அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Nov 30, 2022, 13 tweets

#திருக்கூடலூர்_வையங்காத்தபெருமாள் #ஜெகத்ரட்சகன்
மூலவர்: #வையங்காத்தபெருமாள் (#ஜெகத்ரட்சகன்) #உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்

திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதே போல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிறிய கிராமம் #ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே

வழங்கப்படுகிறது. திருமால் #வராஹ அவதாரமெடுத்துப் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து #ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் பாடலும் சான்று காட்டும். பூமாதேவியை காக்கும் பொருட்டு வராஹ

அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சி கொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர். ஒரு சமயம் அம்பரீஷன் என்னும் மன்னன் மிகச்சிறந்த திருமால்

பக்தனாகி கடும் தவம் புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன் தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். அவன் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர் ஏகாதசி அன்று அம்பரீஷனின் இடம் வந்து அவரும் துவாதசி பாரணம் செய்ய வருவதாகச் சொல்லி ஆற்றில் குளிக்க சென்றவர் பாரணை நேரம்

முடியும் வரை திரும்பி வரவில்லை. ஏலாரசி விரத மகிமை கிடைக்க அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி பாரணையை முடித்துக் கொண்டு அவர் வந்ததும் உணவருந்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நீர் அருந்தி பாரணையை இவர் வரும் முன்னே முடிக்கும் கொண்டதை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட துர்வாசர்

கோபம் கொண்டு அம்பரீஷுக்கு சாபம் கொடுக்க, மஹா விஷ்ணு தன் பக்தனுக்குக் கேடு நேர்வதைக் கண்டு பொறுக்காமல் துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனது குணத்தை

நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது இத்தலத்தில்தான். பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னி ஆற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான் அம்பரீஷன். அம்பரிஷனுக்கு அருளியதால்

#அம்பரிஷ_வரதரென்றும் #வையங்காத்த_பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை. ஒரு சமயம் #பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து

மண்மேடாகி விட்டது. கோபுரத்தையும், மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும் பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச் சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின்

சேரியில் அமர்ந்தனர். வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில் நிலா முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த #ராணிமங்கம்மாளின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக் கொள்ள தனது தளபதி கிருஷ்ண ராஜுநாயக்கருடன் படை

பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு அழிந்த கோவிலைப் பார்வையிடும் போது, சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பவன் ஓடிவந்து இறைவன் தன் சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ மரியாதையுடன் வழிபாடு செய்து தெய்வங்களை பெற்றுக் கொள்ள, எவ்விடத்தில் கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ, சேரிக்கு அருகில்

பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால் உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (#ஆடுதுறைகிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது.
சென்று தரிசிப்போம். அருள் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling