#AppleEvent
ஆப்பிள் Developer Conference பிறகு ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தது வரப்போகும் Apple Eventக்காக தான் என்று சொன்னால் மிகையாகது.அந்தளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்களுக்கு அத்தனையும் பூர்த்தி செய்து இருக்கிறது நேற்றைய தினம் நடந்த Event. நேற்றைய
Eventல் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களுடைய புதிய Productகளை வெளியிட்டு இருந்தாங்க ஆப்பிள் வாங்க அது என்ன அதில் அப்படி என்ன புதிய வசதிகள் இருக்கின்ற என்று தெரிந்துகொள்வோம்.
நேற்றைய தினம் 10:30 மணிக்கு தொடங்கிய Event முதலில் அறிமுகம் செய்யப்பட்டது ஆப்பிள் Watch 8
துவக்கத்தில் வந்த வீடியோவில் ஆப்பிள் Watch உயிர் காப்பாற்ற பற்ற பலர் தங்குளுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதை அப்படியே ஒரு Documentary வடிவில் ஆப்பிள் கொண்டு வந்து இருந்தாங்க. இது போல பல சம்பவங்களை நாமும் அடிக்கடி பதிவு செய்து இருந்தோம் இந்தியாவிலும் கூட அப்படி ஒரு சில
சம்பவங்கள் நடந்து இருக்கிறது. சரி வாங்க விசயத்துக்கு வருவோம். இந்த துவக்கம் முடிந்த பிறகு புதிய ஆப்பிள் Watch 8 அறிமுகம் செஞ்சாங்க கிட்டத்தட்ட பழைய Apple Watch ஒரே போல வசதிகள் இருந்தாலும் இதில் கூடுதலாக இரண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து இருக்காங்க ஆப்பிள் அது தான்
ரொம்ப முக்கியமானது என்று கூட சொல்லலாம் ஒரு இரண்டு Temperature Sensors அறிமுகம் செஞ்சு இருக்காங்க ஆப்பிள் இதன் மூலம் நம்முடைய உடலில் நடக்கும் சிறிய அளவிலான உடல் வெப்ப நிலை மாற்றங்களையும் கணிக்க முடியும் என்று சொல்ராங்க, அதோட இன்னும் கூடுதலாக பெண்களுடைய மாதவிடாய் காலங்களை கணக்கிடும
வகையில் Period Prediction கொண்டு வந்துருக்காங்க இதன் மூலம் பெண்கள் தங்களுடைய Periods தேதிகளை கணக்கில் கொள்ள முடியும் என்று சொல்றாங்க ஆப்பிள்.
அதோட இன்னொரு குறிப்படத்தக்க Update என்ன அப்டினு பார்த்தோம்னா Crash Detection, நாம எதாவது வாகனங்களில் பயணம் செய்யும் போது நமக்கு ஏதாவது
விபத்து ஏற்பட்ட உடனே அந்த அதிர்வுகளை கொண்டு நம்முடைய Emergency Contact தொடர்பு கொள்ளும்படி ஆப்பிள் வடிவமைச்சு இருக்காங்க. இதற்கு 3-axis gyroscope மற்றும் G Force Accelerometer உதவியியை கொண்டும் இதை நடைமுறைபடுத்த மற்றும் இந்த தொழில்நுட்பம் வேலை செய்ய ஆப்பிள் 1 மில்லியன் Hour Real
Drivingல பயன்படுத்தி சோதனை செய்து இருக்காங்க.அதோட மட்டுமில்லாமல் Low Power Mode ஒன்னு கொண்டு வந்துருக்காங்க ஆப்பிள் இதன் மூலம் 18 மணிநேரம் இருக்கும் பேட்டரி Power 36 மணிநேரம் வரை உபயோக்க முடியும் என்று சொல்ராங்க ஆப்பிள்.
அடுத்த இந்த வருடம் தனியாக ஒரு ஆப்பிள் Watch வெளியிட்டு
இருக்காங்க ஆப்பிள் அதாவது Apple Watch Ultra இது Athletes, Divers அப்பறம் Hill Climbers அவங்களுக்காக தனிதுவுமா வெளியிட்டு இருக்காங்க ஆப்பிள் அதோட மட்டுமில்லாமல் ஆப்பிள் வெளியிட்ட வாட்ச்களிலேயே இது தான் ரொம்ப பலமானது கூட வாங்க இதில் என்ன புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு
வந்துருக்காங்க என்று பார்ப்போம்.
