புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமெஸானில் வெளியாகியிருக்கிறது 'வதந்தி'.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவனை இழந்த ஆங்கிலோ - இந்தியப் பெண்ணான ரூபி (லைலா), தன் மகள் வெலோனியை (சஞ்சனா) மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கிறாள்.
ஆனால், ஒரு நாள் வெலோனியின் சடலம் வேறெங்கோ கிடைக்கிறது. வெலோனிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குடிகார இளைஞன், அவளைக் காதலித்த இளைஞன், ஒரு காதாசிரியர் (நாசர்), நடுக்காட்டில் வசிக்கும் மூன்று பேர் என சந்தேக வலை பலர் மீது படிகிறது.
இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் துணை ஆய்வாளரான விவேக் (எஸ்.ஜே. சூர்யா). வழக்கு ஒரு கட்டத்தில் காவல்துறையால் முடித்துவைக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், தொடர்ந்து உண்மையான கொலைகாரனைத் தேடுகிறார் விவேக். அது அவருக்கு ஒரு obsession ஆகவே மாறிவிடுகிறது.
இதனால் குடும்பத்திலும் வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். முடிவில் கொலைக்கான காரணத்தையும் கொலைகாரனையும் அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக் கதை.
குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதைவிட, ரஷோமான் பாணியில் பல்வேறு நபர்களின் பார்வையில் ஒரு கொலையைப் புரிந்துகொள்ள.....
வைப்பதுதான் இயக்குநரின் நோக்கம்போலவே கதை நகர்கிறது.
ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, ஏகப்பட்ட சுவாரஸ்யமான திருப்பங்களோடு கதை நகர்கிறது. மொத்தமுள்ள எட்டு எபிசோட்களில் ஏழாவது எபிசோடைத் தவிர மற்ற எபிசோட்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்கின்றன.
ஆனால், இந்த படத்தில் வெலோனி குறித்த, ரூபி குறித்த சில சித்தரிப்புகள் மிக sickஆக இருக்கின்றன. குறிப்பாக, ஏழாவது எபிசோடில் வெலோனி குறித்த காட்சிகள், அதற்கு முன்பு அந்தத் தொடர் ஏற்படுத்தியிருந்த பாசிட்டிவான எண்ணத்தையே மாற்றும் வகையில் இருக்கின்றன.
மாநாடு படத்திற்குப் பிறகு இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாவது எபிசோடில் மனைவியுடன் அவர் பேசும் காட்சி அட்டகாசம். தொடரில் இவரைவிட சிறப்பாக நடித்திருப்பது வெலோனியாக வரும் சஞ்சனா. லைலா, நாசர் ஆகியோரும் தொடரில் உண்டு.
வீக் எண்டிற்கு நல்ல சாய்ஸ்தான். மொத்தம் எட்டு எபிசோட். ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக முக்கால் மணி நேரம். ட்ரை பண்ணுங்க.
#PrimeVideo #Vadhandhi
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.