நாங்க எல்லாம் வேற மாதிரி (immortal jellyfish & Octopus)
மனிதர்கள் and பெரும்பாலான உயிரினங்கள் அதோட cell replicate ஆகும்போது... reproduce பண்ணும்போது... அதனுடைய DNA அப்படியே exact ஆ இன்னொரு copy எடுக்கும். அதிலிருந்து RNA அதிலிருந்து protein உருவாகிறது.
இப்படி copy எடுக்கும்போது, எதாவது சில மாற்றங்கள் copy எடுக்கப்படும் DNA வில் உருவாகலாம் அது mutation. இந்த mutation ஒரு visible மாற்றத்தை கொண்டு வரும்போது மேலும் அந்த mutation அடுத்தடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படும்போது அது evolution. இது normal ஆ எல்லா உயிரினங்களிலும் நடப்பது.
ஆனா இந்த octopuses மற்றும் இதர cephalopods என்ன பண்ணுது? புத்திசாலித்தனமா ஒரு வேலையை பண்ணுது. தனக்கு ஏற்ற மாதிரி லேசா சில கிம்மிக்ஸ் வேலைகள் பண்ணுது... genetic editing பண்ணுது. இப்போ தன்னோட நிறத்தை மாத்தணும் அப்படின்னா அதுக்கு ஒரு குறிப்பிட்ட protein தேவை இல்லையா?
அந்த குறிப்பிட்ட protein ஐ உற்பத்தி செய்வதுபோல தன்னோட RNA வை edit பண்ணுது. DNA வில் இருந்து RNA copy ஆனதுக்கு அப்புறம் RNA editing மூலமா அதை தனக்கு ஏற்றார் போல octopus மாத்திக்குது. (nautilus intelligence #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
octopus இப்படி பண்ணுது இந்த immortal jellyfish (Turritopsis dohrnii) என்ன பண்ணுது? இது எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சுக்கும். அடுத்து Telomere என்பது DNA molecule இன் இரண்டு முனைகளிலும் இருக்கும். ஒவ்வொரு முறை DNA copy எடுக்கும்போதும் Telomere அளவு குறைஞ்சுகிட்டே வரும்.
ஒரு கட்டத்துல ரொம்ப குறைஞ்சிரும் அதுக்கு அப்புறம் DNA இன்னொரு copy எடுக்க முடியாது. cell அப்படியே காலாவதி ஆகிடும். இப்படி ஒவ்வொரு cellஆ காலி ஆவது தான் வயசாகுதல். நம்ம jellyfish என்ன பண்ணுது? octopus RNAவை edit பண்ற மாதிரி இது ஒரு mutationஅ போட்டு இந்த Telomere உடையாம பாத்துக்குத
அப்போ DNA அதுபாட்டுக்கு replicate ஆகிட்டே இருக்கும். cell fresh ஆ இருக்கும். அடுத்து எதோ ஒரு external stress, ஒரு poison அ encounter பண்ணிடுச்சு அப்படின்னு வச்சுப்போம். டபக்குன்னு கடல் ஆழத்தில் போய் ஒரு cyst (dormant stage) மாதிரி form ஆகிடும்.
எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சு இருக்கும் ன்னு சொன்னேன்ல அதுல நல்ல copy யை வச்சுக்கிட்டு தன்னை தானே clone பண்ணிக்கும். நல்ல cell எல்லாம் clone ஆகிடும், பாதிக்கப்பட்ட cell எல்லாத்தையும் ஒதிக்கிரும். phoenix பறவை மாதிரி தான்.
இப்போ jellyfish எப்படி Telomere உடையாம பாத்துக்குது அதே மாதிரி மனிதனுக்கும் ஒரு mutation அ போட்டு இந்த Telomere உடையாம வச்சுக்க முடியுமான்னு ஆராய்ச்சிகள் நடக்குது.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.