ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Sep 17, 2022, 7 tweets

சமூகநீதிக் காவலன் ஆவடி.சா.மு.நாசரின் கதை!!

வாரிசு அரசியல் பிரச்சனை திமுகவின் மீது உள்ள பிரதான குற்றச்சாட்டு. தன் மகனை மேயராக்க சொந்த கட்சிகாரர்களே நெருக்கடி கொடுத்த போதும் அதற்கு சற்றும் செவிசாய்க்காத அமைச்சர் நாசர். தலைமையிடம் நேரடியாகவே பேசி ஆவடியை ஆதிதிராவிடர்களுக்கு

ஒதுக்க சொல்லியிருக்கிறார்! பின்னர், ஆவடி மாநகராட்சி எஸ்.சி(பொது) விற்கு ஒதுக்கப்பட்டது! 48 வார்டூகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 9வார்டில் வெற்றி பெற்ற தினக்கூலித் தொழிலாளி ஜி.உதயக்குமார் என்பவரை மேயராக தேர்வு செய்தார் சா.மு.நாசர் அவர்கள்... அந்த மேயர் பதவிக்கு சுமார் 20 கோடிவரை

பேரம்பேசப்பட்டது! எதையும் எதிர்பார்க்காமல் மாதம் 10,000 சம்பளம் பெறும் கட்டிடத் தொழிலாளியை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர் சாமு.நாசர் அவர்கள்.. அப்பகுதியில் அதிகமாக வசிக்கும் ஆதிதிராவிடர்களை தன் உயிருக்கும் மேலான சொந்தமாகவே நினைத்து வருகிறார்.நம்மில் பலருக்கும் தெரியாத

அமைச்சர் சாமு.நாசரின் சமூகநீதிக்கான போராட்டம் கட்டமைக்கப்பட்ட ஒன்று! ஆவடி மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற உதயக்குமாரின் கையில் வெறும் 15,000 மட்டுமே இருந்தது! மேலும், ஒரு தினக்கூலி செய்பவரை செங்கோலின் உரிமையாளராக்கிய பெருமை நம் அண்ணன் நாசரையே சாரும்! எதிரிகள் எப்போதும் அவர் மீது

மதத்தை முத்திரையாக குத்துவது வழக்கம். எதையும் பொருட்படுத்தாமல் தான் கொண்ட லட்சியப் பயணத்திலும், தன் பயணிக்கின்ற இயக்கத்திலும், தான் கொண்ட கொள்கையிலும், உறுதியாக இருந்தமையால் தான் ஒரு நிலைபெற்ற சிம்மாசனம் அவருக்கு கிடைத்துள்ளது! கலைஞரின் கண்ணசைவு தான் அண்ணன் நாசர் அவர்கள்...

தன் மகனுக்கு தான் மேயர் பதவியை வழங்குவார் என நினைத்திருந்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் அவர் கொடுத்த சவுக்கடி தான் சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி என்பதனை எந்த வரலாறும் மறைத்திடாது! சமூக நீதியை வெறுக்கும் சிலருக்கு மத்தியில் சமஉரிமையை வழங்கிய அண்ணன் நாசர் போன்று ஒரு தொண்டனை

நாம் தூக்கி நிலைநிறுத்த வேண்டும்! எங்கே ஒரு சமூகம் ஒடுக்கப் படுகிறதோ அங்கிருந்து ஒரு தலைவன் உருவாகிறான். ஆம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்திற்காக அவரின் கால்கள் பயணிக்கும் என
உறுதிமொழிகிறேன்!!

Congratulations sir @Avadi_Nasar 💐💐
❤️🖤
💥💥💥
#Dravidian_Leaders

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling