கபிலன் Profile picture
பெரியாரிய மாணவன் | ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Oct 27, 2022, 11 tweets

பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பெரியாரின் தம்பிகள் பெரியாரை விட்டு போன போது இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில்1/1

முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும் அசாத்திய திறமைசாலி நாடகம் போடும் இடத்தில் நாத்திக கருத்துக்கு எதிராக ரவுடிகள் வந்து கலவரம் செய்தால் தனித்து நின்று அவர்களை துவம்சம் செய்து விட்டு அதே வேகத்தில் மேடையேறி வசனங்களை பேசுவார் 1/2

அவரின் ராமாயண நாடகம் ஒன்று பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் நடந்தது வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல ராமாயண கதைகளை தன் நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து எதிரிகள் வாயை அடைத்தார் ராதா 1/3

என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம் அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதை கண்டிப்பாய் அறியவும் என்று விளம்பரத் தட்டி 1/4

ஒன்றை அரங்கத்தின் வெளியே வைத்து விட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார் அப்படியே பெரியார் மீது விழுந்த கல்லும் செங்கல்லும் அவர் மீதும் விழுந்தது ஒரு முறை 1/5

கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா அப்போது ராமன் வேடத்தை கலைக்க வேண்டும் என்று கூறிய காவல்துறையினரிடம் வேடம் கலையாது வில் கீழே விழாது, கலசம் கீழே வராது என்று கூறி ஒரு கையில் கள்ளுக் கலயமும் மறு கையில் சிகரெட்டுமாய் காவல் நிலையம் வரை நடந்தார் 1/6

கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே என்று திரை துறையில் இருந்து மிக தைரியாமாக கூறியவர் ராதா ஒருவரே தன் பெயரில் ஒரு மன்றம் திறக்க போவதாக பெரியார் கூறியபோது அதை கூச்சத்துடன் மறுத்தார் ராதா 1963ம் வருடம் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தை திறந்து வைத்தார் பெரியார் 1/7

அதில் பெரியார் கூறியது என்ன என்றால் மற்ற நடிகர்களுக்கு புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இந்த மன்றத்தை நான் திறந்து வைக்கிறேன் என்றார் பெரியார்
நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகளுக்காக இதை விட அதிக தொல்லைகள் வந்தாலும் ஏற்று கொள்வேன் 1/8

அதில் போவது எனது உயிராக இருந்தாலும் சரி அதற்கு நான் எப்போதுமே தயார் என்று 1964ஆம் ஆண்டு பகுத்தறிவு மலரில் ராதா எழுதினார் இப்படி சாகும் வரை பெரியாரின் பெரும் தொண்டராக சுயமரியாதை வீரனாக இருந்தார் பெரியாரின் கருத்தியல் கலை வடிவம் அவர் 1/9

நான் இராமாயண ஆய்வு செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவால் பத்திரிகையால் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடம் பரப்ப முடியாமல் போய் விட்டது இப்போது இராதா அவர்கள் அதை நாடகரூபமாக்கி நடிப்பது மிகுந்த பாராட்டத்தக்கது என பெரியார் வாழ்த்தினார் 1/10

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling