SundaR KamaL Profile picture
விவசாயி மகன்🌾 கமல் பக்தன்❤️ மக்கள் நீதி மய்யம்🔦 ஜாதி, மதம் இல்லை👊 சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏

Sep 10, 2022, 62 tweets

"இன்டஸ்டிரி ஹிட்" என்றால் இப்படி இருக்க வேண்டும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி நடிகர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் பாராட்டிய ஒரே திரைப்படம் #Vikram, திரெட் (61 வீடியோ)👇

1) #விக்ரம் படத்துல கமல் சார் எவ்வளவு நேரம் வரார்னு முக்கியமல்ல வர நேரத்துல எவ்வளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது தான் முக்கியம், பேட்மேன் விக்ரம் ரெண்டுமே ஒன்னு அவங்க காட்சில இருப்பாங்க இல்லனா அவங்கள பத்தியே பேசுவாங்க - @PrithviOfficial💥

2) #விக்ரம்'ல லோகேஷ் இன்டலிஜென்டா வொர்க் பண்ணியிருக்காரு, ஒரு புதிய கமல் சாரை எல்லாருக்கும் காட்டியிருக்காரு முக்கியமா கமல் சார் நடிப்பில "இதுலாம் நான் எப்பவோ பாத்துட்டேன்டா நீங்கலாம் சின்ன பசங்கடான்னு" சொல்லாமலே சொல்லியிருக்காங்க - @PrithviOfficial💥

3) எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு #Vikram திரைப்படம் தமிழ் சினிமா சரித்திரத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது அதுவும் இந்த மாதிரி கதையில நடிக்கலாம் செம தைரியம் வேணும் - @ActorMadhavan👏

4) மற்ற மொழி திரைப்படங்கள் எல்லாம் நல்லா ஓடும் போது தமிழில் அப்படி ஒரு படம் பெருசா அடிக்கனும்னு எல்லாரும் கேட்டாங்க, இப்ப நம்ம "நெஞ்சை நிமிர்த்தி சொல்லாம் #Vikram இருக்குன்னு" முக்கியமா பான் இந்தியா படம் போல அமைந்துள்ளது - @arunvijayno1 @DirectorHari_💥

5) காலையில எழுந்த உடனே என்னாடா இன்னைக்கு இவ்வளவு இன்டர்வியூ போகனுமான்னு நினைக்கும் போது #கமல் சார் இந்த வயசுல பண்ற புரமோஷன் ஆல்ரெடி பிளாக் பஸ்டர் ஆகும்னு எல்லாரும் சொல்ற #Vikram படத்துக்கே உலகம் ஃபுல்லா சுத்துறாரு அது தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் @RJ_Balaji👏

6) #Vikram முதல் நாள் முதல் காட்சி போனேன் ரொம்ப புடிச்ச படம் தமிழ் சினிமாவே கொண்டாடுகிற படம் அந்த மாதிரி படம் எப்பயாவது ஒரு தடவ தான வரும், ஸ்கூல் படிக்கும் போது சத்யம் தியேட்டரில் பழைய விக்ரம்'க்கு ராக்கெட்லாம் கட்டுனேன் - #ரெடின்கிங்ஸ்லி💥

7) என்னோட ஃபேவரைட் ஹீரோ #கமல் சாரோட "விக்ரம்" திரைப்படம் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது - @iamnagarjuna👏

8) அவருக்கு உலகத்துல உள்ள அனைத்து விருதுகளையும் இப்ப கொடுக்கனும் அப்படி அமைஞ்சது தான் இந்த #Vikram வெற்றி‌ அவரோட எல்லா முயற்சிக்கு இயற்கையா அவருக்கு கொடுத்த கொடை இந்த வெற்றி - @rparthiepan💥

9) நான் வியந்து பார்க்கும் இயக்குனர் @Dir_Lokesh கமர்ஷியல் வெற்றி சாதாரண விஷயம் கிடையாது, #கமல் சார் மாதிரி மிகப் பெரிய கலைஞனுக்கு இவ்வளவு பெரிய #விக்ரம் வெற்றியை தந்தமைக்கு லோகேஷ் கனகராஜை மலை போல் பாராட்ட வேண்டும் - @rparthiepan💥

10) #Vikram படம் ஜெய்ச்சே ஆகுனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன், அந்த விக்ரம் அப்பவே பெரிய பட்ஜெட்'ல எடுத்த Sci-fi படம் அப்படி எடுக்குறது ரொம்ப கஷ்டம், ஹாலிவுட் படம் போல இருக்கும் முக்கியமா இந்த விக்ரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு - @actor_jayamravi💥

11) சினிமாவுக்கு மொழி என்பதில்லை நல்லப் படம் எந்த மொழியாக இருந்தாலும் சரி உலகத்தில் எந்த ஊராக இருந்தாலும் சரி மக்கள் பார்க்கவும் வரவேற்க்கவும் தயாரா இருக்காங்க இப்ப #Vikram #RRR போன்ற படங்களை உலகம் முழுவதும் கொண்டாடுனது போல - நடிகர் @am_kathir💥

12) நான் கடைசியா பார்த்த பெஸ்ட் மூவி #Vikram, கமல் சாரோட தீவிர ரசிகன் நான் அவரோட நடிப்பு வேற லெவல் நல்லா என்ஜாய் பண்ணி பார்த்தேன் - @chay_akkineni💥

13) #கமல் சாரோட #Vikram மிகப் பெரிய வெற்றிக்கு என்னோட வாழ்த்துக்கள், சினிமாவில் இவ்வளவு வருஷம் ஆகியும் இப்ப உள்ள நடிகர்களுக்கு போட்டியா இருக்காரு அவருக்கு வயது ஒரு தடை இல்ல என்னைக்கும் அவர் ஹீரோ தான், கிளாஸ் என்றும் நிலையானது - #ரன்பீபீர்கபூர்💥

14) ரீசன்டா நான் பார்த்து புடிச்ச தமிழ்ப்படம் #விக்ரம், அந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது உலகமே சொல்லுதே கொண்டாடுதே சொல்லப்போனா படம் சான்சே இல்ல - தெலுங்கு நடிகர் @ramsayz💥

15) #Vikram படத்துக்கு கனடாவில் நான் 200 பேர கூட்டிட்டு போனேன், சச்சின் 200 அடிச்ச போது இவருக்கு தான்டா இது இருக்கனும்னு தோணிச்சு அது போல தான் இப்ப #கமல் சார்க்கு இந்த வெற்றி எப்படி டாப்'ல போய் நிக்குது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு @Music_Santhosh🔥

16) என்ன பொறுத்த வரைக்கும் கமர்ஷியல் படமாக இருந்தாலும் கதை ரொம்ப முக்கியம் இப்ப #விக்ரம் படம் கூட கமர்ஷியல் படம் தான் ஆனா கதை நல்லா இருந்ததால தான் நமக்கு மூனு மணி நேரம் படம் நல்ல என்டர்டெயின்மென்டா போச்சு - @Sai_Pallavi92👏

17) தமிழ் சினிமாவின் பொற்காலம் இது #Vikram திரைப்படம் இதுவரைக்கும் தமிழ் சினிமா சரித்திரத்தில்‌ யாரும் பார்க்காத வசூல் சாதனையை படைத்ததோடு இல்லாமல் இதுவரைக்கும் யாரும் பார்க்காத 90 கோடி ஷேர் பண்ணியிருக்கு, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு - @iam_SJSuryah💥

18) ஒரு #கமல் ரசிகரா எங்களுக்கு அவர் யாருன்னு தெரியும் ஆனா இப்ப இருக்குற யூத்துக்கு #Vikram மூலம் அவரோட பழைய படங்கள் பழைய வரலாறு எல்லாத்தையும் தேடி தேடி பாக்குறாங்க அதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் இந்த ஜென்ரேஷனுக்கும் ரீச் ஆயிட்டாருன்னு - @shobimaster👏

19) #Vikram படத்தின் மாபெரும் வெற்றி எனக்கு மட்டுமல்ல இன்டஸ்டிரிக்கே சந்தோஷம், #கமல் சாரை நேரில் சந்தித்து பாராட்டுனேன் தமிழ் சினிமா இப்படி ஒரு வெற்றியை பார்த்து பல வருஷம் ஆயிடுச்சு நம்பர் ஒன் வசூலும் இதான் - @ksravikumardir💥

20) #Vikram மிகப் பெரிய படம் மிகப் பெரிய பிஸ்னஸ் #கமல் சாரோட 60 வருட உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி "விக்ரம்", கமல் சார் அந்த படத்த ஒத்துக்கிட்டு அந்த உலகத்துல நடிச்சது எனக்கு ரொம்ப புடிச்சது - @menongautham💥

21) என்னோட பசங்க #Vikram படம் ரிலீஸ் ஆனா அன்னைக்கு முதல் நாள் ஃபுல்லா தியேட்டர்லயே இருந்து ஓடுனா எல்லா ஷோவும் பாத்துட்டு தான் வந்தாங்க இந்த வயசுலையும் என்னமா நடிக்கிறாரு மனுஷன் - நடிகை #டிஸ்கோசாந்தி💥

22) யானை புரமோஷன் ஃபுல்லா #Vikram திரையரங்கில் தான் பண்ணோம், அப்படி ஒரு கூட்டம் 500 பேருக்கு மேல ஆடியன்ஸ் அப்ப தான் நம்பிக்கை வந்துச்சு தமிழ் சினிமா வலிமையா இருக்குன்னு, தமிழ் இயக்குநர்கள் ஒண்ணும் பண்ணமாட்டீங்களானு கேட்டாங்க அதை உடைத்தது #விக்ரம் - #ஹரி💥

23) தமிழ்நாட்டில் #விக்ரம் அலை இன்னும் ஓயல 300 கோடி வசூலை தாண்டி போயிட்டிருக்கு, கேரளாவில் விநியோகஸ்தர் @shibuthameens 6 1/2 கோடிக்கு படத்தை வாங்குனாரு இன்னைக்கு 33 கோடி தாண்டி வசூல் போயிட்டிருக்கு - தயாரிப்பாளர் @studio9_suresh🔥

24) #கமல் சார் புரமோஷன் பண்ணணும்னு அவசியமே இல்ல ஆனா துபாய் மலேசியா கேன்ஸ்னு படத்த எங்கயோ கொண்டு போய் 400 கோடி கிட்ட வசூல் பண்ண வச்சிட்டாரு, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் #Vikram தான் கண்டிப்பா 500 கோடி வசூல் ஆகும் - @studio9_suresh💥

25) இப்ப வரைக்கும் #Vikram படத்துக்கு #கமல் சார் புரமோஷன் பண்றாரு, அவர பாத்து வியக்கிறேன் ஆச்சிரியப்படுகிறேன் இப்ப இருக்குற ஜூனியர் நடிகர்கள் எல்லாரும் அவர பாத்து கத்துக்கனும், ஒரு படத்தை எப்படி புரமோஷன் பண்ணணும்னு ஒரு உதாரணமா இருக்காரு @seenuramasamy💥

26) #விக்ரம் பிரமாண்டமான வெற்றி தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருக்கு, பான் இந்தியா படத்தை எல்லாம் தோற்கடித்து ஆல்டைம் ரெக்கார்டு வசூலை எட்டியுள்ளது - இயக்குனர் @seenuramasamy🙏

27) தென்னிந்திய மொழி படங்கள் எல்லாம் உலக அளவில் பேசப்படுகிறது இப்ப வந்த #விக்ரம் ஒரு உதாரணம், மிக சிறப்பான படம் #கமல் சார் நடிப்பு லோகேஷோட திறமையான இயக்கம் எல்லாமே சூப்பர் - #VikrantRоna இயக்குனர் @anupsbhandari🔥

28) நான் #கமல் சாரோட பெரிய ரசிகன்‌ அவரை பாத்து தான் நான் கத்துக்கிட்டேன், அவர் பக்கத்துல உக்கார்ந்து இருக்குறதே எனக்கு ரொம்ப பெருமை, ஒவ்வொரு தடவை அவர பார்க்கும் போது எனக்கு எனர்ஜி ஆகுது, #Vikram பெரிய வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள் சார் @AKPPL_Official💥

29) #Vikram படம் பார்த்தேன் பிண்ணிட்டாரு மனுஷன் எப்படி சார் உங்களால மட்டும் முடியுது நீங்க தான் சார் எனக்கு எப்பவும் இன்ஸ்பிரேஷன் @chiyaan💥

30) #Vikram படத்தோட வெற்றி எனக்கு மிகப் பெரிய சந்தோஷம், #கமல் சாரை நினைக்காத நாளே இல்ல அவரோட ஒரு வீடியோ ஒன்னு இருக்கு அது தான் என்னோட வாழ்க்கையில் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் - @Karthi_Offl 💥

31) நான் #கமல் சாரோட பயங்கரமான ரசிகன் நான் லோகேஷ்லாம் சண்டையெல்லாம் போட்ருக்கோம் நான் பெரிய ரசிகரா இல்ல நீ பெரிய ரசிகரான்னு, தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் எந்தவொரு தமிழ் படமும் பண்ணாத வசூலை #Vikram திரைப்படம் பண்ணியிருக்கு வாழ்த்துக்கள் - @Udhaystalin💥

32) #Vikram படத்தின் வசூலை பார்க்கும் போது என்னோட படமும் அதுப் போல வசூல் பண்ணணும்னு ஆசையா இருக்கு - @Siva_Kartikeyan💥

33) #Vikram படத்தின் மாபெரும் வெற்றிக்காக #கமல் சார்க்கு தேங்காய் உடைச்சி கடவுளை கும்பிட்டேன், இது தான் இவரோட வெற்றி இது தான் அவரோட ஸ்தானம், இது தான் அவர் இங்கு இருக்க வேண்டிய இடம், இத்தனை வருஷம் காத்திட்டு இருந்தோம் தலை வணங்குகிறேன் - @VishalKOfficial💥

34) #Vikram முதல் நாள் பிரமாண்டமான ஓப்பனிங் முக்கியமா ஈவினிங்ல இருந்து பெரிய பிரஷர், ஞாயிறு வசூலில் 80% திங்களையும் இருந்துச்சு எங்கள பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய வசூல் மிகப்பெரிய ஹிட், பான் உலக படம் - திருப்பூர் #சுப்பிரமணியம்💥

35) தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வசூல் சாதனைகளையும் #விக்ரம் முறியடித்துவிட்டது, தமிழ் சினிமா மட்டுமல்ல மொழிமாற்று படங்களான #பாகுபலி1 #பாகுபலி2, #KGF2 வசூல் சாதனைகளையும் முறியடித்துவிட்டது என 100 சதவீதம் சொல்லலாம் - திருப்பூர் #சுப்பிரமணியம்💥

36) தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து நம்பர் ஒன் வசூல் சாதனையை படைத்துவிட்டது #Vikram, இங்கு வசூல் சாதனை படைத்த பாகுபலி 1 & 2, #RRR, #KGF2 சாதனைகளையும் முறியடித்தது நம் தமிழ் சினிமாவுக்கு தான் பெருமை - திருப்பூர் #சுப்பிரமணியம்💥

37) தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது #Vikram, தமிழ் சினிமாவில் அதிக "ஷேர், வசூல் & அதிக பேர் பார்த்த திரைப்படமும் விக்ரம் தான்", #கமல் சார்க்கு மிகப் பெரிய லாபம் - @AspSrither💥

38) மூன்று நாள்லயே விக்ரம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் தெலுங்கில் #RRR கன்னடத்துல #KGF2 தமிழில் #Vikram இன்னைக்கு ஃபுல்லா ஃபேமிலி ஆடியன்ஸ் தான் இது வரைக்கும் செம வசூல் சந்தோஷமா இருக்கோம், அடுத்த பத்து நாளும் பெருசா போகும் - @VettriTheatres & @GKcinemas💥

39) #கமல் சார் ஜெய்ச்சது கடவுள் ஜெய்ச்சது போல இருக்கு, விக்ரம் மிகப் பெரிய வெற்றி அதுவும் #RRR #KGF2 தாண்டி ஓடுறது நம்ம தமிழ் சினிமாவுக்கு பெருமை, என்னோட @greencinemas_ திரையரங்கில் டாப் 3 அதிக பேர் பார்த்த படம் 1) விக்ரம் 2) பீஸ்ட் 3) #KGF2 - @kegvraja🔥

40) இருப்போமா மாட்டோமா பிழைப்போமா இல்லை திரையரங்கை மூட வேண்டிய நிலையில் இருந்த போது எங்களை காப்பாற்றி தூக்கி நிப்பாட்டி நம்பிக்கை அளித்த படம் #விக்ரம், எந்தொரு நிலையிலும் #கமல்ஹாசன் வசூலில் மேலே செல்லக் கூடியவர் - திரையரங்கு உரிமையாளர் #அபிராமிராமநாதன்👏

41) #Vikram முதல் ஏழு நாளில் #கமல் சார்க்கு ஷேர் மட்டுமே 50 கோடி, இதுவரைக்கும் முதல் வாரத்துல இந்த அளவுக்கு ஷேர் வேற எந்த நடிகருக்கும் வந்ததில்லை, எப்படியும் 80 கோடிக்கு மேல ஷேர் கிடைக்கும் இன்னைக்கு தேதியில் #கமல் தான் நம்பர் ஒன் - தயாரிப்பாளர் #கேஆர்💥

42) திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் எதிர்பாராத வசூல், எங்க வெற்றி திரையரங்கின் பத்து வருட காலத்தில் #Vikram படத்துக்கு தான் முதல் வாரம் 67 காட்சிகள் வேறு எந்தப் படமும் ஓடவில்லை அனைத்தும் "ஹவுஸ்புல்" - @VettriTheatres @sri50💥

43) #விக்ரம் படத்தோட வெற்றியை எல்லாரும் தங்களின் வெற்றியா கொண்டாடுறாங்க, ஏகப்பட்ட சாதனைகளை படம் செஞ்சிட்டு இருக்கு ஓவர்சீஸ்ல மட்டும் 100 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருக்கு , ரிலீஸ் ஆனா ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் 201 கோடி வசூல் - @chithralax💥

44) தமிழ் சினிமா உலக வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த முதல் தமிழ் திரைப்படம் #விக்ரம், தயாரிப்பாளர் பங்கு தொகை மட்டுமே 100 கோடி ரூபாய் வந்துள்ளது இப்படி ஒரு வசூலும் பங்கும் எந்தவொரு தமிழ் சினிமாவுக்கும் இதுவரைக்கும் கிடைத்ததில்லை - @chithralax💥

45) எப்எம்எஸ் மார்கெட்டை உட்கார்ந்த இடத்துல இருந்தே ஆட்சி செய்தவர் #கமல் எல்லாமே தானா அதிக விலைக்கு போகும், இன்னைக்கு ஓவர்சீஸ் வசூலில் #RRR #KGF2 பிறகு #Vikram தான் இருக்கு, அவர் கமர்ஷியல் படங்கள் பண்ணாம அந்த இடத்தை விட்டாரு இப்ப வந்துட்டாரு - @bharath1💥

46) ஆந்திரால தமிழில் இருந்து டப்பிங் ஆகிய படங்களில் #Vikram தான் அதிக வசூல் ஷேர் மட்டுமே 25 கோடி வர வாய்ப்பு, கேரளாவில் #Vikram தான் தமிழ் சினிமாவின் உச்ச வசூல் ஷேர் மட்டுமே 15 கோடி, 200 கோடிக்கு மேல வந்துடுச்சு 300 கோடி எதிர்பார்க்கிறோம் @Dhananjayang💥

47) பாடி @greencinemas_ திரையரங்கில் #KGF2 பிறகு #Vikram தான் ஒரு நாளைக்கு 7 ஷோ போட்டோம் அதுவும் மிட்நைட் ஷோலாம் ஹவுஸ்புல், இது இங்க மட்டும் இல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்கிலும் இதான் நடந்துச்சு மிகப்பெரிய வசூல் @Dhananjayang💥

48) #Vikram பத்து நாளில் 125 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்குன்னு ரெட் ஜெயன்ட் டீம் சொன்னாங்க, ஆந்திரா 27 கோடி, கேரளா 30 கோடிக்கு மேல், கர்நாடகா 15 முதல் 20 கோடி, ஓவர்சீஸ்ல மட்டுமே 100 கோடி வசூல் இப்ப வரைக்கும் 300 கோடி பண்ணியிருக்கு @Dhananjayang👏

49) தமிழ் சினிமாவின் 91 வருட வரலாற்றில் #Vikram தான் நம்பர் ஒன் வசூல், ஐந்து வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த #பாகுபலி2 வசூலான 152 கோடியை "விக்ரம்" திரைப்படம் 17 நாளில் 156 கோடி வசூல் செய்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது - @Dhananjayang👏

50) தமிழ்நாட்டில் 17 நாளில் 156 கோடி இந்தியா முழுவதும் 246 கோடி வசூல் செய்திருக்கிறது, ஓவர்சீஸ் 112 கோடி, கேரளாவில் 17 நாளில் 35 கோடி வசூல் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது, உலகம் முழுவதும் ஒரு தமிழ்ப்படம் 400 கோடி வசூல் செய்த பெருமை @Dhananjayang👏

51) *சம்மரில் குடும்பங்கள் படத்திற்கு வரமாட்டார்கள் என கதையை உடைத்துள்ளது
*ஆக்சன் படத்தை குடும்பங்கள் விரும்ப மாட்டார்கள் என கதையை உடைத்துள்ளது
*பண்டிகை இல்லாத நாளில் வரும் படம் வசூல் சாதனையை செய்யாது என கதையை உடைத்துள்ளது #Vikram - @Dhananjayang👏

52) இப்போதைக்கு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் #Vikram 172 கோடிக்கு மேல் வசூல் செய்து 82 கோடி ஷேர் செய்துள்ளது கண்டிப்பாக 180 கோடிக்கு மேல் வசூல் செய்யும், இரண்டாம் இடம் #பாகுபலி2, மூன்றாம் இடம் #பிகில், நான்காம் இடம் #மாஸ்டர் - @Dhananjayang👏

53) நான்காவது வாரத்திலும் @greencinemas_ திரையரங்கில் புதுப் படங்களை விட #விக்ரம் படத்திற்கு தான் மக்கள் கூட்டம் வருகிறது, விக்ரமுக்கு 300 முதல் 400 பேரும் மற்ற படத்திற்கு 50 முதல் 80 பேர் தான் வருகின்றனர், தமிழ்நாடு முழுவதும் இதே தான் - @Dhananjayang👏

54) முதல் வாரத்தில் உலகம் முழுவதும் #Vikram 225 கோடிக்கு மேல் வசூல், தமிழ்நாட்டில் 102 கோடி இதுவரைக்கும் எந்த தமிழ்ப்படமும் முதல் வாரத்தில் இவ்வளவு வசூல் செய்ததில்லை, கேரளாவில் 27 கோடி தமிழ் சினிமாவின் உச்சம் தன் கோட்டையை மீண்டும் கைப்பற்றினார் - @sri50💥

55) ஒரிஜினல் ஓவர்சீஸ் ஹீரோ #கமல்ஹாசன், ஆஸ்திரேலியாவில் 1 மில்லியன், அமெரிக்காவில் 2.3+ மில்லியன் (17.18 கோடி) 3 மில்லியன் போகும், யூகேவில் இந்த வருடத்தின் நம்பர் ஒன் வசூல் £600,000 பவுண்ட்ஸ் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் #Vikram - @sri50

56) தமிழ்நாட்டில் இதுவரைக்கும்‌ #Vikram 102 கோடிக்கு மேல் வசூல் செய்து 800 திரையரங்கில் ஓடுகிறது, சிங்கிள் ஸ்கிரீன் அனைத்துலையும் ஐந்து முதல் ஆறு காட்சிகள் ஓடுகிறது - @sri50💥

57) #RRR, புஷ்பா, #KGF2 படங்களை போல நம்ம தமிழ்ப் படமும் உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என அனைவரும் ஆதங்கப்பட்டோம் அதற்கு பதிலளித்துள்து #விக்ரம், "கமல்" சார்க்கு மட்டுமே 125 கோடிக்கு மேல் லாபம் - @jbismi14💥

58) #விக்ரம் திரைப்படம் மூ‌ன்றாவது வாரம் ஆகியும் இன்னும் "ஹவுஸ்புல்" காட்சிகளாக போயிட்டிருக்கு அதுமட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது கண்டிப்பா 500 கோடி வரைக்கும் வசூல் செய்யும் - @jbismi14🔥

59) அவருக்கு 100 கோடி சம்பாரிச்சு தரனும்னு லட்சியம் ஏன்னா அந்த 100 கோடிய ரியல் எஸ்டேட்ல போடமாட்டாரு சினிமால போடுவாரு, #கமல் சார் சின்ன வயசுல இருந்து எனக்கு கொடுத்தற்க்கு நான் அவருக்கு கொடுத்த பரிசு இது @Dir_Lokesh💥

60) #Vikram வசூல் நமக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கு தமிழ் சினிமாவின் புதிய ஆரம்பம், எங்க படத்தோட புரமோஷனுக்கு விசிட் பண்ண அனைத்து #விக்ரம் திரையரங்கிலும் குடும்பங்கள், இளைஞர்கள் கூட்டம், இப்ப நம்ம "நெஞ்சை நிமிர்த்தி சொல்லாம் விக்ரம் இருக்குன்னு" - #ஹரி💥

61) ஆடியன்ஸ் இல்லனா நான் இல்ல, அவங்க கொடுத்தது தான் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதிக மக்கள் பார்த்த திரைப்படம் #Vikram "ஒன்றரை கோடி மக்கள் பார்த்திருக்காங்க" - @ikamalhaasan💥💥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling