அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Oct 8, 2022, 13 tweets

#தாமோதரன் விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வருவது இந்த அதி அற்புதமான திருநாமம். தாம உதரன்’ என்றால் ‘எல்லாவற்றுக்கும் இருப்பிடமான வயிற்றைக் கொண்டவன். அதாவது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்’ என்பது பொதுவான பொருள். வெண்ணெய் திருடுகிறாயா? உன்னைக்

கட்டிப் போடுகிறோன் பார் என்று யசோதை பால கிருஷ்ணனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் போடப் பார்த்தாள். முடியவில்லை. அவள் எத்தனை கயிறுகளைச் சேர்த்து ஒட்டுப் போட்டுக் கொண்டே போனாலும் தன் சின்ன வயிற்றைச் சுற்றிக் கட்டுவதற்குப் போதாதபடி மாயாஜாலம் செய்தான். பிறகு அவள் வேர்த்து

விருவிருத்துப் போனதைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தானாகவே கயிற்றிலே கட்டுப்பட்டான், அதனால் ‘தாமோதரன்’ என்று பேர் ஏற்பட்டது. உதர என்றால் வயிறு. தாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைத்துக்கும் அவனுடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்

கொண்டிருப்பவன் அவன். இன்னும் ஒரு பொருள். உதார என்பது பரிவு உணர்ச்சியைக் குறிக்கும். தம என்பது தன்னடக்கத்தைச் சொல்லும். அதனால் தாமோதரன் என்ற சொல் 'குன்றாத தன்னடக்கத்துடன் ஏழை, எளியவர்களிடம் மிகுந்த பரிவுடன் இருப்பவர்' என்றும் பொருள் தரும்.
காஞ்சி #மகாபெரியவா 'தாயைக் குடல் விளக்கம்

செய்த தாமோதரனை' என்ற ஆண்டாள் வாக்கிற்கு 'தன்னை தரித்த தாய் தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாசத்தால் தூய்மை ஆக்கியவன்' என்று பொருள் சொல்லி, 'எவனது குடலுக்கு வெளியிலே மேல் பக்கம் தாம்புக் கயிற்றைப் போட்டு வளர்ப்புத் தாய் யசோதை புண்படுத்தினாளோ, அவன் தன் பெற்ற தாயின் குடலை தன்னுடைய

வாசத்தாலேயே தூய்மை செய்தவன்' என்று இன்னும் விளக்குகிறார். “உரலோடு சேர்த்து யசோதை கட்டிப்போட, மிருதுவான உன் வயிற்றைக் கயிறு உறுத்தும் படி எளிமையாகக் கட்டுப்பட்டாயே!” என்று ஆழ்வாராதிகள் இதை உருகிப் பாடி அநுபவித்திருக்கிறார்கள். தான் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்படும் பக்த

பராதீனன் ஆனால் அவர்கள் ‘என்னால் கட்டிவிட முடியும் என்ற அகம்பாவம் இருந்தால் தன்னைக் கட்டமுடியாது, தானே கருணைகொண்டு கட்டுப்பட மனம் வைத்தால்தான் முடியும் என்று காட்டுபவன் தாமோதரன். பாரத யுத்தம் ஏற்படுவதற்கு முன், அன்பினால் ஸஹாதேவன் ‘உன்னைக் கட்டிப்போடுகிறேன் பார்’ என்று சவால் விட்ட

போது, அவன் நிஜமாகவே கட்டிப் போடும் படியாகவும் நின்றிருக்கிறான். தாம உதரன்’ என்றால் ‘எல்லாவற்றுக்கும் இருப்பிடமான வயிற்றைக் கொண்டவன். அதாவது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்’ என்பது பொதுவான பொருள். கார்த்திகை மாதம் #தாமோதர_மாதம் என்று அழைக்கப் படுகிறது. இந்த

மாதத்தில் ஒரு பிரத்தியேக வழிபாடு உள்ளது. தாய் யசோதா பகவான் ஸ்ரீகிருஷ்ணனை உரலில் கட்டிபோடும் படத்திற்கு ஆரத்தி காட்ட வேண்டும். நெய் விளக்கு ஏற்றி தினமும் புதுப்புது அகல்விளக்கில் தான் ஆரத்தி காட்ட வேண்டும். ஒருவர் காட்டிய விளக்கில் மற்றவர்கள் காட்டக்கூடாது.
கிருஷ்ண விக்ரகத்துக்கு

அல்லது படத்திற்கு பாதத்தில் 4 முறையும் இடுப்பிற்கு 2 முறையும், முகத்திற்கு 3 முறையும், பிறகு பகவானின் முழு உருவத்திற்கு 7 முறையும் ஆரத்தி காட்டினால் நாம் பல கோடி பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் போகும். நம் வீட்டிலேயே செய்யலாம்.

கல்பகோடி ஸஹஸ்ராணி பாதகானி பஹீனி அபி
நிமி

ஷார்த்தேன் தீபஸ்ய விலயம் யாந்தி கார்த்திகே

பல கோடி ஜன்மங்களில் சேர்த்து வைத்துள்ள பாவங்கள் அனைத்தும் இந்த கார்த்திகை அல்லது தாமோதர மாதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ண லீலையான தாமோதர லீலைக்கு நெய் விளக்கு காட்டுவதினால் அழிந்துவிடும் -(ஸ்கந்த புராணம்)

கார்த்திகைகே அகண்ட தீபம் யோ
ததாதி

ஹரி சன்னி தௌ
திவ்ய காந்தி விமானாக்ரே ரமதே ஸ ஹரே புரே

எவனொருவன் பகவான் ஹரியின் கோயிலில் தொடர்ந்து இந்த தாமோதர மாதம் முழுவதும் நெய் விளக்கு ஏற்றுகிறானோ அவன் பிரகாசிக்கும் விமானத்தில் ஏறி அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் (ஹரியின்) இருப்பிடத்தை அடைவது உறுதி
--(பத்ம புராணம்)

நல்ல விஷயம், கோவிலிலோ வீட்டிலோ இந்த எளிய பிரார்த்தனையை செய்து நம் பாவங்களை தொலைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling