அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Nov 26, 2022, 12 tweets

#தமிழகத்திலுள்ள_புகழ்பெற்ற_10_அம்மன்_கோவில்கள்
பெண் தெய்வங்களை அதிகம் வணங்கும் நாடு நம் நாடு. இங்குள்ள #சக்தி_வாய்ந்த 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

#மீனாட்சி_அம்மன்_கோவில்_மதுரை
மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இக்கோவில் வைகை

ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் தேவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது மற்றும் பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.

#காமாட்சி_அம்மன்_கோவில்
#காஞ்சிபுரம்
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் காமாட்சி அருள் பாலிக்கிறாள்.

#சமயபுரம்_மாரியம்மன்_கோவில்
திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடை

பெறும் பூச்சொரிதல் என்னும் நிகழ்வு மிகவும் பிரபலம். மாசி மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரபலம். ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் செவ்வாய் அன்று சித்திரை தேரில் பவனி வந்து அம்மன் அருள்

பாலிப்பதை பார்க்க 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்.

4. #புன்னை_நல்லூர்_மாரியம்மன்
#கோவில்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். இங்கு அம்மன் துர்க்கை,

மாரியம்மன் அதாவது முத்துமாரி எனவும் அழைக்கப்படுகிறார். #மாசாணியம்மன்_திருக்கோவில்
#பொள்ளாச்சி
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, ஆனைமலையில் அமைந்துள்ளது. இங்கு தை மாதத்தில் 18 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில்

காட்சி தருவதால் மயானசயனி என்று அழைக்கப் படுகிறாள்.

#பண்ணாரி_மாரியம்மன்_கோவில்
ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்புவாக அருள் பாலிப்பதால் விபூதி கிடையாது. புற்று மண்தான் பிரசாதமாக தரப்படுகிறது. இங்கு 20 நாள் கொண்டாடப்படும் பங்குனி குண்டம்

திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

#பகவதி_அம்மன்_கோவில்
#மண்டைக்காடு
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கோவில் இது. 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டி கொண்டிருக்கும் புற்றுதான்

பகவதி அம்மன். இங்கு நடைபெறும் மாசித்திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்.

#ஸ்ரீபத்ரகாளி_அம்மன்_கோவில், #கொல்லங்கோடு
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் தூக்க

நேர்ச்சை மிகவும் பிரபலம். தூக்க நேர்ச்சையில் 45 அடி உயர தூக்க வில்லில் குழந்தையை சுமந்தபடி கோயிலை வலம் வருவார்கள். இங்கு அம்மனுக்கு இரண்டு கோவில்கள் இருப்பது சிறப்பு.

#ஸ்ரீ_அங்காள_பரமேஸ்வரி_அம்மன்
#மேல்மலையனூர்
விழுப்புரம் மாவட்டத்தில உள்ளது. இங்குள்ள தேவியை புற்று தேவி

என்றே கூறுகிறார்கள். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு வருகின்றனர். அங்காள பரமேஸ்வரிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் இருந்தாலும் மேல்மலையனூர் ஆலயமே மிக முக்கியமான ஆலயமாகும்.
#தேவி_கன்னியாகுமரி_அம்மன்_கோவில்
தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில்

முக்கடல்கள் சங்கமிக்கும் குமரி கடற்கரையின் அருகில் அமைந்து உள்ளது. இங்குள்ள அம்மன் கன்னி அம்மன். 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகு பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது.
பெண் தெய்வங்களையும் பெண்களையும் போற்றி வணங்குவோம்.
ஓம் ஸக்தி!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling