அன்பெழில் Profile picture
Sep 5, 2022 8 tweets 4 min read Read on X
#பகவானின்_குணவைபவம் #நற்சிந்தனை
1.சௌசீல்யம்
பெரியவன் சிறியவன் என்ற பேதம் இல்லாமல் அடியார்களுடன் இரண்டற கலக்கும் மேன்மை குணம். இராம அவதாரத்தில் வேடர்களுடன் குரங்குகளுடன் ஏழை குகனோடும் நெருங்கி பழகினார். கண்ணன் இடையர்களுடன் ஒன்றர கலந்திருந்தார்.
2.வாத்சல்யம்
குற்றம் குறைகளோடு
அடியவர்களை அப்படியே ஏற்று கொள்ளும் குணம்! பிறந்த கன்றை பாசத்தோடு பசு நக்குவதை போல விபீஷணனை ஆராயமல் அப்படியே இராமன் ஏற்றுக் கொண்டான்.
3.மார்தவம்
அடியார்கள் தன்னை விட்டு பிரிவதை பொறுத்து கொள்ள முடியாத குணம்!
நாமதேவர் சேத்ராடனம் செல்லும் போது கதறி அழுதான் விட்டலன்.
4.ஆர்ஜவம்
உடல்
உள்ளம் வாக்கு இவைகளில் மாசு இல்லாத தன்மை. சீதையோடும், லட்சுமணனோடும் பஞ்சவடியில் இருந்தபோது ராவணனின் தங்கை சூர்ப்பனகை வருகிறாள். பார்த்த அக்கணமே அவள் அவனுடைய அழகில் தன் மனதை பறி கொடுத்து விடுகிறாள். அழகிய வாலிபனே! நீ யார்? உன் மனைவியோடும் நீ வந்திருக்கிறாய். இங்கே ஏன் எதற்காக
வந்தாய்?” என்று பல கேள்விகளை கேட்கிறாள். தற்செயலாக அங்கே வந்த ராட்ச பெண்ணிடம் ஏதோ ஒரு பதிலை இராமன் சொல்லிவிட்டு அவளை அனுப்பி இருக்கலாம். மாறாக தன் ஆர்ஜவ குணத்தால் தன் சரிதை முழுவதையும் அவளிடம் சொல்கிறார். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாக்கில் ஒன்றைச் சொல்லத் தெரியாதவன் ராமன்!
5.சௌஹார்தம்
எப்போதும் எல்லோருக்கும் நன்மையே எண்ணும் குணம் துன்பத்தை தான் ஏற்று கொண்டு அவர்களுக்கு நன்மை செய்யும் குணம்
மீரா அருந்திய விஷத்தை தான் ஏற்று கொண்டான்

6.ஸாம்யம்
சாதி குலம் உயர்வு தாழ்வு பாராமல் தன்னை அடைந்தவரை ஏற்று கொள்ளும் குணம். உதாரணம் திருப்பாணாழ்வார்.
7.காருண்யம்
இன்னார் இனியார் என் பாராமல் இரங்கும் குணம். பெருமாள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும் காருண்யத்தின் வெளிப்பாடு தான். எங்கோ அரண்மனையில் ‘கோவிந்தா’ என்று கதறிய திரௌபதிக்கு உடனே ஓடினார். தாயார் ராம, கிருஷ்ண அவதாரத்தில் தானும் பூலோகத்தில் வந்துதித்ததும் காருண்யமே.
8.மாதுர்யம்
எதிரியின் சிறப்பை மதித்து தன்னை கொல்ல வந்த பகைவனுக்கு இனிமையாக இருக்கும் குணம். ராம பிரான் இராவணனை இன்று போய் நாளை வா என்றான்

9.காம்பீர்யம்
மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத படி தன்னடக்கம் காட்டி எதிர்பாராத வகையில் அருள் புரிவான். குசேலருக்கு பாத அபிஷேகம் செய்து
செல்வ மழை பொழிந்தான்.
தைரியம்
10. ஷௌர்யம்
பகைவர்கள் எத்தனை வல்லவராக இருப்பினும் துணையின்றி அவர்கள் நடுவே புகும் குணம். துரியோதனன் சபையில் தனி ஒருவராக வந்தவர்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 30
#ஐந்து_பவித்திரமான_வஸ்துக்கள்
உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா
1. எச்சில்
2. சிவ நிர்மால்யம்
3. வாந்தி
4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை
5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று
மஹாபாரதத்தில் வேதவியாசர் இவை ஐந்தையும் பவித்திரமானImage
வஸ்துக்களாகச் சொல்லியிருக்கிறார். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே.

வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்த பட்சம் 3 அர்த்தங்கள்Image
உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தது 10 அர்த்தங்கள் உண்டு. அந்த மஹாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து
Read 20 tweets
Jul 30
#கதலி_ஸ்ரீலட்சுமிநரசிம்மப்_பெருமாள்
சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மறைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். ஆயிரம் வருடங்கள் பழைமையானImage
இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளை பொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப் பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண்
அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழை
Read 11 tweets
Jul 30
#Siruvachur_MaduraKaliaman_Temple
Siruvachur located 50 kms from Trichy and 8 kms from Perambalur. The temple dates back to 1000 years. Large number of devotees throng this temple on Mondays and Fridays to worship the powerful deity and seek her divine blessings. According to Image
tradition Chelliamman was the local deity of Siruvachur. An evil magician through his intense devotion to the deity won her favour. Pleased with his devotion, Chelliamman granted him any boon he wished. The cruel sorcerer wished that the deity should be his servant and do hisImage
bidding at all times. Bound by the power of her own boon Chelliamman had no other option but to obey all his evil commands. At this time Kannagi the embodiment of virtue and chastity happened to visit Siruvachur. Kannagi was the devoted wife of Kovalan, a merchant. The happyImage
Read 18 tweets
Jul 29
#நற்சிந்தனை
குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பிறகு தருமர் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ஆட்சியில் அமர்ந்தார். அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், சூரியன் வடதிசை நோக்கி பயணிக்கும் உத்ராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்து தம் உயிரை விடுவதற்காகக் காத்திருந்தார். ஒரு நாள் தருமர் தனது Image
தம்பிகளுடனும் திரௌபதியோடும் பீஷ்மரைக் காண குருக்ஷேத்ரத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் பீஷ்மரைக் கண்டு வணங்கி அமர்ந்தனர். பீஷ்மர் தனது உரையாடலில் வர்ணம், ஆசிரமம், மக்களின் கடமை, அரசரின் கடமை போன்ற பல விஷயங்களைப் பற்றிக் கூறினார். இந்த உரையாடலின் இடையில் திடீரென்று திரௌபதியின்
சிரிப்பு ஒலி கேட்டது. சிரிப்பு சத்தத்தைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, பீஷ்மர் தன்னுடைய தர்மோபதேசத்தை நிறுத்தி, திரௌபதியை நோக்கி, "மகளே, ஏனம்மா சிரித்தாய்?" என்று கேட்டார். திரௌபதிக்கோ நாணமாகப் போய்விட்டது. "என்னை மன்னித்து விடுங்கள் பிதாமகரே ஏதோ அறியாமல் சிரித்து
Read 12 tweets
Jul 29
#ஸ்ரீநரசிம்மர்
மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரம். அசைக்க முடியாத நம்பிக்கையுடன், உண்மையான பக்தியோடு அழைத்ததால், தூணிலிருந்தும் வெளிப்பட்டு பக்தனை காப்பாற்றுவான் என்று உலகிற்கு உணர்த்திய அவதாரம்Image
நரசிம்ம அவதாரம். நரசிம்ம அவதாரம் என்றாலே மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உக்கிரமான தோற்றம் தான் அனைவரின் நினைவிற்கு வரும். ஆனால் உண்மையில் நரசிம்மர் கருணையின் வடிவம் அவர். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிபவர். நரசிம்மர் 74 க்கும் அதிகமான ரூபங்களில் அருளக் Image
கூடியவர். இதில் மிக முக்கியமானது 9 ரூபங்கள் ஆகும். உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோரநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்பன நரசிம்மரின் 9 முக்கிய வடிவங்களாகும். இவற்றில் யோக நரசிம்மர் யோக
Read 12 tweets
Jul 28
#அரவான்
மகாபாரதப் போரில் நிறைய வீரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக தன் உயிரையே விட்டவரும் (களப்பலி) மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவரும் இவர் மட்டுமே. அர்ஜுனனுக்கும், நாக இளவரசியான உலுப்பிக்கும் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் Image
பொருந்திய மகனாகப் பிறக்கிறார் அரவான். குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக காளி தெய்வத்திற்கு தன்னையே பலியிட சம்மதிக்கிறார் அரவான். ஆனால், தான் சாவதற்கு முன்னால் இரண்டு ஆசைகள் இருப்பதாகக் கூறுகிறார். முதலாவதாக, தான் திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில்
ஈடுபட வேண்டும், இரண்டாவது மகாபாரதப் போரை தான் முழுமையாகக் காண வேண்டும். நாளைக்கு இறக்கப் போகிறவரை திருமணம் செய்து கொள்ள யாருமே சம்மதிக்கவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்துக் கொள்கிறார். அரவான் இறந்த பிறகு விதவைக் கோலம் பூண்டு அனைத்து
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(