அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 5, 2022, 8 tweets

#பகவானின்_குணவைபவம் #நற்சிந்தனை
1.சௌசீல்யம்
பெரியவன் சிறியவன் என்ற பேதம் இல்லாமல் அடியார்களுடன் இரண்டற கலக்கும் மேன்மை குணம். இராம அவதாரத்தில் வேடர்களுடன் குரங்குகளுடன் ஏழை குகனோடும் நெருங்கி பழகினார். கண்ணன் இடையர்களுடன் ஒன்றர கலந்திருந்தார்.
2.வாத்சல்யம்
குற்றம் குறைகளோடு

அடியவர்களை அப்படியே ஏற்று கொள்ளும் குணம்! பிறந்த கன்றை பாசத்தோடு பசு நக்குவதை போல விபீஷணனை ஆராயமல் அப்படியே இராமன் ஏற்றுக் கொண்டான்.
3.மார்தவம்
அடியார்கள் தன்னை விட்டு பிரிவதை பொறுத்து கொள்ள முடியாத குணம்!
நாமதேவர் சேத்ராடனம் செல்லும் போது கதறி அழுதான் விட்டலன்.
4.ஆர்ஜவம்
உடல்

உள்ளம் வாக்கு இவைகளில் மாசு இல்லாத தன்மை. சீதையோடும், லட்சுமணனோடும் பஞ்சவடியில் இருந்தபோது ராவணனின் தங்கை சூர்ப்பனகை வருகிறாள். பார்த்த அக்கணமே அவள் அவனுடைய அழகில் தன் மனதை பறி கொடுத்து விடுகிறாள். அழகிய வாலிபனே! நீ யார்? உன் மனைவியோடும் நீ வந்திருக்கிறாய். இங்கே ஏன் எதற்காக

வந்தாய்?” என்று பல கேள்விகளை கேட்கிறாள். தற்செயலாக அங்கே வந்த ராட்ச பெண்ணிடம் ஏதோ ஒரு பதிலை இராமன் சொல்லிவிட்டு அவளை அனுப்பி இருக்கலாம். மாறாக தன் ஆர்ஜவ குணத்தால் தன் சரிதை முழுவதையும் அவளிடம் சொல்கிறார். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாக்கில் ஒன்றைச் சொல்லத் தெரியாதவன் ராமன்!

5.சௌஹார்தம்
எப்போதும் எல்லோருக்கும் நன்மையே எண்ணும் குணம் துன்பத்தை தான் ஏற்று கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யும் குணம்
மீரா அருந்திய விஷத்தை தான் ஏற்று கொண்டான்

6.ஸாம்யம்
சாதி குலம் உயர்வு தாழ்வு பாராமல் தன்னை அடைந்தவரை ஏற்று கொள்ளும் குணம். உதாரணம் திருப்பாணாழ்வார்.

7.காருண்யம்
இன்னார் இனியார் என் பாராமல் இரங்கும் குணம். பெருமாள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும் காருண்யத்தின் வெளிப்பாடு தான். எங்கோ அரண்மனையில் ‘கோவிந்தா’ என்று கதறிய திரௌபதிக்கு உடனே ஓடினார். தாயார் ராம, கிருஷ்ண அவதாரத்தில் தானும் பூலோகத்தில் வந்துதித்ததும் காருண்யமே.

8.மாதுர்யம்
எதிரியின் சிறப்பை மதித்து தன்னை கொல்ல வந்த பகைவனுக்கு இனிமையாக இருக்கும் குணம். ராம பிரான் இராவணனை இன்று போய் நாளை வா என்றான்

9.காம்பீர்யம்
மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத படி தன்னடக்கம் காட்டி எதிர்பாராத வகையில் அருள் புரிவான். குசேலருக்கு பாத அபிஷேகம் செய்து

செல்வ மழை பொழிந்தான்.
தைரியம்
10. ஷௌர்யம்
பகைவர்கள் எத்தனை வல்லவராக இருப்பினும் துணையின்றி அவர்கள் நடுவே புகும் குணம். துரியோதனன் சபையில் தனி ஒருவராக வந்தவர்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling