளது.
மார்கழி மாதம் தேய்பிறையில் வரும் நான்காவது நாள் சதுர்த்தி அன்று இதை துவங்க வேண்டும், உலோகம் பவளம் அல்லது மண் ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை வைத்து,

(3)

நெய் விளக்கு அருகம்புல் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

இதில் அந்தணர்களுக்கும் பூஜை செய்து அவர்களுக்கு சுவையான உணவை அளிக்க வேண்டும், மற்றவர்கள் உப்பில்லாத உணவை உண்ண வேண்டும். மிகவும் முக்கியமானது ஒரு ஆண்டில் இந்த சதுர்த்தி வழிபாடை துவங்கும் அன்று முதல்

(4)

அடுத்த ஆண்டு அந்த சதுர்த்தி நாள் வரும் வரையில் இந்த வழிபாடை செய்ய வேண்டும். வழிபாடை முடிக்கும் போதும் அந்தணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இன்றைய விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமும் சிவ மகா புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமும் ஒன்றா!? இல்லை.

(5)

பிறகு எப்படி இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் உருவானது!?

அதற்கு ஒரே காரணம் லோகமான்ய திலகர் என்ற இந்துமத அடிப்படைவாதம் பேசிய சுதந்திர போராட்ட வீரர் தான்.

(6)

இவர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அவர்களுக்கு எதிராக இந்துக்களை அணிதிரட்ட மஹாராஷ்டிராவில் இப்போது நடைமுறையில் உள்ளது போன்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ஒருங்கிணைக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை இந்து மத அடிப்படைவாதிகளால் இந்து மக்களை ஒன்று திரட்டும் ஒரு ஆயுதமாக உள்ளது.

(7)

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம், திலகரால் வேறு ஏதாவது தெய்வங்களுக்கு விழா எடுத்து இந்துக்களை ஒன்றிணைத்திருக்க முடியும் ஆனாலும், ஏன் விநாயகரை கொண்டாட வேண்டும் என தீர்மானித்தார்!?

அதற்கு காரணம் இந்து மதத்தில் இருக்கும் அடிப்படையான கூறு,

(8)

அது என்ன இந்து மதத்தின் அடிப்படை!? இதற்கான பதிலை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் "Riddles in Hinduism" என்ற புத்தகத்திலிருந்து காணலாம்.

இந்து மதத்தின் புதிர்கள் என்ற இந்த புத்தகத்தில் அம்பேத்கர் கூறுகிறார், //ஒருவர் தன்னை பார்சி என்று சொல்லுவார் எனில்,

(9)

அவர் ஜோரோஸ்ட்ரரை பின்பற்றுபவர், ஒருவர் தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லி கொள்வாரானால் அவர் கிறிஸ்துவை பின்பற்றுபவர், ஒருவர் தன்னை இஸ்லாமியர் என்று சொல்லிக் கொள்வாரானால் அவர் அல்லாஹ்வை பின்பற்றுபவர்.

அதுவே ஒரு இந்து தன்னை இந்து என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும்,

(10)

இந்து சமூகம் வணங்கும் கடவுளை அவர் வணங்குவதால் தன்னை அவர் இந்து என்று சொன்னால்,
அவரது பதில் உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் எல்லா இந்துக்களும் ஒரு கடவுளை வணங்குவதில்லை. சில இந்துக்கள்
ஏகத்துவவாதிகள், சிலர் பலதெய்வவாதிகள் மற்றும் சிலர் இறை நம்பிக்கையாளர்கள்.

(11)

இந்து ஏகத்துவவாதிகள் கூட ஒரே கடவுளை வணங்குபவர்கள் அல்ல. சிலர் விஷ்ணுவையும், சிலர் சிவனையும் வணங்குகிறார்கள்.
சிலர் ராமர், சிலர் கிருஷ்ணர். சிலர் ஆண் கடவுள்களை வணங்குவதில்லை. அவர்கள் ஒரு பெண் தெய்வத்தை வணங்குகிறார்கள்.

(12)

அப்போதும் அவர்கள் ஒரே தெய்வங்களை வழிபடுவதில்லை. அவர்கள் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். சிலர் காளியை வழிபடுகிறார்கள், சிலர் பார்வதியை வணங்குகிறார்கள், சிலர் லட்சுமியை வணங்குகிறார்கள்.//

இம்மாதிரியான பல குழப்பங்கள் உள்ளதால் தான் திலகர் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்ட

(13)

விநாயகரை முன்னிறுத்தி இந்துக்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறார்.

ஆம். விநாயகர் தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள். வைணவர்களும் கூடத் விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என கொண்டாடுகிறார்கள்.

(14)

சரி அடிப்படைவாதிகள் இந்த கொண்டாட்டத்தை ஒருங்கிணைத்தாலும் அதில் கலந்து கொள்வது சாமானிய மக்கள் தான் இதற்கு காரணம் என்ன?

என்றுமே சாமானிய மக்களால் ஒரு கோவிலுக்கு உள்ளே இருக்கும் கருவறையில் உள்ள விநாயகரையோ மற்ற எந்த தெய்வங்களையோ தொட்டு பூஜிக்கவும் வழிபடவும் முடியாது.

(15)

ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பொதுவெளியில் வைக்கப்படும் விநாயகர் சிலையை தொடவும் தனக்கு பிடித்தார் போல பூஜைகள் செய்து கொள்ளவும் அவர்களால் முடியும்.

என்றுமே கிடைக்காத அந்த உரிமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கிடைப்பதால் சாமானிய மக்கள் அதை வரவேற்கிறார்கள்.

(16)

சாமானிய மக்களின் உளவியல் ரீதியான இந்த அணுகுமுறையும், இந்த கும்பல் மனப்பான்மையும் மாற வேண்டுமெனில், எப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே இருந்த உரிமை அனைவருக்கும் பகிரப்பட்டதோ,

(17)

அதேபோல பூஜை வழிபாடு போன்றவற்றையும் அனைவருக்கும் பொதுமை படுத்தும்போது இந்த மனநிலைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

கடவுள் மறுப்பு பேசுபவர்களுக்கு விநாயகர் என்பது அறிவுக்கு அறிவியலுக்கும் பொருந்தாத ஒன்று.

(18)

ஆனால், சாமானியர்களுக்கு அது கடவுளாகவே உள்ளது எனவே அதை பற்றிய புரிதலை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.

"*புடிச்சா பிள்ளையாரு
வழிச்சா சாணி*"

எனும் இந்த பழமொழியை சாமானியர்களுக்கு சரியாக புரிய வைத்தாலே போதும் மக்கள் தெளிந்துவிடுவார்கள்.

(19)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling