அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Dec 9, 2022, 19 tweets

#பழனி_தண்டாயுதபாணி_திருக்கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிறு குன்றின் மேல் தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டது

முருகனின் விக்ரகம் நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப் பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் சேர்ந்தது. இவை ஒன்று சேர்ந்து மருந்தாக அமைகிறது. இந்த நவபாஷாண விக்ரகம் மீன்களை போன்று செதில்களை கொண்டு உயிர்ப்புடன் இருந்து வியர்ப்பது ஓர்

அதிசயம். வெப்பத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் விக்ரகத்தின் மீது முழுவதுமாக சந்தனக்காப்பு சத்தப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் விபூதி என்பவை. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய

படுகிறது. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம் ஆகும். தவ வாழ்க்கை நாடுபவர்களுக்கு ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கு

சுலபத்தில் வந்துதவுவார் முருகன். அப்படி அந்த முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில்
கொண்டிருக்கும் புனித தலம் தான் பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில். இவர் கையில் உள்ள தண்டம் மிகவும் அருள் வாய்ந்தது. முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி

கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் ஞானாசிரியனாக இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.

இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. #திருப்புகழ் எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய #அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார். பழனி மலைக்கு செல்லும் வழியில் #இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு 

அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த இடும்பன் எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் சக்திகிரி, சிவகிரி என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது இந்த பழனி மலையில் தான்

தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இருக்கும் முருகபெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது. முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் பக்தனானான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை

உண்டானது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரமா உள்ள மலையை 690 படிகள் எறிகடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. இங்கு கோவில் கொண்டு பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு

பெயர் பெற்ற ஊராகும். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த

கோயிலில் தங்கத் தேர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக, தொழில் செழிக்க, செல்வம் பெருக இங்கு அதிகளவில் பிரார்த்தனைகள் செய்கின்றனர். முருகனுக்கு காவடி எடுத்தும், பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்வித்தும், அலகு குத்தியும்

முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துப் படுகிறது.
திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ் பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின்

உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு. மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு தண்டாயுதபாணி வீற்றிருப்பதால், மலையாள பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் இருக்கும் கோவில்களில்

கோடிக்கணக்கில் பக்தர்களின் காணிக்கையை பெரும் கோவிலாக பழனி மலை முருகன் கோவில் இருக்கிறது. இங்கிருக்கும் போகர் சித்தரின் சமாதியில் வழிபடுவதால் இன்றும் சூட்சம வடிவில் இந்த பழனி மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போகர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்தருள்கிறார். ஆன்மீக ஞானம் பெற,

திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் மேன்மை போன்றவற்றிற்காக பக்தர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
பழனி மலையில் இருக்கும் தண்டாயுதபாணி கோவில் உட்பட அத்தனை கோவில்கள், சந்நிதிகளும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை திறந்து

இருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
பழனி
திண்டுக்கல் மாவட்டம் – 624 601
தொலை பேசி எண்
4545 242293
4545 242236
ஓம் சரவணபவாய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling