K. RAJESH Profile picture
Economist. NISM & CRISIL Certified Wealth Manager. Founder - Skyman Investments

Nov 23, 2022, 22 tweets

முதல் முறையாக வீட்டுக்கடன் வாங்கப் போறீங்களா? இந்த இழையைப் படித்துவிட்டு பின்னர் தொடங்குங்கள்.

இழையை படிக்கும் முன், எனது வீட்டுக்கடன் தொடர்பான முந்தைய இழையை படித்துவிட்டு வரவும்.



மேலதிக விபரங்களுக்கு: wa.me/message/GCVBKT…

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமது சிறு வயதிலிருந்தே நம் எல்லோருடைய மனத்திலும் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் விரும்பும் மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

கடந்த காலத்தில் மக்கள் தங்கள் முதல் வீடுகளை வாழ்க்கையில் மிகவும் தாமதமாக வாங்கினார்கள். ஆனால் தற்போதைய தலைமுறையோ, வீட்டுக் கடன்களைப் பெறுவது மிகவும் எளிதாக இருப்பதால், தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே வீடு வாங்க முனைகின்றனர். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உண்மையில், இது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றை விரைவாக அடைய உதவுகிறது. ஆனால் பெரும்பாலும் "வாடகை கொடுப்பதை விட நம் வீட்டுக்கு EMI கட்டிவிட்டுப் போகலாம்" என்கிற எண்ணம் தான் பெரும்பான்மையான மக்களை சொந்த வீடு வாங்குவதற்குத் தள்ளுகிறது.

வீட்டுக் கடனைப் பெறுவது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால்…
நியாயமாகச் சொல்வதானால், வீட்டுக் கடன் விகிதங்கள் மிகவும் குறைந்துவிட்டன (சுமார் 6.5% மற்றும் வருமான வரி exemptionsக்குப் பிந்தைய விகிதங்களைப் பார்த்தால் இன்னும் குறைவாக இருக்கும்) கடன் விகிதங்கள் மிகக் குறைவாக இருப்பதால்,

ஒரு வீட்டை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருந்தது.

ஆனால் இப்போது, ​​விஷயங்கள் மாறி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பணவீக்க காரணங்களுக்காக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் புதிய வீட்டுக் கடன் விகிதங்கள் சுமார் 2% வரை உயர்ந்துள்ளன. குறுகிய காலத்தில், வட்டி விகிதங்கள்

மீண்டும் உயரும் வாய்ப்பு அதிகம்.

உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு ₹50 லட்சம் வீட்டுக் கடன் 6.75% வட்டியில் வாங்கினால் நீங்கள் செலுத்த வேண்டிய EMI ₹38,018. மொத்த கடன் காலத்தில் நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை ₹41–42 லட்சம். அதே வீட்டுக்கடன் நீங்கள் 8.5% வட்டிக்கு வாங்கினால்,

₹43,491 EMI செலுத்த வேண்டி வரும். மொத்த கடன் காலத்தில் நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை ₹54–55 லட்சம் வரும். வெறும் 2% வட்டி உயர்வால், நீங்கள் தோராயமாக ₹13 லட்சங்கள் அதிகமாக செலுத்துகிறீர்கள். எனவே, வீடு வாங்குவதற்கு கடன்பெற்று, அதனை அடைப்பது முன்பு போல் எளிதல்ல.

இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தத்தைப் புறக்கணித்து, உங்கள் முதல் வீட்டை எப்போது வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வீர்கள்?

உங்கள் முதல் வீட்டை வாங்க நீங்கள் தயாரா என்பதை எப்படி அறிவது?

உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு வீட்டை வாங்குவதற்கான இந்த முடிவு பெரும்பாலும் இரண்டு காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்:
1) நீங்கள் எவ்வளவு பணத்தை down payment ஆக செலுத்த முடியும்?
2) உங்களால் எவ்வளவு தொகை EMI ஆக செலுத்த முடியும்?

1. Down Payment
நீங்கள் வீட்டுக் கடனைப் பெறும்போது, ​​down payment ஆக குறைந்தபட்சம் சுமார் 20% செலுத்த வேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்ப்பார்கள். எனவே, நீங்கள் ₹75 லட்சத்தில் வீடு வாங்க விரும்பினால், உங்கள் பங்காகக் ₹15 லட்சம் (20%) down payment தேவைப்படும்.

என்னதான் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களை வீடு வாங்கச் சொல்லி தூண்டினாலும், அதனை அடைக்க நீங்கள் தான் பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த நிலையில், உங்களால் ₹15 லட்சம் தர முடியாமல், வெறும் ₹12 லட்சம் மட்டுமேதர முடிந்தால், வங்கி உங்களுக்கு வீட்டுக் கடனாக சுமார் ₹48

லட்சத்தை மட்டுமே வழங்கும்.இதை வைத்து கணக்கு போட்டால், வீட்டுக் கடனுக்கான உங்கள் பட்ஜெட் ₹60 லட்சமாக இருக்க வேண்டும் (நீங்கள் விரும்பும் ₹75 லட்சமாக இருக்கக்கூடாது).

2. நீங்கள் வாங்கக்கூடிய EMI
உங்கள் மாதாந்திர EMI (அனைத்தையும் சேர்த்து) உங்கள் மாத வருமானத்தில் 40%க்கு சமமாகவோ

அல்லது குறைவாகவோ இருந்தால் மட்டுமே வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்குவார்கள். நீங்கள் ஒரு மாதத்திற்கு ₹80,000 சம்பாதித்து, ₹75 லட்சம் வீட்டில் 20% முன்பணமாக ₹15 லட்சத்தை down payment செய்ய முடியும் என்றாலும் கூட, நீங்கள் வங்கிகளின் 40% EMI/வருமான விதியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மாதம் ₹80,000 சம்பளத் தொகையில், 40%, மாதத்திற்கு ₹32,000 வரும். அந்த EMIல், 8% வட்டி விகிதம் மற்றும் 20 ஆண்டு கடன் ₹40 லட்சம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். எனவே, இந்த ₹40 லட்சம் கடன் மற்றும் ₹15 லட்சம் முன்பணம் செலுத்தினால் கூட உங்களால் ₹75 லட்சம் வீடு வாங்க முடியாது.

என்ன? இப்போவே கண்ண கட்டுதா?

"அப்போ நான் என்னதான் செஞ்சி வீடு வாங்குறது?" ன்னு கேக்குறீங்க தானே?

ரெண்டே சாய்ஸ் தான் இருக்கு.

அதிகமாக முன்பணம் செலுத்துங்கள்
குறைந்த விலையில் ஒரு வீட்டை வாங்குங்கள்.

தம்பதிகள் இருவரும் வேலை செய்யும் பெரும்பாலான குடும்பங்களில் joint loan பெறலாம்.

இதனால் அதிக விலையுள்ள வீட்டை நீங்கள் இருவரும் சேர்ந்து வாங்களாம். இந்த சிக்கலைச் சமாளிக்க இது மற்றொரு பொதுவான வழி.

சரி. மறுபடியும் முதல்லேர்ந்து வருவோம். ​​நீங்கள் வீட்டுக் கடன் பெறலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் மற்ற விஷயங்கள் என்ன?

இதெல்லாம் நீங்க யோசிக்கணும்.

1) ஒருபோதும் உங்கள் சேமிப்புகள் அனைத்தையும் down paymentல் செலவிடக்கூடாது. ஏன்னா, காப்பீட்டின் கீழ் இல்லாத ஏதாவது அவசரத் தேவைகளுக்கு உங்களிடம் கையிருப்பாக கொஞ்சம் பணம் இருக்க வேண்டும்.

2) சிறிது காலத்திற்கு உங்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்கள் வருமானம் நின்றுவிடும். ஆனால் EMIகள் தொடரும். எனவே, இந்த அவசரக் கால சேமிப்புத் தொகை உங்களுக்கு கட்டாயம் தேவை.

3)நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் அல்லது நீங்கள் வாங்கும் அபார்ட்மெண்ட் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், EMI மட்டுமின்றி, அந்த வீடு உங்களுக்குச் சொந்தமாகும்

வரை நீங்கள் தற்போது வசித்துக் கொண்டிருக்கும் வீட்டுக்கு செலுத்த வேண்டிய வாடகையைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலானோர்க்கு, சொந்த வீடென்பது, ஒரு பாதுகாப்பான உணர்வை அளிக்கின்றது. வாழ்க்கையில் சாதித்த ஒரு நிறைவையும், தனது குடும்பத்திற்காக ஒரு சொத்தை சேர்த்து வைக்கின்றோமென்ற

மன மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. மனம் சார்ந்த மகிழ்ச்சிகள் எவ்வளவு இருந்தாலும், மேற்சொன்ன யோசனைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மட்டுமே வீடு வாங்குங்கள். இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்பதற்காக எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம்.

சொல்றவங்க சொல்லிட்டு போய்டுவாங்க. உங்கள் EMI-களைஅவங்க கட்டப் போறதில்ல. நீங்க தான் கட்டணும். எனவே, உங்கள் குடும்பத்தாருடன் கலந்து பேசி, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யுங்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்/செய்வார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.

#வாழ்கபணமுடன்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling