அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Oct 5, 2022, 10 tweets

அனைவருக்கும் வெற்றியைத் தரும் #விஜயதசமி நல்வாழ்த்துகள்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னை மகிஷாசுரனை அழித்து வெற்றி பெற்றாள்.

இந்த நாளை விஜயதசமி (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகின்றனர். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் #ராம்லீலா என்றும் கொண்டாடுகிறார்கள். புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து

வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்த நாள் விஜயதசமி. இந்த நாளில் எந்த

ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது இந்து மத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். விஜயதசமி கல்வி

தொடங்க உகந்த நாள். இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல் முதலாக எழுத்தறிவிக்கப் படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு #வித்யாரம்பம் என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, இசை வகுப்புகள், இதர கலைகளை கற்க புதிய வகுப்புகள்

தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துகள் எழுதப்படும்). மேலும் அவரவர் அபிமான

தெய்வங்களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். புதிய ஆரம்பம்! இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவர் என்பது ஐதீகம். விஜய தசமி நன்னாளில் சிவன் கோவில்களில் பரிவேட்டை எனும் உற்சவம் நடைப்பெறும். இந்த நாளில் வன்னி மரத்தில் இறைவன் அம்பு விடுவது வழக்கம். இதன் மெய்

பொருள் என்னவென்றால், வன்னி மரம் மனிதனாக கருதப்படுகிறது. இறைவன் வன்னி மரத்தில் அம்பு போடுவது, நமக்கு ஞானத்தை உபதேசிப்பதாக அர்த்தம். அம்புகள் தான் ஞானம். விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி, வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம். தேவி மாகாத்மியத்தில் மகா நோன்பு என்று

குறிப்பிடப்படும் நாள் இது தான். மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் புகுவதற்கு முன்பு பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்தில் மறைத்துவைத்து தாய் துர்கையை வணங்கி ஸ்தோத்தரித்தனர். பின் ஓராண்டு முடிந்து திரும்பி வந்து துர்கையை மீண்டும் போற்றி வழிபட தாய் துர்கை அவர்களின் ஆயுதங்களை வழங்கி

ஆசி அருளிய நாள் விஜயதசமி. விஜய தசமி அன்று பல கோவில்களில் நடக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. சண்டி என்பது முப்பெரும் தேவியரை குறிப்பிடுவது ஆகும்.
புதிய ஆரம்பத்தை வரவேற்போம்! வெற்றியை பெறுவோம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#HappyVijayadashami

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling