Swathika Profile picture
Sep 2, 2022 9 tweets 3 min read Read on X
நாங்க எல்லாம் வேற மாதிரி (immortal jellyfish & Octopus)

மனிதர்கள் and பெரும்பாலான உயிரினங்கள் அதோட cell replicate ஆகும்போது... reproduce பண்ணும்போது... அதனுடைய DNA அப்படியே exact ஆ இன்னொரு copy எடுக்கும். அதிலிருந்து RNA அதிலிருந்து protein உருவாகிறது.
இப்படி copy எடுக்கும்போது, எதாவது சில மாற்றங்கள் copy எடுக்கப்படும் DNA வில் உருவாகலாம் அது mutation. இந்த mutation ஒரு visible மாற்றத்தை கொண்டு வரும்போது மேலும் அந்த mutation அடுத்தடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படும்போது அது evolution. இது normal ஆ எல்லா உயிரினங்களிலும் நடப்பது.
ஆனா இந்த octopuses மற்றும் இதர cephalopods என்ன பண்ணுது? புத்திசாலித்தனமா ஒரு வேலையை பண்ணுது. தனக்கு ஏற்ற மாதிரி லேசா சில கிம்மிக்ஸ் வேலைகள் பண்ணுது... genetic editing பண்ணுது. இப்போ தன்னோட நிறத்தை மாத்தணும் அப்படின்னா அதுக்கு ஒரு குறிப்பிட்ட protein தேவை இல்லையா?
அந்த குறிப்பிட்ட protein ஐ உற்பத்தி செய்வதுபோல தன்னோட RNA வை edit பண்ணுது. DNA வில் இருந்து RNA copy ஆனதுக்கு அப்புறம் RNA editing மூலமா அதை தனக்கு ஏற்றார் போல octopus மாத்திக்குது. (nautilus intelligence #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
octopus இப்படி பண்ணுது இந்த immortal jellyfish (Turritopsis dohrnii) என்ன பண்ணுது? இது எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சுக்கும். அடுத்து Telomere என்பது DNA molecule இன் இரண்டு முனைகளிலும் இருக்கும். ஒவ்வொரு முறை DNA copy எடுக்கும்போதும் Telomere அளவு குறைஞ்சுகிட்டே வரும்.
ஒரு கட்டத்துல ரொம்ப குறைஞ்சிரும் அதுக்கு அப்புறம் DNA இன்னொரு copy எடுக்க முடியாது. cell அப்படியே காலாவதி ஆகிடும். இப்படி ஒவ்வொரு cellஆ காலி ஆவது தான் வயசாகுதல். நம்ம jellyfish என்ன பண்ணுது? octopus RNAவை edit பண்ற மாதிரி இது ஒரு mutationஅ போட்டு இந்த Telomere உடையாம பாத்துக்குத
அப்போ DNA அதுபாட்டுக்கு replicate ஆகிட்டே இருக்கும். cell fresh ஆ இருக்கும். அடுத்து எதோ ஒரு external stress, ஒரு poison அ encounter பண்ணிடுச்சு அப்படின்னு வச்சுப்போம். டபக்குன்னு கடல் ஆழத்தில் போய் ஒரு cyst (dormant stage) மாதிரி form ஆகிடும்.
எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சு இருக்கும் ன்னு சொன்னேன்ல அதுல நல்ல copy யை வச்சுக்கிட்டு தன்னை தானே clone பண்ணிக்கும். நல்ல cell எல்லாம் clone ஆகிடும், பாதிக்கப்பட்ட cell எல்லாத்தையும் ஒதிக்கிரும். phoenix பறவை மாதிரி தான்.
இப்போ jellyfish எப்படி Telomere உடையாம பாத்துக்குது அதே மாதிரி மனிதனுக்கும் ஒரு mutation அ போட்டு இந்த Telomere உடையாம வச்சுக்க முடியுமான்னு ஆராய்ச்சிகள் நடக்குது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

Jan 20
காரண காரியமே இல்லாமல் சாதாரண விஷயத்துக்கு கூட தேவையின்றி அடிக்கடி பொய் பேசுபவர்கள் compulsive liar. எவ்வித நோக்கமும் இன்றி, இது பொய் என எளிதில் பிறரால் கண்டுபிடித்துவிட கூடியவற்றை கூட confident ஆ அடிச்சு விடுவாங்க.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதை மறைக்க இன்னொன்று, என பொய் வலைகளுக்கு நடுவிலே இருப்பார்கள். எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவது இவர்களுக்கு மிக பிடிக்கும். compulsive liars களுக்கு பல சமயங்களில் தாங்கள் பொய் சொல்கிறோம் என்று கூட தெரியாது.
அதனாலேயே அவர்களுக்கு அதைப் பற்றிய குற்றவுணர்வும் இருக்காது. Compulsive lying க்கு மனசிதைவு தான் காரணம். narcissistic personality disorder கொண்டவர்களுக்கு இது இருக்கிறது. அதாவது தன்னை பற்றி மிக மேன்மையாக நினைத்து கொள்பவர்கள் பொய் பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
Read 12 tweets
Jan 9
Haber-Bosch process மூலமாக விவசாயத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு உணவு உற்பத்தியை பெருக்கியவர் Fritz Haber என்னும் German-Jewish chemist. Haber-Bosch process மூலமாக வரும் nitrogen fertilizers ஐ நம்பிதான் இன்றைக்கு உலகத்தின் பாதி மக்கள் தொகை இருக்கிறது.
ஜெர்மன் தேசியவாதியான இவர் முதலாம் உலகப்போரின் போது நாட்டுக்காக chemical weapons ஐ உருவாக்கி தந்தார். மக்களை கருணையோடு கொல்ல (போரில்) chemical weapons ஒரு நல்ல tool என்று இவர் கண்டுபிடித்த chlorine gas முதலாம் உலகப்போரில் 1,100 படைவீரர்களுக்கு மேல் கொன்றது.
இவர் நினைத்தது போல chlorine gas கருணை கொலையாக இருக்கவில்லை. பயத்திலும் பாதத்திலும் தொண்டை நெஞ்சு எல்லாம் எரிந்து மூச்சுவிட முடியாமல் துடிதுடித்து தான் மக்கள் இறந்து போனார்கள். காற்றில் பரவிய chlorine gas ஆல் போர்வீரர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும் அவதிக்குள்ளானார்கள்.
Read 9 tweets
Dec 27, 2024
இன்னிய தேதிக்கு ஒரு ஆளு அறிவான ஆளுன்னு நாம எதை வச்சு எடைபோடுவோம்? உலக அறிவு, scientific மற்றும் technological அறிவு, அரசியல், etc இதை பற்றி எல்லாம் ஒருவருக்கு இருக்கும் knowledge ஐ வைத்து அடேங்கப்பா அவர் பெரிய புத்திசாலி என சொல்லுவோம்... அப்படியே rewind பண்ணி பின்னாடி போவோம்.
இதை பற்றி எல்லாம் தெரியாதபோது, மக்கள் ஒருவரை எதன் அடிப்படையில் அறிவாளி, எல்லாம் தெரிந்தவர் என சொல்லுவார்கள்? யாரிடம் நிறைய மூட நம்பிக்கைகள் உண்டோ... யாருக்கு சடங்கு சம்பிரதாயங்கள் நல்லா தெரியுமோ... யாரு கதைகள் சொல்வார்களோ... அவர்கள் தான் அன்னிய தேதிக்கு அறிவாளி.
அமாவாசை வெங்காயம் சேர்க்க கூடாது, அரச மரத்தை சுத்தினா குழந்தை பிறக்கும், இது போன்ற titbits யாரு நிறைய சொல்றாங்களோ அவங்கள தான் 'அடேங்கப்பா, இவங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கு பாரேன்' என அந்த காலத்தில் வியந்து இருப்பார்கள்.
Read 4 tweets
Oct 23, 2024
'தமிழ்' பிக் பாஸ் மெதுவாக toxic ஆ மாறிக்கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் இது social experiment. வீட்டுக்குள் சின்ன சின்ன சவால்கள், ஒன்றாக வாழ்வதால் ஏற்படும் மோதல்கள் என நார்மல் ஆ இருந்தது. தினசரி சவால்கள் அதை எப்படி போட்டியாளர்கள் எதிர்கொள்கிறார்கள்.
அதில் எப்படி அவர்களது moral value வெளிப்படுகிறது. சவால்களை நேர்மையுடனும், மனிதாபிமானத்துடன் எதிர்கொள்பவர்களை மக்கள் ரசித்தார்கள் அதில் மக்களுக்கும் பாடம் இருந்தது.
ஆனால் சீசன் போக... போக... சுவாரசியம் வேண்டும், strategy, சண்டை, அடிதடி, என toxic participant களை மக்கள் ஆதரிக்கிறார்கள். எனவே அடுத்த அடுத்த சீசனில் toxicity அதிகரிக்கிறது.
Read 18 tweets
Oct 16, 2024
அன்றைய கால school இன்றைய கால ஸ்கூல் மாதிரி கிடையாது. அன்று இருக்கும் தகவல்களை எல்லாம் எழுதி சேமித்து வைக்க record create பண்ணுவதற்கு எழுத படிக்க சொல்லி தருவார்கள். அவர்கள் பிரதி எடுக்கும்போது படித்து கொள்வதுதான்.
மற்றபடி உனக்கு science சொல்லி தரேன் நீ physics குரூப் அப்படி கிடையாது. இந்த வகையில் பார்க்கும்போது சுமேரியாவில் தான் முதல் பள்ளி இருந்தது அதன் பெயர் Edubbas (3500 BCE) இங்கு எழுத, படிக்க, வரவு செலவு பார்க்க கணக்கு சொல்லித்தரப்படும்.
பட்டியலிடப்பட்டு இருக்கும் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் புத்த பிட்சுக்களால், புத்த மத கருத்துக்களை புத்தகமாக எழுதவும், அவற்றை பல பிரதிகள் எடுக்கவும் பாதுகாத்து வைக்கவும் உருவாக்கப்பட்டவை. இவை எல்லாம் புத்த மத கல்வி நிலையங்கள் முதல் நூற்றாண்டுக்கு பின்னர் தோன்றியது.
Read 19 tweets
Oct 12, 2024
நேற்று நடந்த விமான சம்பவத்தால் பலர் Captain Sully யை நினைவு கூறுகிறார்கள். நிஜ வாழ்வில் Sully நடத்திய 'Miracle on the Hudson river' எப்போது நினைத்தாலும் goosebumps incident. ஏன் goosebumps? ஒரு retired air force pilot, flight take off ஆகி 97 sec ல, ஒன்னு இல்ல, 2 என்ஜினும் அவுட்.
இப்படி நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல. 'அதெப்டிங்க ஒரே நேரத்துல 2 என்ஜினும் போகும்'ன்னு, இந்த மாதிரி சம்பவத்திற்கு எந்த training ம் குடுத்து இல்லை. Sully, 20000 மணி நேரம் flight ஓட்டிய அனுபவஸ்தர். ஆனா, ஒரு என்ஜின் fail ஆனா கூட எப்படி இருக்கும்ன்னு அவரு பாத்தது இல்ல.
take off ஆகி Hudson river ல இறக்கினத்துக்கு இடைப்பட்ட மொத்த நேரமும் வெறும் 5 நிமிஷம்! இந்த 5 நிமிஷத்துல, வாத்து மோதினத்தை பார்த்து அதிர்ச்சியாகி, அது cockpit windshield ல மோதி, என்ஜின் ல மோதி அந்த damage அ assess பண்ணி, என்ஜின் ல இருந்து லீக் ஆகுற fuel அ கணக்கு பண்ணி,
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(