யார் இந்த ஜெ.அன்பழகன்??
திமுக வரலாற்றை சுவடுகளாக வெளியிடும் போது அதில் அரை பத்திச் சுவடுகள் மட்டும் ஒருவனின் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும். ஆம், அந்த பெயர் தான் ஜெ.அன்பழகன்.. அச்சத்தை அகராதியில் வைக்காத ஒரு திமுககாரன், திமுகவின் சுவாசக்காற்றை இறுதி வரை சுவாசித்த மாவீரன்,
தலைவர் கலைஞரின் முரட்டு பக்தன், திமுக தொண்டர்களின் கடைசி நம்பிக்கை, தி நகர் தொகுதி மக்களின் நிரந்தர MLA, பழக்கடை அய்யா ஜெயராமனாரின் தவப்புதல்வன், பயத்திடமே பயத்தை காட்டும் பயமறியாச் சுடரொலி என்றெல்லாம் புகப்படக்கூடியவர் தான் அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள். ஜீன் மாதம் பிறந்தால் போதும்
தி.நகரில் உள்ள அவரின் அலுகத்தில் அலையலையாய் மக்கள் கூட்டம் ஏழை குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் தருமத்தாயின் தலைமகன் இந்ந அன்பழகன்..எதிரிகளிடமே புறமுதுகை காட்டி ஓடியதுமில்லை, நெஞ்சிலே வேல் தாங்கும் கரிகால்பெருவளத்தானும் அன்பழகன் அவர்கள் தான். தொண்டர்களின் கோரிக்கையை தலைமையிடம்
வைக்கும் போது அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத சரித்திரத்தின் சகாப்தம்.. தான் கொண்ட கொள்கைக்கும், தன் தலைவனுக்கும் ஊறுவிளைவிக்க எதிரி படை எழும் போது திராவிடப்படையை முன்னின்று வழி நடத்திச் செல்லும் பிதாமகன் தான் அவர். ஒரு முறை ராமர் எந்த கல்லூரியில் என்ஜினியர் படித்தார், பாலம்
கட்டுவதற்கு என்று கலைஞர் கருத்துரைக்க, அதற்கு வடநாட்டில் இருந்த ஒரு பரதேசிப் பையன்(ராம்விலாஸ் வேதாந்தி) கலைஞரின் தலையை கொய்துவிடுவேன் என்றான்.. இதைக் கண்ட அன்பழகன் தனி ஆளாய் சென்று பாஜகவின் "கமலாலயத்தை" அடித்து நொறுக்கிய வரலாற்றிற்கு சொந்தகாரன் தான் அண்ணன் அன்ழகன் அவர்கள்..
எப்போதும் கட்சி நலத்தை மட்டுமே சிந்திக்கும் ஒரு உண்மையான விசுவாசி நமக்கு கிடைத்தது ஒரு பாக்கியம்.. சட்டசபையில் ஜெயலலிதாவின் ஆணவத்தை அடக்கி காட்டியவர். எடப்பாடியின் எக்காளமிடும் போக்கை எட்டிஉதைத்தவர்.. மனதில் பட்டதை கட்சி தலைமையிடம் சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்ததனால் தான் இன்று
அவர் மாவீரனாக வாழ்ந்து வருகிறார்.. கோடிக்கணக்கான திமுக தொண்டர் சண்டமாருதம் செய்ய இவரே காரணம்.. பலசெருப்புகள் இன்று திமுகவை வசை பாடலாம்? ஆனால், ஒரு காலத்தில் தன் ஒரு செருப்பை கவ்வ கொடுத்து மறு செருப்பால் அடித்த வரலாற்று நாயகனைப் போற்றுவோம் உடன்பிறப்பே🙏
#Dravidian_Leaders 💥
❤️🖤
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.