புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமெஸானில் வெளியாகியிருக்கிறது 'வதந்தி'.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவனை இழந்த ஆங்கிலோ - இந்தியப் பெண்ணான ரூபி (லைலா), தன் மகள் வெலோனியை (சஞ்சனா) மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கிறாள்.
ஆனால், ஒரு நாள் வெலோனியின் சடலம் வேறெங்கோ கிடைக்கிறது. வெலோனிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குடிகார இளைஞன், அவளைக் காதலித்த இளைஞன், ஒரு காதாசிரியர் (நாசர்), நடுக்காட்டில் வசிக்கும் மூன்று பேர் என சந்தேக வலை பலர் மீது படிகிறது.
இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் துணை ஆய்வாளரான விவேக் (எஸ்.ஜே. சூர்யா). வழக்கு ஒரு கட்டத்தில் காவல்துறையால் முடித்துவைக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், தொடர்ந்து உண்மையான கொலைகாரனைத் தேடுகிறார் விவேக். அது அவருக்கு ஒரு obsession ஆகவே மாறிவிடுகிறது.
இதனால் குடும்பத்திலும் வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். முடிவில் கொலைக்கான காரணத்தையும் கொலைகாரனையும் அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக் கதை.
குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதைவிட, ரஷோமான் பாணியில் பல்வேறு நபர்களின் பார்வையில் ஒரு கொலையைப் புரிந்துகொள்ள.....
வைப்பதுதான் இயக்குநரின் நோக்கம்போலவே கதை நகர்கிறது.
ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, ஏகப்பட்ட சுவாரஸ்யமான திருப்பங்களோடு கதை நகர்கிறது. மொத்தமுள்ள எட்டு எபிசோட்களில் ஏழாவது எபிசோடைத் தவிர மற்ற எபிசோட்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்கின்றன.
ஆனால், இந்த படத்தில் வெலோனி குறித்த, ரூபி குறித்த சில சித்தரிப்புகள் மிக sickஆக இருக்கின்றன. குறிப்பாக, ஏழாவது எபிசோடில் வெலோனி குறித்த காட்சிகள், அதற்கு முன்பு அந்தத் தொடர் ஏற்படுத்தியிருந்த பாசிட்டிவான எண்ணத்தையே மாற்றும் வகையில் இருக்கின்றன.
மாநாடு படத்திற்குப் பிறகு இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாவது எபிசோடில் மனைவியுடன் அவர் பேசும் காட்சி அட்டகாசம். தொடரில் இவரைவிட சிறப்பாக நடித்திருப்பது வெலோனியாக வரும் சஞ்சனா. லைலா, நாசர் ஆகியோரும் தொடரில் உண்டு.
வீக் எண்டிற்கு நல்ல சாய்ஸ்தான். மொத்தம் எட்டு எபிசோட். ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக முக்கால் மணி நேரம். ட்ரை பண்ணுங்க.
சிந்துச் சமவெளி குறித்த புதிய புத்தகமான Ahimsa: 100 Reflections on the Harappan Civilization குறித்த முந்தைய பதிவில், 25 தொடர் பதிவுகள் இருந்தாலும், 15க்கு மேல் அவை பதிவாகவில்லை. அதன் தொடர்ச்சியை இன்னொரு தொடர் பதிவாக இடுகிறேன்.
(1/15)
வன்முறை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பரப்பில் இத்தனை ஆண்டுகாலமாக ஒரு நாகரீகம் நிலைத்திருந்தது எப்படி? "ஒட்டுமொத்த நாகரீகமும் துறவிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம். இந்தத் துறவிகள், வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
(2/15)
இவர்கள் வன்முறையை நாடாத, சமூக ரீதியான கட்டுப்பாடுகளில் சிக்காதவர்களாக இருந்திருக்கலாம்" என்கிறார் தேவ்தத்.
சுமேரிய நாகரீகத்திலும் எகிப்திய நாகரீகத்திலும் செல்வத்தைக் குவிப்பதன் மூலமாக அதிகாரம் கிடைத்தது. ஹரப்பாவில், அவற்றைத் துறப்பதன் மூலம் ஒரு அதிகாரம் கிடைத்திருக்கலாம்.
(3/15)
4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்களும் சுமேரியர்களும் 'லாபிஸ் லாஸுலி' எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன.
(1/25)
அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பெர்ஷிய வளைகுடா வழியாக, எகிப்தையும் மெசபடோமியாவின் கோவில்களையும் சென்றடைந்ததற்கு ஒரே காரணம்தான் இருந்தது. அது ஹரப்பா நாகரீகம்.
ஹரப்பா நாகரீகத்தால் இதை எப்படி சாதிக்க முடிந்தது?
(2/25)
அதற்குக் காரணம், அந்த நாகரீகம் போர்த் தளபதிகளாலோ, மன்னர்களாலோ வழிநடத்தப்பட்ட ஒரு சமூகமல்ல; மாறாக செல்வச் செழிப்பை வெளிக்காட்டாத, கட்டுப்பாடான வர்த்தகர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு சமூகம் என்கிறது சமீபத்தில் வெளிவந்த Ahimsa: 100 Reflections on the Harappan Civilization நூல்.
(3/25)
நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளிவந்த பழங்கால Docudramaகளில், அலெக்ஸாண்டர்: தி மேக்கிங் ஆஃப் எ காட், குயின் க்ளியோபாட்ரா ஆகியவை மிக முக்கியமானவை. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் மற்றொரு docudrama தொடர்தான் Testament: The Story of Moses.
(1/8)
பாரோக்கள் ஆளும் எகிப்தில் துவங்குகிறது கதை. மோசஸ் பிறந்தது, பாரோக்களின் அரண்மனையில் வளர்ந்தது, பிறகு தனது எகிப்தியர் ஒருவனைக் கொலைசெய்ததால் தேடப்பட்டு, எகிப்திலிருந்து வெளியேறி மீடியான் என்ற இடத்தில் வசிப்பது, அங்கே சினாய் மலையில் கடவுளைச் சந்திப்பது,...
(2/8)
கடவுளின் ஆணையால் பாரோவிடம் அடிமையாக உள்ள தனது மக்களை விடுவிப்பது என்ற கதையை மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆபிரஹாமிய மதங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவர் மோசஸ். டோரா, விவிலியம், குரான் ஆகிய மூன்று புனித நூல்களிலும் மோசஸின் கதை இருக்கிறது.
(3/8)
சிந்துச் சமவெளி குறியீடுகள் சொல்வது என்ன? விடுபடும் புதிர்
-------------------------------
சிந்துச் சமவெளிப் பகுதியில் கிடைத்த குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது நூறாண்டுகளுக்கும் மேலாகவே புதிராகவே இருந்த நிலையில், ஆய்வாளர் ஒருவர் அந்த குறியீடுகளைப் படித்துள்ளார்.
(1/10)
சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளைப் பொறுத்தவரை அவை ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது மொழியல்லாத குறியீடுகளா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மென்பொருள் பொறியாளரான பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இவை வணிகக் குறியீடுகள் என்று கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார்.
(2/10)
இது தொடர்பாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை 'Semantic scope of Indus inscriptions comprising taxation, trade and craft licensing, commodity control and access control: archaeological and script-internal evidence' நேச்சர் குழும இதழில் வெளியாகியுள்ளது.
(3/10)nature.com/articles/s4159…
ஜவஹர்லால் நேரு: இந்திய வானின் துருவ நட்சத்திரம்
---------
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 30 லட்சம் பேரைக் காவுகொண்ட பஞ்சத்தின் நினைவுகூட ஆறவில்லை. 1950. முதல் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டது. விவசாயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்தார் முதல் பிரதமர் நேரு.
(1/25)
மூன்று மிகப் பெரிய அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டது: 1. பக்ரா நங்கல், ஹிராகுட், நாகார்ஜுன சாகர். இப்போது பக்ரா நங்கல் அணை ஒரு கோடி ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. 1,500 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
1949ல் அமெரிக்காவில் உள்ள...
(2/25)
மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு விஜயம் செய்த நேரு, அதே போன்ற உயர்கல்வி அமைப்புகளை இந்தியாவில் உருவாக்க நினைத்தார். இதில் மௌலானா ஆஸாத்தின் ஊக்கமும் சேர்ந்துகொள்ள ஐஐடிக்கள் பிறந்தன. நேருவின் காலத்திலேயே காரக்பூர், பம்பாய், மெட்ராஸ், கான்பூர்,...
(3/25)
ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும், யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென்று சாதாரண பொதுமக்களிடம், அந்த பட்ஜெட் பற்றிக் கேட்டால் அறியாமையே பதிலாகக் கிடைக்கும். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வேறு மாதிரி இருந்தது.
(1/9)
இந்தியாவின் நிதியமைச்சராக பதவியேற்றிருந்த Dr. மன்மோகன் சிங் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்திருந்ததற்கு அடுத்த நாள். மதுரை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இருந்த தேநீர் கடைகளில்கூட இந்த பட்ஜெட்டைப் பற்றி, செய்தித் தாள்களில் வந்த தகவல்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(2/9)
அந்த அளவுக்கு அந்த பட்ஜெட் பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது.
வி.பி. சிங் தலைமையிலான அரசு, சந்திரசேகர் தலைமையிலான அரசு என இரு அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்திருந்தன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார். நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது.
(3/9)