இதை அதிகபட்சமாக 2000 Nit Brightness கொடுத்து இருக்காங்க அதோட Night View கொடுத்து இருக்காங்க Night View அவ்ளோ அழகா இருக்கு அதோட நீங்க எதாவது ஒரு பகுதில மாட்டிக்கிட்டீங்க அப்டினா உங்களை தேடி வரவங்களுக்கு Signal கொடுக்கிறது போல ஒரு Siren போல ஒழி
எழுப்பக்கூடிய வசதியை கொடுத்து இருக்காங்க. Speakers இருக்கு நீங்க இதுல Phone பேசிக்கலாம் அதுவும் அந்த Adventures Conditions Voice தெளிவா கேட்கறது போல புதுசா அறிமுகம்படுத்தி இருக்காங்க.அதுமட்டுமில்லாமல் இதுல Action Button புதிதாக கொடுத்து இருக்காங்க இதன் மூலம் மேல சொன்ன Siren
அப்பறம் நீங்க எதாவது ஒரு Workout துவங்கிருங்க அப்டினா இதை Press பண்ண போதும் உங்களோட Exercise Track பண்ண முடியும்.
அதோட 36 மணிநேரம் Battery Life கொடுத்து இருக்காங்க, அப்பறம் Backtrack அப்டினு ஒரு option கொடுத்து இருக்காங்க இதன் மூலமா நீங்க ஒரு இடத்துல இருந்து Trekking
துவங்கிருங்க அப்டினா அந்த இடத்தை Mark பண்ணிட்டு திரும்ப நீங்க அந்த இடத்துக்கு வர வழி தெரியவில்லை என்றால் Backtrack மூலம் அந்த இடத்திற்கு செல்ல GPS மூலம் சென்றடைய முடியும். அதுக்கு அப்பறம் Divers எக்கச்சக்கமான புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வந்துருக்காங்க.அதோட இந்த Watch -20 முதல்
55 Degree சூழ்நிலைகளிலும் வேலை செய்றது போல வடிவமைப்பு சையது இருக்காங்க.
அடுத்து எல்லரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 14 டிசைன் அளவிலா பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யலைன்னா கூட அதோட Notch மாத்தி இருகாங்க Dynamic Island Notch கொடுத்து இருக்காங்க, அதோட பெரிய Camera
முக்கியத்துவம் கொடுத்து Update பண்ணிருக்காங்க True Depth கேமரா கொடுத்து இருக்காங்க இதன் மூலம் Low Lightning கூட நல்ல தெளிவான புகைப்படங்கள் எடுக்க முடியும் என்று சொல்ராங்க. Action Mode ஒன்னு கொடுத்து இருக்காங்க அது என்ன அப்டினு பார்த்தோம்னா Runningல ஏதாவது வீடியோ எடுத்தாங்க அப்டின
இதன் மூலம் Stability ரொம்ப நல்ல இருக்கும்னு சொல்ராங்க. அதோட Sim Trays கிடையாது Only E-Sim மட்டும் தான்.
அதோட இதுல ரொம்ப முக்கியமான Update என்ன என்று பார்த்தோம்னா Emergency SOS Satellite இந்த தொழில்நுட்பம் மூலமாக நீங்க எதாவது ஒரு ஆளில்லாத பகுதிகளிலே சிக்கி கொண்டிங்க அப்டினா
செயற்கைகோள் உதவியோடு உங்களோட இடத்தை Emergency Services பகிர்ந்து கொள்ள முடியும் ஏன் நீங்க அவங்களுக்கு Message கூட பண்ண முடியும் அதன் பிறகு உங்களோட Location கண்டுபிடிச்சு அவங்க உங்களை மீட்க இது பெரிதும் உதவும், ஆனால் ஆப்பிள் இதை இரண்டு வருடத்துக்கு மட்டும் தான் இலவசமாக கொடுக்க
போறதாக சொல்லி இருக்காங்க.
இந்த பதிவில ஓரளவுக்கு என்னால Cover பண்ண முடிஞ்ச அளவுக்கு பண்ணிருக்கேன், வாய்ப்பு இருந்தால் அடுத்ததடுத்த பதிவுகளில் இன்னும் தெளிவாக அறிந்து கொள்வோம்.
பதிவு பயனுள்ளதாக இருந்ததா
@Cineversals @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @Laxman_udt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @ArunSANJAY_B @PearlcityKing @mahaprabhuoffl
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.