அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Nov 23, 2022, 10 tweets

#செளந்தர்ய_லஹரி
#உருவான_வரலாறு
ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார். கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம், பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள், கீழே பூலோகத்தில் இருந்து நம் கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்து

இருக்கிறது. இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று பேசிக் கொண்டார்கள். திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர். அவரின் இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான்

அவர் பிடித்தார். மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார். நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி,

பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார். அம்பாளை நோக்கி, அம்மா இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது. இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார்.
எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார். அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே. என்னைப் பார்த்து

தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது. நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள்” என்றாள். முதல் 41 ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்து இருந்தார்.அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59

ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார். இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி! முதல் 41 ஸ்லோகங்கள் மந்திர, யந்திர, தந்திர, தத்துவ ரகசியங்களைத் தெரிவிக்கின்றன. மீதி உள்ள 59 ஸ்லோகங்களில் மிகுதியான பாகம் அம்பாளின் சௌந்தர்யத்தை துதிக்கும் வர்ணனை வடிவில்

உள்ளது. சௌந்தர்ய லஹரி வியாக்கியானங்களில் மனோரமா வியாக்கியானம், அப்பய்ய தீக்ஷிதரின் வியாக்கியானம், ஸ்ரீகண்ட தீக்ஷிதர் உரை, சுதா வித்யோதினி, ரங்கதாச வியாக்கியானம் போன்ற பல உள்ளன. சௌந்தர்ய லஹரியைக் கேட்கையில் ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இதனை எழுதுவதற்கு ஆதி சங்கரருக்கு அவருடைய பரம

குருவே ஸ்பூர்த்தி அளித்தார்.
சிகரிணீ என்றால் பர்வதம் என்று பொருள். அதே போல் இதன் ஸ்லோகங்கள் கூட மலை மேலே ஏறுவது போலவே இருக்கும். சிகரிணீ விருத்தம் கூட ஆரோஹண வரிசையில் நடப்பது போலவே இருக்கும். உண்மையில் யோக பரிபாஷையில் பர்வதம் என்றால் சுஷும்னா நாடியின் இறுதி பாகம் அல்லது சகஸ்ரார

கமலம் என்று பொருள். இன்னொரு உட்பொருள் என்னவென்றால் அம்பாள் பர்வத ராஜ புத்ரி. அம்பாளை பற்றிய ஸ்தோத்திரம் சிகரிணியில் படைக்கப்படுவது சிறப்பு. இந்த சந்தஸ்ஸில் அம்பாள் எப்படி இருப்பாள் என்றால், பிறந்த வீட்டில் பெண் குழந்தை எத்தனை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பாளோ அப்படி இருப்பாளாம்.


சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling