பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம். இதைவிட சுருக்கவே முடியாதுங்கிற அளவுக்கான சுருக்கம். இது பேசிக். இதை படிச்சீங்கன்னா இன்னும் நல்லா படம் புரியும்.
#PonniyinSelvan
1. வந்தியத்தேவன், இளவரசர் ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒரு லெட்டரை கொடுக்க தஞ்சை வர்றான். வர்ற வழியில சிற்றரசர்கள் சிலர் அரசர் சுந்தர சோழருக்கு எதிரா ஒரு திட்டம் போடுறதை கண்டுபிடிக்கிறான். நடுவுல ஆழ்வார்க்கடியானை சந்திக்கிறான்.
2. ஓலையை கொடுக்குறப்போ குந்தவையை மீட் பண்றான். குந்தவை வந்தியத்தேவனை இலங்கைக்கு போயி தன் தம்பி அருள்மொழி வர்மனை கையோட கூட்டிட்டு வர சொல்றாங்க. வந்தியத்தேவன் இலங்கை போறான்.
3. இலங்கை போறப்போ பூங்குழலி அப்படிங்கிற படகோட்டுற பொண்ணை சந்திக்கிறான். இலங்கைக்கு போறான். அருள்மொழி வர்மரை மீட் பண்றான். அவங்க நண்பர்கள் ஆகுறாங்க. தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்னு அருள்மொழி சொல்றாரு.
4. அதேநேரத்துல அருள்மொழியை அரெஸ்ட் பண்ணி தஞ்சாவூருக்கு கூட்டிட்டு வர சொல்லி சுந்தர சோழர் சிற்றரசர்கள் சதியால ஆணையிடுறாரு. அப்பா என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்.. நானே போயி சரணைடையிறேன்னு அருள்மொழி கிளம்புறாரு. இப்போ மத்தவங்க தடுக்குறாங்க.
5. இந்த சிற்றரசர்களை இப்படி தூண்டி விட்டு குளிர் காயிறதுதான் நந்தினி. ஏன்னா நந்தினியோட புருஷனை ஆதித்த கரிகாலன் கொடூரமா கொன்னுட்டான். அதுக்கு பழிவாங்க இதை பண்றாங்க. நந்தினிக்கு பாண்டிய மன்னனோடு பெர்சனல் பாடிக்கார்ட்ஸா இருந்தவங்க ஹெல்ப் பண்றாங்க.
6. அவ்ளோ பெரிய சோழ சாம்பராஜ்யத்துல சுலபமா பழி வாங்கிற முடியுமா? அதுக்கு தான் நந்தினி நம்ம சோழர் அரண்மனை யில் அரசருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் "பெரிய பழுவேட்டரை" மயக்கி உள்ள வந்தராங்க.
சின்ன பளு க்கு எப்பவுமே வந்தியத்தேவன் மேல சந்தேகம் இருந்துட்டே இருக்கும்.
7. இது இல்லாம ரவிதாசன், சேந்தன் அமுதன்,வானதி, மதுராந்தகன் னு பெரிய லிஸ்ட் இருக்கு. கடைசியில யாரு அரசன் ஆனா.. யாரு உயிரோட இருந்தா.. யாரு செத்தா அப்டிங்கிறதுதான் கதை.
இப்பவே சொல்றேன்... நந்தினி கேரக்டர் மிரட்டி எடுக்கும்.
நாளை முதல் show💙😍😊
நன்றி - வணக்கம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.